உள்ளூர் செய்திகள்

மாநில செஸ் போட்டியில் சென்னை, திருவள்ளூர் அபாரம்

சென்னை: மாநில செஸ் போட்டியில், சென்னை, திருவள்ளூர் அணிகள் முதலிடங்களை கைப்பற்றி அசத்தின.திருவள்ளூர் மாவட்ட சதுரங்க சங்கம், யுக் ஷசாரா சதுரங்க அகாடமி இணைந்து, மாநில அளவிலான சதுரங்க போட்டியை, திருவேற்காடில் உள்ள ஆர்.எம்.கே., பள்ளியில் நேற்று முன்தினம் நடத்தின.போட்டியில், மாநிலம் முழுதும் இருந்து, 623 சிறுவர், சிறுமியர் பங்கேற்றனர்.'பிடே' விதிப்படி, 'சுவிஸ்' அடிப்படையில் போட்டிகள் நடந்தன. போட்டியை, பள்ளியின் ஒருங்கிணைப்பாளர் சிரீஷா துவங்கி வைத்தார்.மாணவரில் 7 வயது பிரிவில், சென்னையைச் சேர்ந்த தாருஷ்; மாணவியரில் திருவள்ளூர் நிதர்ஷனா ஆகியோர் முதலிடங்களை கைப்பற்றினர்.அதே போல, ஒன்பது வயது பிரிவில், திருவள்ளூர் முகமது சாத், மாணவியரில் சென்னையைச் சேர்ந்த கைலாஷினி சரவணப்பிரபு; 11 வயது பிரிவில் மாணவரில் சென்னை சாய் சரண், மாணவியரில் திருவள்ளூர் சாய் ஹரிணி ஆகியோர் வெற்றி பெற்றனர்.மாணவர் 15 வயது பிரிவில், திருவள்ளூர் ராகவ் சேஷாச்சாரி, மாணவியரில் திருவள்ளூர் மகிஷா பிரதாப்; 25 வயது பிரிவில், மாணவரில் ஹரிஷ் கார்த்திக், மாணவியரில் சென்னை நிர்மலா ஆகியோர் முதலிடங்களை கைப்பற்றினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்