உள்ளூர் செய்திகள்

மதிய உணவு சாப்பிட்ட 15 மாணவர்கள் பாதிப்பு

கொப்பால்: அரசு ஜூனியர் துவக்க பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 15க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியருக்கு வாந்தி, பேதி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.கொப்பால் மாவட்டம், கங்காவதியின் சங்கபுரா கிராமத்தில், அரசு ஜூனியர் துவக்க பள்ளி உள்ளது. இங்கு ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை 32 குழந்தைகள் படித்து வருகின்றனர்.இவர்களுக்கு நேற்று பள்ளியில், மதிய உணவு பரிமாறப்பட்டது. உணவு சாப்பிட்ட சிறிது நேரத்தில் 15க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியருக்கு வாந்தி, பேதி ஏற்பட்டது. உடனடியாக கங்காவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.தகவல் அறிந்த மாவட்ட சுகாதார அதிகாரி லிங்கராஜ், தாசில்தார் நாகராஜ் உட்பட அதிகாரிகள் பள்ளிக்கு சென்று ஆய்வு செய்தனர். பரிமாறப்பட்ட உணவு, ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அறிக்கை கிடைத்த பின்னரே, வாந்தி, பேதிக்கான காரணம் தெரிய வரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்