நீட் எதிர்ப்பின் ரகசியம் அம்பலம்
வாசகர் எழுதிய கடிதம்ஆர்.மகேசன், அருப்புக்கோட்டையில் இருந்து அனுப்பிய, &'இ - மெயில், கடிதம்:தி.மு.க., - எம்.பி., ஜெகத்ரட்சகன் 1,250 கோடிக்கு மேல் வரி ஏய்ப்பு செய்திருப்பதாக வருமான வரித்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. தி.மு.க.,வினர் விஞ்ஞான பூர்வமாக ஊழல் செய்வதில் வரலாறு படைப்பவர்கள்.ஒரு சாமானியனாக அரசியலுக்குள் நுழைந்து, ஒரு தனி நபரால் 20 - 30 ஆண்டுகளுக்குள், 1 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் சொத்து சேர்க்க முடியும் என்றால், திராவிட கட்சிகள் ஆட்சிக்கு வந்ததில் இருந்து, தொடர்ந்து அமைச்சர் பதவியை வகிப்போர் எந்தளவுக்கு சேர்த்திருப்பர்?மதுபான ஆலைகள், மருத்துவ கல்லுாரிகள் உட்பட பல்வேறு நிறுவனங்களுக்கு சொந்தக்காரரான ஜெகத்ரட்சகன், தன் மருத்துவ கல்லுாரிகளில், ஏஜன்டுகள் வாயிலாக மாணவர் சேர்க்கை நடத்தியதும், அதிக அளவு கட்டணம் வசூலித்ததும் அம்பலமாகி இருக்கிறது.கடந்த, 2016-ல் நீட் தேர்வு முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட போது, தஞ்சாவூரை தலைமையிடமாக கொண்ட தனியார் பல்கலைக்கழகம், சென்னையில் ஒரு மருத்துவ கல்லுாரியை துவங்கியது. தேசிய மருத்துவ ஆணையத்தின் விதிகளை மீறி, நீட் தேர்வில் தகுதி பெறாத, 35 மாணவர்களிடம் பல லட்சங்களை நன்கொடையாக பெற்று கல்லுாரியில் சேர்த்தது கண்டுபிடிக்கப்பட்டு, அந்த கல்லுாரி இழுத்து மூடப்பட்டது.அதேபோல, முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்ட ஜெகத்ரட்சகன் நடத்தும் கல்லுாரிகளின் அங்கீகாரத்தை, முழுமையாக ரத்து செய்ய வேண்டும். தமிழகத்தில் உள்ள பெரும்பாலான தனியார் மருத்துவ கல்லுாரிகளின் உரிமையாளர்கள் தி.மு.க., மற்றும் அ.தி.மு.க.,வினர் தான்.இதனால் தான், நீட் தேர்வை ஒழிக்கும் விஷயத்தில் மட்டும் இரு கட்சியினரும் மிகவும் ஒற்றுமையாக இருந்தனர். நீட் தேர்வை இவர்கள் தீவிரமாக எதிர்த்ததன் ரகசியத்தை, ஜெகத்ரட்சகனிடம் நடத்திய சோதனை வாயிலாக வருமான வரித் துறை அம்பலப்படுத்தி விட்டது.