பள்ளி மாணவர்களுக்கு நுாதன தண்டனை
பண்ருட்டி: பண்ருட்டியில் பஸ் படிக்கட்டில் பயணம் செய்த மாணவர்களுக்கு, போலீசார் நுாதன தண்டனை வழங்கினர்.பண்ருட்டியில் இருந்து சேந்தநாடு கிராமத்திற்கு நேற்று முன்தினம் மாலை அரசு டவுன் பஸ் சென்றது. பஸ் படியில் தொங்கியவாறு மாணவர்கள் பலர் பயணம் செய்தனர். இதை பார்த்த பண்ருட்டி சப் இன்ஸ்பெக்டர் பிரசன்னா, லிங்க்ரோடு அருகே பஸ்சை நிறுத்தி படியில் பயணம் செய்த பள்ளி மாணவர்களை கீழே இறக்கினார்.அவர்களிடம், பிளாஸ்டிக்கால் ஆன கை, கால் உள்ளிட்ட உடல் உறுப்புகளை வழங்கினார். அவைகளை, கையில் எடுத்துக்கொண்டு நொண்டியபடி சிறிது துாரம் சென்றுவர கூறி, நுாதன தண்டனை வழங்கினார்.அதையடுத்து, படியில் பயணம் செய்யும்போது விபத்து ஏற்பட்டு உடல் உறுப்புகள் பாதிக்கப்படுவது குறித்து மாணவர்களுக்கு சப் இன்ஸ்பெக்டர் விழிப்புணர்வு அறிவுரை வழங்கினார்.