சித்தா பிரிவிற்கு டாக்டர் இல்லை
சிவகங்கை: சிவகங்கை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் வார்டு எண் 44ல் சித்த மருத்துவ பிரிவு செயல்படுகிறது. இங்கு தினசரி 100க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.இங்குள்ள சித்தா பிரிவில் கடந்த சில தினங்களாக டாக்டர் பணியில் இல்லை. கடந்த இரண்டு தினங்களாக சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் டாக்டர் இல்லாததால் சிகிச்சை பெற முடியாமல் வீடு திரும்பினர். மருத்துவக் கல்லுாரி சித்தா பிரிவில் டாக்டர் பணியிடம் நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் பிரபாகரன் கூறுகையில், மருத்துவ கல்லுாரியில் உள்ள டாக்டர் பிப்.1ம் தேதியில் இருந்து 20 நாட்கள் மருத்துவ விடுப்பில் உள்ளார். சித்த மருத்துவத்தில் மருத்துவக் கல்லுாரிக்கு ஒரு டாக்டர் தான் உள்ளார். அவர் விடுமுறையில் இருப்பதால் அவர் வரும் வரை காளையார்கோவில் டாக்டர் வாரத்திற்கு இரண்டு நாள் மட்டும் பார்ப்பார், என்றார்.