உள்ளூர் செய்திகள்

சிதம்பரம் பல்கலையில் உறுதிமொழி ஏற்பு

சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில், நுாறு சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தி, கலெக்டர் தலைமையில் உறுதிமொழி ஏற்கப்பட்டது.சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில், நுாறு சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. கலெக்டரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான அருண்தம்புராஜ் துவக்கி வைத்தர். கடலுார் எஸ்.பி., ராஜாராம், பல்கலைக்கழக துணைவேந்தர் கதிரேசன், பதிவாளர் சிங்காரவேலு, சப் கலெக்டர் ராஷ்மி ராணி, தாசில்தார் ஹேமா ஆனந்தி, தேர்தல் பிரிவு தாசில்தார் செல்வலட்சுமி மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள், பேராசிரியர்கள், ஊழியர்கள் பங்கேற்றனர். அப்போது, கலெக்டர் தலைமையில் நுாறு சதவீத ஓட்டுப்பதிவு குறித்து உறுதி மொழி ஏற்கப்பட்டது.நிகழ்ச்சியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்று ஏப்ரல் 19 வோட் பார் ஷியூர் என்ற வாசகத்தின் வடிவமைப்பில் நின்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தொடர்ந்து நுாறு சதவீத வாக்களிப்போம் என்ற கையெழுத்து இயக்கத்தை கலெக்டர் துவக்கி வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்