மருத்துவக் மாணவர்கள் மோதல் 2 பேர் சஸ்பெண்ட்
திருநெல்வேலி: திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லுாரி மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் வார்டன் கார் கண்ணாடி உடைக்கப்பட்டது. இருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.திருநெல்வேலி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை அருகில் மாணவர்கள் விடுதி உள்ளது. நேற்று முன்தினம் இரவு முதலாம் ஆண்டு மாணவர்கள் சக மாணவரின் பிறந்தநாளை வெளியே கொண்டாடிவிட்டு டூவீலர்களில் விடுதிக்கு வந்தனர். அங்கு விளையாடிக் கொண்டிருந்த நான்காம் ஆண்டு மாணவர்கள் முதலாம் ஆண்டு மாணவர்களிடம் பார்ட்டி குறித்து கேட்டு தகராறு செய்தனர். இதில் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. தகவல் அறிந்து அங்கு வந்த வார்டன் டாக்டர் கண்ணன் பாபுவின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டது.இது குறித்து இரு தரப்பினரையும் நேற்று மருத்துவ கல்லுாரி டீன் ரேவதி பாலன் அழைத்து விசாரித்து கண்டித்தார். தகராறில் ஈடுபட்ட நான்காம் ஆண்டு மாணவர்கள் இருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.