பாடத்திட்டம் கற்பிக்க வரும் 25ம் தேதி பயிற்சி
கோவை: ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரை கையாளும் இடைநிலை ஆசிரியர்களுக்கு, வரும் 25ம் தேதி முதல், வட்டார அளவில் கற்பித்தல் பயிற்சி வழங்கப்படுகிறது.தொடக்க வகுப்பு மாணவர்களுக்கு எண்ணும் எழுத்தும் சிலபஸ், கடந்தாண்டு முதல் சொல்லித்தரப்படுகிறது. இதை மாணவர்கள் ஆர்வமுடன் கற்கவும், கற்பித்தல் முறைகளில் மாற்றம் கொண்டுவரவும், பல்வேறு புதிய நடைமுறைகள் புகுத்தப்பட்டு வருகின்றன. காலாண்டு தேர்வு விடுமுறைக்கு பின், இரண்டாம் பருவம் துவங்கிவிடும்.இதற்காக, ஆசிரியர்களுக்கு கற்பித்தல் பயிற்சி, மாநில, மாவட்ட அளவில் ஏற்கனவே வழங்கப்பட்டது. இதில் பயிற்சி பெற்றவர்களைக் கொண்டு, வட்டார அளவிலான பயிற்சி வரும், 25 முதல் 27ம் தேதி வரை நடக்கிறது.