உள்ளூர் செய்திகள்

பாரதியார் பல்கலையில் ரூ. 40 கோடியில் கட்டடம்

கோவை : பாரதியார் பல்கலையில் ஒருங்கிணைந்த அறிவியல் மற்றும் சமூக அறிவியல் கட்டடம், 40 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.பாரதியார் பல்கலை 800 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ளது. 39 துறைகளின் கீழ், 54 முதுநிலை படிப்புகள் வழங்கப்படுகின்றன. 133 கல்லுாரிகள் அதன் கட்டுப்பாட்டில் உள்ளன.இப்பல்கலையில், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பிரிவுகளின் கீழ், புதிய கட்டடங்கள் தேவை என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக நிலவியது. அதன் அடிப்படையில் தற்போது, ஒருங்கிணைந்த அறிவியல், சமூக அறிவியல் கட்டடங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.பதிவாளர் (பொ) ரூபா கூறுகையில், பல்கலையில், லைப் சயின்ஸ், சோசியல் சயின்ஸ் பிரிவுகளின் கீழ், ஒருங்கிணைந்த கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. இதில், ஆறு கட்டடங்கள் 2,794 சதுர அடி வீதம், 16,767 சதுர அடியில் கட்டப்பட்டுள்ளது. இதன் மொத்த மதிப்பீடு, 40 கோடி ரூபாய். வரும், 9ம்தேதி முதல்வர் இப்புதிய கட்டடங்களை திறந்து வைக்கவுள்ளார் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்