உள்ளூர் செய்திகள்

தமிழமல்லன் நுாலுக்கு விருது

புதுச்சேரி: புதுச்சேரி முனைவர் தமிழமல்லன் எழுதிய தனித்தமிழ் இயக்கம் ஒரு நுாற்றாண்டு வரலாறு எனும் ஆராய்ச்சி நுாலுக்கு எஸ்.ஆர்.எம்., பல்கலைக்கழகம் விருது வழங்கி கவுரவித்துள்ளது.சென்னை, காட்டாங்குளத்துார் எஸ்.ஆர்.எம்., பல்கலைக்கழகம், ஆய்வு அறிஞர் தமிழமல்லன் எழுதிய தனி தமிழ் இயக்கம் ஒரு நுாற்றாண்டு வரலாறு நுாலுக்கு, பல்கலைக்கழக துணை வேந்தர் பாரிவேந்தர், பரதிமார் கலைஞர் ஆய்வு அறிஞர் விருது, ஒரு லட்சம் ரொக்கம், கேடயம் மற்றும் சான்றிதழை, தமிழக பா.ஜ., மாநில தலைவர் அண்ணமாலை முன்னிலையில் வழங்கி பாராட்டினார்.ஆய்வறிஞர் விருது பெற்ற முனைவர் தமிழ மல்லன், 45 நுால்கள் எழுதியுள்ளார். அவருக்கு புதுச்சேரி அரசின் உயரிய விருதான தமிழ்மாமணி விருதும், சமீபத்தில் அவர் எழுதிய மூன்று நுால்களுக்கு புதுச்சேரி அரசின் கலை பண்பாட்டுத்துறை விருதுகளை வழங்கியுள்ளது.தனித்தமிழ்க் கொள்கையுடைய தமிழமல்லன் அதன் மேம்பாட்டுக்காக வெல்லும் துாயதமிழ் என்னும் மாத இதழை தொடங்கி, 31 ஆண்டுகளாக நேர்மையாக வெளியிட்டுக் கொண்டு வருகிறார்.புதுச்சேரி அரசின் நல்லாசிரியர் விருது பெற்றவர். புதுவைத் தமிழ் எழுத்தாளர் கழகம், தனித்தமிழ் இயக்கம் ஆகிய அமைப்புகளின் தலைவராகச் செயல்பட்டு வரும் அவர் தமிழ்நலப் போராட்டங்கள் பலவற்றை நடத்திய சிறப்புக்கு உரியவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்