உள்ளூர் செய்திகள்

கல்வியியல் கல்லுாரியில் 16வது பட்டமளிப்பு விழா

கள்ளக்குறிச்சி: ஆர்.கே.எஸ்., கல்வியியல் கல்லுாரியில் 16வது பட்டமளிப்பு விழா நடந்தது.கள்ளக்குறிச்சி அடுத்த இந்திலி டாக்டர் ஆர்.கே.எஸ்., கல்வியியல் கல்லுாரியில் நடந்த நிகழ்ச்சிக்கு கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர் மகுடமுடி தலைமை தாங்கினார். தாளாளர் டாக்டர் குமார், செயலாளர் கோவிந்தராஜூ, பொருளாளர் மணிவண்ணன், துணைத்தலைவர் ரவிசங்கர் முன்னிலை வகித்தனர். கல்வியியல் கல்லுாரி முதல்வர் ஜெயசீலன் வரவேற்றார்.சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக துணைப்பதிவாளர் மோகன் பேசும் போது, “தொழில்நுட்ப உலகில் புதுப்புது மாற்றங்கள் வருகின்றன. அதற்கேற்ப உங்களது அறிவையும் புதுப்பித்துக்கொண்டே இருக்க வேண்டும், மணற்கேணியில் சுரக்கும் நீர் பலரது தாகத்தை தீர்ப்பது போல, நீங்கள் பெற்ற அறிவு சமுதாயத்தின் வளர்ச்சிக்கு பயன்பட வேண்டும்” என பேசினார்.தொடர்ந்து, உறுதிமொழி ஏற்கப்பட்டு, மாணவ, மாணவிகளுக்கு பட்டம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், இயக்குனர்கள் செல்லப்பன், கலியபெருமாள், துரைசாமி, சிவக்குமார், ஆர்.கே.எஸ்., கலைக்கல்லுாரி முதல்வர் மோகனசுந்தர், துணை முதல்வர் அசோக் மற்றும் உதவி பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்