ரத்தினம் கல்லூரியில் 22வது பட்டமளிப்பு விழா
கோவை: ஈச்சனாரி, ரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 22வது பட்டமளிப்பு விழா, ரத்தினம் கிராண்ட் ஹாலில் நடந்தது. இவ்விழாவில் 1380 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.சிறப்பு விருந்தினர்களான நெஸ்லே நிறுவனத்தின் ஊட்டச்சத்துப் பிரிவுக்கான தலைவர் உன்னி கிருஷ்ணன், சமுன்னதி நிறுவனத்தின் வணிகச் செயல்பாடுகளின் தலைவர் பாலசுப்ரமணி, கம்ப்யூட்டர் ஏஜ் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் மனிதவளத் துறையின் உதவித் துணைத் தலைவர் திவ்யஸ்ரீ ஆகியோர்பங்கேற்றனர்.ரத்தினம் கல்விக் குழுமத்தின் தலைவர் மதன் செந்தில், அறங்காவலர் ஷிமா, கல்லுாரி முதன்மை நிர்வாக அதிகாரி மாணிக்கம், முதல்வர் பாலசுப்பிரமணியன், துணைமுதல்வர் முனைவர் சுரேஷ், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.