உள்ளூர் செய்திகள்

மாவட்ட செஸ் 310 பேர் பங்கேற்பு

கோவை: ஸ்ரீ கிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரியில் மாவட்ட அளவிலான செஸ் போட்டி நேற்று நடந்தது. இதில் 9, 12, 15, 18 வயதுக்குட்பட்ட மாணவ, மாணவியர் 310 பேர் பங்கேற்றனர். இரு பாலருக்கு தனித்தனியே போட்டிகள் நடத்தப்பட்டன. கல்லுாரி முதல்வர் ஜெகஜீவன் போட்டிகளை துவக்கி வைத்தார்.ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கு ரூ.1000, ரூ.750, ரூ.500 ரொக்க பரிசு வழங்கப்பட்டது. நான்கு முதல் 10ம் இடம் வரை பிடித்தவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.மாணவ, மாணவியர் ஆர்வமுடன் பங்கேற்றனர். நிறைவில், 80 பேருக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. கல்லுாரி உடற்கல்வி இயக்குனர் குமரேசன் உள்ளிட்டோர் போட்டிகளை நடத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்