உள்ளூர் செய்திகள்

கட்டுரை போட்டி

இந்திய அரசியலமைப்பு தினத்தையொட்டி, தமிழக கவர்னர் மாளிகை கட்டுரை போட்டியை அறிவித்துள்ளது.யார் பங்கேற்கலாம்?பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் இப்போட்டியில் பங்கேற்கலாம். தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கட்டுரைகளை சமர்ப்பிக்கலாம்.தலைப்புகள்:இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் உருவாக்கம்: முக்கிய நிகழ்வுகளும், தலைவர்களும் - 6 முதல் 9ம் வகுப்பினர்இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் உள்ள சமூக நீதிக்கான பாதுகாப்பு அம்சங்கள் - 10 முதல் 12ம் வகுப்பினர்இந்திய அரசியலமைப்பு சட்டம் காட்டுகிற அடிப்படை கடமைகள்: உரிமைகளையும், பொறுப்புகளையும் சமநிலைப்படுத்துதல்பள்ளி மாணவ, மாணவிகள் 1,500 வார்த்தைகளிலும், கல்லூரி மாணவ, மாணவியர் 2,500 வார்த்தைகளிலும் கட்டுரை எழுத வேண்டும்.கட்டுரைகளை சமர்ப்பிக்க கடைசி நாள்: செப்டம்பர் 15விபரங்களுக்கு: https://tnrajbhavan.gov.in/


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்