பல்கலையில் ஆர்ப்பாட்டம்
மதுரை: மதுரை காமராஜ் பல்கலையில் இரண்டு மாதங்களாக ஓய்வூதியம் வழங்காததை கண்டித்து பாதிக்கப்பட்ட ஓய்வூதியர்கள் கறுப்பு பேட்ச் அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இப்பல்கலையில் ஏற்பட்ட நிதி நெருக்கடியால் பேராசிரியர்கள், அலுவலர்கள் உள்ளிட்டோருக்கு இரண்டு மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை. மேலும் 1000க்கு மேற்பட்ட ஓய்வூதியர்களுக்கும் செப்டம்பர், அக்டோபர் ஓய்வூதியம் வழங்காததால் அவர்கள் வாழ்வாதாரம் பாதித்துள்ளனர்.இதை கண்டித்து ஓய்வூதியர் சங்க நிர்வாகி சுப்புராஜ் தலைமையில்பதிவாளர் அலுவலகம்முன் நுாற்றுக்கும் மேற்பட்டோர் கறுப்பு பேட்ச் அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நிர்வாகிகள் சீனிவாசன், ஜபருல்லா, கிரிதரன், பாலகுருசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.