உள்ளூர் செய்திகள்

அரசாணை 243 ரத்து: ஆசிரியர்கள் தீர்மானம்

சிவகங்கை: அரசாணை 243ஐ ரத்து செய்ய வலியுறுத்தி ஆசிரியர் சங்கங்கள் சிவகங்கையில் தீர்மானம் நிறைவேற்றினர். தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சிவகங்கை மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் புரட்சித்தம்பி தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர் ஆரோக்கியராஜ், மாநில செயற்குழு உறுப்பினர் முத்துப்பாண்டியன் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் சகாய தைனேஷ் தீர்மானங்களை முன்மொழிந்து பேசினார்.மாவட்ட பொருளாளர் கலைச்செல்வி, மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் ரவி, சிங்கராயர், குமரேசன், மாவட்ட துணை தலைவர்கள் அமலசேவியர், சேவியர் சத்தியநாதன், மாவட்ட துணை செயலாளர்கள் கஸ்துாரி, பஞ்சுராஜ், கல்வி மாவட்ட தலைவர்கள் ஜோசப், ஜான் கென்னடி, கல்வி மாவட்ட செயலாளர்கள் பாலகிருஷ்ணன், ஜெயக்குமார் உள்ளிட்ட மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். அரசாணை 243ஐ ரத்து செய்ய வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்