உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / டில்லி உஷ்ஷ்ஷ்...: என்ன பேசினர்?

டில்லி உஷ்ஷ்ஷ்...: என்ன பேசினர்?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சமீபத்தில் தே.மு.தி.க., தலைவர் பிரேமலதா டில்லி வந்திருந்தார். ஜனாதிபதி மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்று, ஜனாதிபதி திரவுபதி முர்மு கையால், தன் கணவர் விஜய்காந்த் சார்பாக பத்ம பூஷண் விருதைப் பெற்றுக் கொண்டார்.பின், அங்கிருந்த ஒரு மத்திய சீனியர் அமைச்சரைச் சந்தித்து, 10 நிமிடங்கள் வரை ஆங்கிலத்தில் இருவரும் பேசிக் கொண்டிருதனராம். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரும், இவர்கள் பேசிக் கொண்டிருந்ததைப் பார்த்து, என்ன நடக்கிறது என, சந்தேகப்பட்டனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ikm8y7oq&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0'ஜூன் 4ம் தேதி ஓட்டு எண்ணிக்கைக்கு பின், த.மா.கா., தலைவர் ஜி.கே.வாசனைப் போல, அ.தி.மு.க., - -பா.ஜ., உறவிற்கு பிரேமலதா பாலமாக இருப்பாரா' என, பல கேள்விகள் எழுந்துள்ளன.விஜயகாந்திற்கு பத்ம பூஷண் விருது அறிவிப்பை, மத்திய அரசு வெளியிட்டதும் நன்றி தெரிவித்திருந்தார் பிரேமலதா. அத்துடன், பா.ஜ., கூட்டணிக்கு வரவும் தயாராக இருந்தார்; ஆனால் பேரம் படியவில்லை. தேர்தல் பிரசாரத்தில் தி.மு.க.,வை கடுமையாக விமர்சித்த பிரேமலதா, பா.ஜ.,வை அதிகமாக கண்டுகொள்ளவில்லை.இதையெல்லாம் வைத்து பார்த்தால், பா.ஜ.,வை தே.மு.தி.க., நெருங்குகிறதோ என, சந்தேகம் ஏற்படுகிறது. ஆனால், இது குறித்து பா.ஜ.,வினர் கருத்து தெரிவிக்க மறுத்து விட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Easwar Kamal
மே 16, 2024 19:28

கேட்ட டப்பு எடப்பாடி கிட்ட இருந்து வந்துருக்காது அதுதான் வேறு ஜகாவுக்கு நூல் விட்டு பாக்குது விஜயகாந்த் நாசமா போனதுக்கு கரணம் இந்த பெண்மணி தான இது எந்த கட்சியோட போனாலும் அந்த கட்சி நாசமாகத்தான் போகுது எடப்பாடி கண்டிப்பாக இந்த பெண்மணியோட பலனை அனுபவிக்க porarru


sridhar
மே 16, 2024 12:44

தேமுதிக வோட்டு வங்கி காணாமல் போய் ரொம்ப நாள் ஆகிவிட்டது


ram
மே 13, 2024 13:42

திமிரின் உச்சம் இவங்களுக்கு


கண்ணன்,மேலூர்
மே 12, 2024 13:10

நல்ல மனிதருக்கு அளித்த விருது தவறானவரின் கைகளில்...


ராஜவேல்,வத்தலக்குண்டு
மே 12, 2024 12:02

இத்தோட பேராசை பிடித்த இந்தம்மாவை விட்ருங்கப்பா இன்னமும் பேச்சுவார்த்தை அது இது என்று பெரியாளாக ஆக்கி விடாதீர்கள்!


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை