உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / ஓட்டுக்கு பணம் வாங்கினால் நடவடிக்கை பாயும்: சத்யபிரதா சாஹு

ஓட்டுக்கு பணம் வாங்கினால் நடவடிக்கை பாயும்: சத்யபிரதா சாஹு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ''ஓட்டுக்கு பணம் கொடுப்போர் மீதும், வாங்குவோர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்படும்,'' என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்தார்.அவர் கூறியதாவது:தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க, பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதும் குற்றம்; அவற்றை வாங்குவதும் குற்றம். ஓட்டுக்கு பணம் கொடுப்போர் மீதும், வாங்குவோர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் வினியோகம், இரவு 10:00 மணிக்கு மேல் பிரசாரம் செய்தல் போன்றவை குறித்து, பொதுமக்கள், 'சி விஜில்' மொபைல் ஆப்ஸ் வழியாக புகார் அளிக்கலாம்.தேர்தல் விதிமீறல்கள் குறித்து புகார் அளிக்க, பொதுமக்கள் முன் வர வேண்டும்.இதுவரை பணம் கொடுத்ததாக புகார் வரவில்லை. ஒன்றிரண்டு புகார்கள் வந்தன; அவையும் பழைய வீடியோக்கள். தமிழகத்தில் பதற்றமான ஓட்டுச் சாவடிகளாக 8,050; கண்காணிக்க வேண்டிய ஓட்டுச்சாவடிகளாக 181 கண்டறியப்பட்டுள்ளன. இவற்றுக்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும்.வாக்காளர்களுக்கு, 'பூத் சிலிப்' வழங்கும் பணி துவக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம், 13.08 லட்சம் பேருக்கு பூத் சிலிப் வழங்கப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கு வரும் 13ம் தேதிக்குள் வழங்கப்படும்.இவ்வாறு சத்யபிரதா சாஹு கூறினார்.

தமிழகம் மந்தம்

நாடு முழுதும் தேர்தல் நடத்தை விதிமீறல்கள் குறித்து பொதுமக்கள் புகார் அளிப்பதற்காக, 'சி விஜில்' மொபைல் ஆப், தேர்தல் கமிஷனால் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் வழியே புகார் அளிப்பது, தமிழகத்தில் மந்தமாகவே உள்ளது.நேற்று முன்தினம் வரை அதிகபட்சமாக கேரளாவில் 71,168 புகார்கள் வந்துள்ளன. இவற்றில், 70,929 புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. இன்னும், 239 புகார்கள் நிலுவையில் உள்ளன.அதற்கு அடுத்தபடியாக, உத்தரகண்ட் மாநிலத்தில் 14,684; கர்நாடகாவில் 13,959; ஆந்திராவில் 7,055 புகார் மனுக்கள் பெறப்பட்டுள்ளன. தமிழகத்தில் 2,168 புகார்கள் பெறப்பட்டதில், 2,139 மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. இன்னும், 29 புகார்கள் நிலுவையில் உள்ளன.தமிழகத்தை பொறுத்தவரை, கரூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக 408 புகார்கள், அதற்கடுத்து சென்னையில் 239 புகார்கள் பெறப்பட்டுஉள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Sadhasivam Sharma
ஏப் 05, 2024 23:21

பணம் குடுக்குற கட்சி மீதும் நடவடிக்கை பாயுமா ? ? அவர்கள் தான் முதல் குற்றவாளிகள் நாட்டை கொள்ளை அடித்து அடாவடித்தனம் செய்யும் கயவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க முடியுமா ?


தமிழன்
ஏப் 05, 2024 13:58

இதுவரை பணம் கொடுத்ததாக புகார் வரவில்லை/ / பண மதிப்பு இழப்பு செய்து கருப்பு பணத்தை முழுமையாக ஒழித்து விட்டதால் யாரும் பணம் கொடுக்கவில்லை லஞ்சம் ஊழல் இந்தியாவிலேயே இல்லை அப்புறம் எப்படி பணம் கொடுப்பாங்க தேர்தல் ஆணையம் ஒரு தன்னிச்சயியயான அமைப்பு அது ஸ் சொன்னால் ஆண்டவன் சொன்ன மாதிரி சரியாகவே இருக்கும்


தமிழன்
ஏப் 05, 2024 13:56

தேர்தல் விதிமீறல்கள் குறித்து புகார் அளிக்க, பொதுமக்கள் முன் வர வேண்டும் / / / ஒரு அமைச்சர் தரம் குறைவாக பேசுகிறார் நடவடிக்கை எடுக்கவில்லை புகார் கொடுக்கும் கட்சிகள் ஆளும் கட்சியை பி பற்றியது என கண்டு கொள்ளாமல் இ இருக்கிறார்கள் இன்னுமா தேர்தல் முறையாக நடக்கிறது என்று நம்ப சொல்றாங்க


தமிழன்
ஏப் 05, 2024 13:54

சும்மா சொல்றாங்க ஓட்டுக்கு பணம் தரும் கட்சியை தடை செய்யுமா தேர்தல் ஆணையம்


மேலும் செய்திகள்











சமீபத்திய செய்தி