உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / ராகுலை கெஞ்சிய அகிலேஷ் யாதவ்!

ராகுலை கெஞ்சிய அகிலேஷ் யாதவ்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

லக்னோ: ஒரு வழியாக கடைசி நேரத்தில் உ.பி.,யின் ரேபரேலி தொகுதியில் மனு தாக்கல் செய்துள்ளார், ராகுல். கடைசி நேரம் வரை, இந்த தொகுதியில் காங்., சார்பில் யார் போட்டியிடுவர் என, 'சஸ்பென்ஸ்' நிலவியது.'ஏன் காலதாமதம்' என்பது குறித்து, டில்லி அரசியல் வட்டாரங்களில் பலவும் பேசப்படுகிறது. அமேதியிலும், ரேபரேலியிலும் போட்டியிட ராகுலுக்கு விருப்பமில்லை. தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா என, பலரும் உ.பி.,யில் போட்டியிட ராகுலிடம் மன்றாடினராம். 'கேரளாவில் வயநாடு தொகுதியில் என் வெற்றி நிச்சயம்; அப்படியிருக்க எதற்கு நான் உ.பி.,யில் போட்டியிட வேண்டும்' என, கேள்வி எழுப்பினாராம் ராகுல்.வெள்ளிக்கிழமை தான் மனு தாக்கல் செய்ய கடைசி நாள். வியாழன் இரவு காங்., கூட்டணியில் உள்ள சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், ராகுலிடம் போனில் பேசியுள்ளார்.'அமேதி அல்லது ரேபரேலி தொகுதிகள் சோனியா குடும்ப தொகுதிகள். நீங்கள் போட்டியிட மறுத்தால், அதன் விளைவு கள் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். உ.பி.,யில் நம் கூட்டணி வெற்றி பெறும் என, நினைக்கும் தொகுதிகள் கூட நம் கைவிட்டு போகும். எனவே தயவுசெய்து போட்டியிடுங்கள்' என, ராகுலிடம் கெஞ்சியுள்ளார் அகிலேஷ் யாதவ்.தான் போட்டியிடா விட்டால், உ.பி.,யில் கூட்டணிக்கு பெரும் சரிவை ஏற்படுத்தும் என்பதால், ஒரு வழியாக போட்டியிட சம்மதித்தாராம் ராகுல்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











சமீபத்திய செய்தி