உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / கட்டட அனுமதி கட்டணம் இரண்டு மடங்காக உயர்வு

கட்டட அனுமதி கட்டணம் இரண்டு மடங்காக உயர்வு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: கட்டுமான திட்ட அனுமதி பெறுவதற்கான கட்டணங்கள் முன் அறிவிப்பு இன்றி, இருமடங்காக உயர்த்தப்பட்டு உள்ளதால், வீடுகள் விலையும் வெகுவாக அதிகரிக்கும் என, கட்டுமான துறையினர் புகார் தெரிவித்துள்ளனர்.தமிழகத்தில் புதிதாக வீடு வாங்குவது அல்லது கட்டுவதில் மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால், சொத்து வரி உயர்வு, பதிவு கட்டண உயர்வு, கட்டுமான பொருட்கள் விலை உயர்வு போன்றவை, சமீப காலமாக அவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன.குறிப்பாக, கட்டட அனுமதி பெறுவது சவாலாக உள்ளது. உள்ளாட்சியிலும், பிற துறைகளிலும் அதிகாரிகளை கவனிக்க தவறினால், இரண்டு ஆண்டுகள் வரை காத்திருக்கும் சூழல் ஏற்படுகிறது. சாதாரண குடியிருப்பு திட்டங்கள் முதல், அடுக்குமாடி கட்டடங்கள் வரை இதேநிலை தான்.கோரிக்கை ஏற்புஇந்நிலையில், கட்டுமான துறையினரின் கோரிக்கையை ஏற்று, சுயசான்று அடிப்படையில், கட்டட அனுமதி வழங்கும் திட்டத்தை, தமிழக அரசு சமீபத்தில் துவக்கியது. இதன்படி, 2,500 சதுர அடி வரையிலான மனையில், 3,500 சதுர அடி வரையிலான வீடு கட்ட, சுயசான்று அடிப்படையில், ஆன்லைன் வழியே உடனடி கட்டட அனுமதி வழங்கப்படும்; யாருடைய தலையீடும் இருக்காது என்று கூறப்படுகிறது.இத்திட்டத்தில் கட்டட அனுமதி வழங்க, சென்னையில் ஏற்கனவே இருந்த விகிதங்கள் அடிப்படையில், சதுர அடிக்கு, 56 ரூபாய் கட்டணம் வசூலிக்கலாம் என சென்னை மாநகராட்சி பரிந்துரைத்தது. இதற்கான வரைவு அறிக்கை நகராட்சி நிர்வாகத்துறைக்கு அனுப்பப்பட்டது.ஆனால், நகராட்சி நிர்வாகத்துறையும், ஊரக வளர்ச்சி துறையும் வெளியிட்ட புதிய கட்டண விகிதங்கள் இதற்கு மாறாக இருந்தன.அதாவது, சென்னை மாநகராட்சியில், சதுர அடிக்கு, 100 ரூபாய்; பிற மாநகராட்சிகளில் சதுர அடிக்கு, 74 முதல் 88; நகராட்சிகளில் சதுர அடிக்கு, 70, 74 ரூபாய் என்ற அளவில் கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டன.பேரூராட்சிகளில் சதுர அடிக்கு, 45 முதல் 70 ரூபாய் வரை; ஊராட்சிகளில் சதுர அடிக்கு, 15 முதல் 27 ரூபாய் வரை என்றும் அறிவிக்கப்பட்டன.

மாற்றலாம்

உள்ளாட்சி அமைப்புகளில், 3,500 சதுர அடி வரையிலான கட்டடங்களுக்கு தான் புதிய கட்டணம் என்று பலரும் நினைத்தனர்.ஆனால், ஒற்றை சாளர முறையில் கட்டட அனுமதி வழங்குவதற்கான கட்டணங்களையும் மாற்றி அமைக்கலாம் என, நகராட்சி நிர்வாகத்துறை உத்தரவிட்டுள்ளது.இதன்படி, 3,500 சதுர அடிக்கு மேற்பட்ட கட்டட அனுமதி கட்டணங்களும் மாற்றப்பட்டுள்ளன. அதனால் ஏற்கனவே, 8,900 சதுர அடி கட்டடத்துக்கு அனுமதி வாங்க, 4.5 லட்சம் ரூபாய் செலுத்தி வந்த நிலையில், தற்போது, 9.5 லட்சம் ரூபாய் கட்டணம் செலுத்தும் நிலை வந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.புதிதாக கட்டட அனுமதி பெற விண்ணப்பிப்போர், இருமடங்கு கட்டணம் செலுத்தும் நிலை ஏற்பட்டுள்ளதாக கட்டுமான துறையினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

விலையை ஏற்றுவதை தவிர வேறு வழியில்லை!

சுயசான்று முறை கட்டட அனுமதிக்கு, புதிய கட்டணங்கள் அறிவிப்பதாக கூறிவிட்டு, அனைத்து வகை கட்டட அனுமதிக்கான கட்டணங்களும் இரு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளன. உதாரணமாக, 8,900 சதுர அடிக்கு கடந்த மாதம் அதிகாரிகள் வழங்கிய டிமாண்ட் நோட்டீஸ் அடிப்படையில், 4.5 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டி இருந்தது. தற்போது, இதே பரப்பளவு கட்டடத்துக்கு, 9.5 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் ஏற்படும் கூடுதல் செலவை, வீட்டின் விலையில் ஏற்றுவதை தவிர, எங்களுக்கு வேறு வழி இல்லை. - பி.பாலமுருகன், கட்டட அமைப்பியல் பொறியாளர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Ethiraj
ஆக 06, 2024 09:20

Rs 1000 To Widows Senior citizen Ladies College going boys College going girls Free travel to all ladies Where from money will come Rob munuswamy pay chinnaswamy


sundarsvpr
ஆக 05, 2024 20:26

வீடுகள் கட்டுமானங்கள் அவசியமா என்ற கேள்வி. 1. விலை நிலங்களில் கட்டப்படுகின்றன. 3பல அடுக்கு . மாடி வீடுகள் கட்டுவதால் நீரின் தேவை அதிகரிப்பு . 4. மூன்று மாடிகளுக்குள் இருந்தால் நடை தேக பயிற்சி கிடைக்கும். 5. பல அடுக்கு மாடி குடியிருப்பு என்றால் முகத்துக்கு முகம் பேசுவது காணாமல் போய்விடும். நேருக்கு நேர் பேசுவது பேசும் சந்தோசம் கிடைக்கும். 6. இதனால் நிறைய கிணறுகள் கிடைக்கும். 7. நீர் இறைப்பது ஒரு பயிற்சி. அடுக்கு மாடி சரியாய் கட்டாவிட்டால் இடிக்கவேண்டிய நிலை ஏற்படும்.


N Sasikumar Yadhav
ஆக 05, 2024 17:48

திருட்டு திராவிட மாடல் களவானிகளுக்கு ஓசியும் இலவசமும் வாங்கி கொண்டு ஓட்டுப்போட்டவன்களால் தமிழகம் கதிக்கலங்கி நிற்கிறது


Thiruttu Thimuka
ஆக 05, 2024 16:29

திருட்டு திமுக விடியல் பரிசு !!! ஓட்டளித்த மக்களுக்கு!!! ???


ஆரூர் ரங்
ஆக 05, 2024 13:48

இவர்களுக்கு ஓட்டுப் போட்டவர்கள் வில்லன்கள்.


Gajageswari
ஆக 05, 2024 04:20

DTCP கட்டணம் வசூலிக்கப்படுகிறது TECHNICAL clearence மட்டுமே வழங்குகிறது. ஆனால் பஞ்சாயத் அனுமதி மறுக்கிறது. என்ன சட்டங்களோ.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை