உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / காங்., - எம்.பி., ராகுலின் பிடிவாதம்; இடியாப்ப சிக்கலில் கட்சி தலைமை

காங்., - எம்.பி., ராகுலின் பிடிவாதம்; இடியாப்ப சிக்கலில் கட்சி தலைமை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வரும் 3ம் தேதியுடன் வேட்புமனு தாக்கல் முடிவடையும் நிலையில், ராகுலின் பிடிவாதம் காரணமாக, அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகளில் வேட்பாளர்களை களம் இறக்குவது குறித்து முடிவெடுக்க முடியாமல் காங்., தலைவர்கள் குழப்பத்தில் உள்ளனர். காங்கிரசின் பாரம்பரியமிக்க தொகுதிகளாக, உ.பி.,யில் உள்ள அமேதி, ரேபரேலி ஆகியவை உள்ளன.

ராஜினாமா

பா.ஜ.,வின் செல்வாக்கு அதிகரிக்க துவங்கிய நிலையில், 2019ல், அமேதி தொகுதியில் ராகுலுக்கு எதிராக, பா.ஜ.,வின் ஸ்மிருதி இரானி களம் இறங்கி, 55,000 ஓட்டுகள் வித்தியாசத்தில் ராகுலை தோற்கடித்தார்.கட்சியின் தலைவரான ராகுலே தோற்றுப்போனதில், காங்கிரஸ் பெரும் அதிர்ச்சியடைந்தது. தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று, தலைவர் பதவியிலிருந்து ராகுல் ராஜினாமா செய்தார்.கட்சிக்குள் போதுமான ஒத்துழைப்பு இல்லை, மூத்த தலைவர்கள் தன்னை நம்ப வைத்து ஏமாற்றிவிட்டனர் என்ற குமுறல் ராகுலுக்குள் இருந்தது. கடந்த தேர்தலில் கடைசி நேரத்தில் கேரள மாநிலம் வயநாட்டிலும் அவர் போட்டியிட்டதால், எம்.பி., பதவியை தக்க வைக்க முடிந்தது. தற்போதைய தேர்தலில் அவர் வயநாட்டில் மீண்டும் போட்டியிடுகிறார். அமேதியிலும் போட்டியிடுவார் என காங்., தலைவர்கள் எதிர்பார்த்தனர். இதுவரையில், ராகுல் பிடிகொடுக்கவில்லை. அவர் என்ன நினைக்கிறார் என்பது மூத்த தலைவர்களுக்கே தெரியவில்லை.அமேதி, ரேபரேலி இரண்டுமே காங்., தலைமையின் குடும்ப தொகுதி கள் என்பதால், அது குறித்து அந்த குடும்பம்தான் முடிவெடுக்க வேண்டு மென்று, மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட மூத்த தலைவர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். இரு தொகுதிகளிலும் மே 20ல் ஓட்டுப்பதிவு நடக்கவுள்ளது. வேட்புமனுத்தாக்கல் வரும் 3ம் தேதியுடன் நிறைவடைகிறது. அமேதியில் மீண்டும் ராகுல் களம் இறங்கி, ஸ்மிருதி இரானி மீண்டும் வெற்றி பெற்றுவிட்டால் ராகுலுக்கு பெரும் தர்மசங்கடம் ஏற்படும். பிரதமர் வேட்பாளர் என்ற நிலையில் உள்ள ராகுல், ஒரு அமைச்சரிடம் இரண்டாவது முறையாக தோற்கிறார் என்றால், அது பெரும் அவமானம். மேலும், அமேதியில் ராகுல் போட்டியிடாவிட்டால், 'உ.பி.,யை கைகழுவியது சோனியாவின் குடும்பம்' என்றும், 'போட்டியிட பயந்து ஓடிவிட்டனர்' என்றும், பா.ஜ., விமர்சனம் செய்யும்.

குடும்ப அரசியல்

--- நமது டில்லி நிருபர் -அடுத்ததாக, அமேதியில் பிரியங்காவை நிறுத்தி, அவர் வெற்றி பெற்று விட்டால், 'ராகுலால் முடியாததை, பிரியங்கா செய்து முடித்து விட்டார்' என்ற பேச்சும் எழும். அப்படி நிகழ்ந்தால், கட்சிக்குள் ராகுலைவிட பிரியங்காவின் கை ஓங்கும். இது, கட்சிக்குள் தேவையற்ற பிளவை ஏற்படுத்தும். பிரியங்காவின் கணவருக்கு வாய்ப்பு தரலாம் என்றால், குடும்ப அரசியல் விமர்சனம் மேலும் வலுப்பெற்று, நாட்டின் பிற தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பை குறைக்கும்.இத்தனை பெரிய குழப்பங்கள் சூழ்ந்து இருப்பதால்தான், அமேதி, ரேபரேலி தொகுதிகளில் வேட்பாளர்களை முடிவு செய்ய முடியாமல், இடியாப்பச் சிக்கலில் காங்., மேலிடம் சிக்கி தவிக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Kalyanaraman
மே 01, 2024 21:42

ராஜீவ்காந்தியே எழுந்து வந்து இங்கு போட்டியிட்டாலும் தோல்வி மட்டுமே மிஞ்சும் பாஜக அந்த அளவுக்கு வலிமையாக உள்ளது கூட்டணி கட்சியிடம் ஒதுக்கி விட்டு ஒதுங்குவதே மரியாதை


kulandai kannan
மே 01, 2024 18:25

அது என்ன குடும்ப தொகுதி??


duruvasar
மே 01, 2024 14:49

பிரியங்கா பையனை நிறுத்தலாம்


தமிழ்வேள்
மே 01, 2024 14:49

ஆரூர் ஜி, வெற்றி அல்லது தோல்வி குறித்து தழுவப்பட்டவருக்குத் தான் துல்லியமாக தெரியும்


Dharmavaan
மே 01, 2024 13:14

ராகுல்கான் குடும்பம் ஆணவம் யாரும் தன்னை கேள்வி கேட்பதை விரும்பாது ஒரு பலி ஆடு வேண்டும் மௌனசிங் போல எனவே பொறுப்பேற்கமாட்டார் back seat driving தான் பிடிக்கும்


குமரி குருவி
மே 01, 2024 12:59

காங்கிரஸ் கட்சிக்கு எத்தனை தலைவர்கள் வந்தாலும் சோனியா வாரிசுகளின் தலையீடு அதிகாரம் குறையாது ஏனெனில் காங்கிரஸ் குடும்ப கட்சி


பேசும் தமிழன்
மே 01, 2024 09:05

பப்பு.... நோகாமல் நொங்கு திங்க பார்க்கிறார் ....யாராவது வெற்றி பெற்று ...பிரதமர் பதவியை மட்டும் தனக்கு தந்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறார்


hariharan
மே 01, 2024 06:58

காங்கிரஸ் ஆட்சி காலத்தில் உப்புக்கு சப்பாணி பிரதமர், இப்போதைய தலைவரும் அதே ரகம். எப்படித்தான் இப்படி ஆமாஞ்சாமிகளை தேர்ந்தெடுக்கிறார்களோ? கார்கே இரண்டு தொகுதியிலும் களத்தில் இறங்கலாமே. தேர்தலில் போட்டியிடுவதற்குக்கூட ஆட்க்கள் இல்லை.


Balasubramanian
மே 01, 2024 06:00

அமேத்தியிலும் வயநாட்டிலும் போட்டியிட்டு இரண்டு தொகுதிகளிலும் தோல்வியை தழுவுவதே கௌரவம் !


ஆரூர் ரங்
மே 01, 2024 10:25

அப்புறம் பட்டாயா தொகுதியில் வெற்றிகரமான தழுவல்.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை