உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / மாநிலத்தின் வளர்ச்சியை புறக்கணிக்கும் தி.மு.க., அரசு

மாநிலத்தின் வளர்ச்சியை புறக்கணிக்கும் தி.மு.க., அரசு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'தமிழகத்திற்கு பல நலன்கள் கிடைக்கும் நிடி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதன் வாயிலாக, மாநிலத்தின் வளர்ச்சி மற்றும் நலன்களை விட, அரசியல் காழ்ப்புணர்ச்சிக்கு மட்டுமே தி.மு.க., அரசு முன்னுரிமை அளிக்கிறது' என, தமிழக பா.ஜ., தெரிவித்துள்ளது.

கம்பி கட்டும் கதை

அக்கட்சி அறிக்கை:உங்கள் அரசியல் காழ்ப்புணர்ச்சிக்கு, தமிழகத்தின் நலன்களை விட்டு கொடுக்கலாமா முதல்வர் ஸ்டாலின்? 'மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில், தமிழகத்திற்கு எந்த நலத்திட்டங்களும் இல்லை; தமிழகம் என்ற பெயரே பட்ஜெட்டில் இல்லை' என்ற தன் கம்பி கட்டும் கதையை உண்மையாக்கும் நோக்கில், பிரதமர் மோடி தலைமையில் நடக்கும் நிடி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதாக, ஸ்டாலின் அறிவித்துள்ளார். நாட்டின் சுமூக நிர்வாகத்திற்கு மத்திய, மாநில அரசுகள் இடையே ஒத்துழைப்பும், கூட்டுறவும் மிக அவசியம். இரு தரப்பின் கூட்டுறவையும், மாநிலங்களின் சமூக பொருளாதாரத்தையும் மேம்படுத்தும் நிடி ஆயோக் கூட்டத்தை, ஸ்டாலின் புறக்கணிப்பதாக கூறுவது ஏற்புடையதல்ல. தங்களுக்கு ஓட்டுப்போட்ட தமிழக மக்களின் பிரதிநிதியாக கூட்டத்தில் பங்கேற்று, அவர்களின் தேவைகளை எடுத்துரைக்க மறுப்பதன் வாயிலாக, தமிழகத்தின் வளர்ச்சிக்கு ஸ்டாலின் முட்டுக்கட்டை போடுகிறார். நிடி ஆயோக் வாயிலாக, தமிழகம் பல நன்மைகளை பெற்றுள்ளது.தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் தளமாக செயல்படும், 'அடல்' சமூக கண்டுபிடிப்பு மையம், தமிழகத்தில் துவக்கப்பட்டது.

காழ்ப்புணர்ச்சி

கடந்த, 2021ல் நகர்ப்புற பிரச்னைகளுக்கு தீர்வு காணும் நோக்கில், தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களுக்கான மாநாட்டை, நிடி ஆயோக் நடத்தியது. இவ்வாறு, தமிழகத்திற்கு பல நலன்கள் கிடைக்கும் நிடி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதன் வாயிலாக, மாநிலத்தின் வளர்ச்சி மற்றும் நலன்களை விட, அரசியல் காழ்ப்புணர்ச்சிகளுக்கு மட்டுமே தி.மு.க., அரசு முன்னுரிமை அளிக்கிறது என்பது தெளிவாகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

ems
ஜூலை 31, 2024 12:29

கூட்டத்தில் ஆங்கிலத்திலோ அல்லது ஹிந்தியில் 10 நிமிடம் பேச வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்கள்... நம்ம துண்டு சீட்டு அவ்வளவு நேரம் தாக்கு பிடிக்காதே.. அதனால் விடியக்கூடாது.. தமிழகம் என்று முடிவு எடுத்தார்... விடியல் முதல்வர்... இத போய் எல்லாரும் குற்றமா பார்க்கிறார்கள்...


Kaleel MAJEED
ஜூலை 29, 2024 20:58

சூடு சொரணை என்பதே கிடையாது என்ன சூடு பட்டாலும் திருந்தாத ஜன்மங்கள்


S Ramachandran
ஜூலை 29, 2024 10:46

It is true that chief minister is not interested in growth of Tamil Nadu. He is interested in growth of money in his family.


Kesavan
ஜூலை 29, 2024 10:45

அங்க வந்தா எங்கள பாத்தா எப்படி இருக்குது ஒன்றுமறியாத அப்பாவிகள் என்று தோன்றுகிறதா உனக்கு நீ யார் என்று தெரியும் கிளம்பு


RAMESH
ஜூலை 29, 2024 05:49

கொங்கு மண்டலத்தை தொடர்ந்து புறக்கணிக்கும் ஸ்டாலின் அரசு


ManiK
ஜூலை 28, 2024 20:28

ச்டாலினின் அநியாய செயல்களை மக்களிடம் நடுநிலை mediaகள் கொண்டுச்செல்ல தயங்கக்கூடாது. கேள்வி கேட்டால்தான் தெளிவு கிடைக்கும்.


Gopalu
ஜூலை 28, 2024 18:30

ஏன், பட்ஜெட்டில் தமிழக திட்டங்களுக்கு போதிய நிதி செலுத்த வில்லை குறிப்பாக மெட்ரோ பணிகள், வெள்ள நிவாரணம் போன்ற பணிகள் இதை கேட்க பாஜக விற்கு தெரியவில்லையா?


ஆரூர் ரங்
ஜூலை 28, 2024 14:38

மாநில வளர்ச்சி என்றால் மகன் மருமகனின் வளர்ச்சியைத்தானே குறிப்பிடுகிறார் ?


Ramesh Sargam
ஜூலை 28, 2024 13:28

தமிழக மக்களின் மீது கொஞ்சம்கூட அக்கறை இல்லாத முதல்வர் ஸ்டாலின். ஆனால் தன்னுடன் இருக்கும் அல்லக்கைகள், தன் குடும்பம் மீது அதிக அக்கறை உள்ளவர் அவர்.


A
ஜூலை 28, 2024 10:17

so 40/40 is waste... those 40 guys will make money only for themselves on contacts.. People who voted 40/40 will get 111


மேலும் செய்திகள்









புதிய வீடியோ