உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / விலை போன வேட்பாளர்கள்: தே.மு.தி.க., தோற்றதன் பின்னணி

விலை போன வேட்பாளர்கள்: தே.மு.தி.க., தோற்றதன் பின்னணி

சென்னை: அ.தி.மு.க., ஓட்டுகள் கைமாறியதாலும், வேட்பாளர்கள் விலை போனதாலும், திருவள்ளூர், மத்திய சென்னை தொகுதிகளில், தே.மு.தி.க., படுதோல்வியை தழுவியுள்ளது.அ.தி.மு.க., கூட்டணியில் இணைந்து, திருவள்ளூர், மத்திய சென்னை, கடலுார், தஞ்சாவூர், விருதுநகர் ஆகிய ஐந்து தொகுதிகளில் தே.மு.தி.க., போட்டியிட்டது. விருதுநகரில் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் களமிறங்கினார். திருவள்ளூரில் நல்லதம்பி, மத்திய சென்னையில் பார்த்தசாரதி, கடலுாரில் சிவகொழுந்து என, முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் களமிறக்கப்பட்டனர்.கடலுார் மற்றும் தஞ்சாவூரில் அ.தி.மு.க.,வினர் ஓரளவிற்கு வேலை பார்த்தனர். விருதுநகரில் முன்னாள் அமைச்சரும், மாவட்டச் செயலருமான ராஜேந்திர பாலாஜி உள்ளிட்ட அ.தி.மு.க., நிர்வாகிகள் ஒருங்கிணைந்து வேலை செய்ததால், குறைந்த ஓட்டுகள் வித்தியாசத்தில், விஜயபிரபாகரன் வெற்றியை இழந்துள்ளார்.ஆனால், திருவள்ளூர் தொகுதியில், காங்., கட்சி வேட்பாளருக்கு தே.மு.தி.க.,வால் ஈடுகொடுக்க முடியவில்லை. ரமணா, மாதவரம் மூர்த்தி, அப்துல் ரஹீம் ஆகிய அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள், தேர்தல் பணியில் ஆர்வம் காட்டவில்லை. செலவுக்கு பணம் இல்லாமல் திணறிய தே.மு.தி.க., வேட்பாளரை, அ.தி.மு.க.,வின் அனைத்து மட்ட நிர்வாகிகளும் ஓரங்கட்டி விட்டனர். கடைசி நேரத்தில் தே.மு.தி.க., வேட்பாளர் மட்டுமின்றி, அ.தி.மு.க., நிர்வாகிகளும் தி.மு.க.,விடம் சரண் அடைந்தனர். இதனால், 2.23 லட்சம் ஓட்டுகளை பெற்று, மூன்றாம் இடத்தை பிடிக்கும் நிலைக்கு தே.மு.தி.க., தள்ளப்பட்டது.மத்திய சென்னை தொகுதியை பொறுத்தவரை வேட்பாளர் பார்த்தசாரதி, ஆரம்பம் முதலே தேர்தல் பணியில் கவனம் செலுத்தவில்லை. தி.மு.க., - பா.ஜ., பலமான கவனிப்பை தொடர்ந்து, தேர்தல் பணியில் இருந்து ஒதுங்கி நின்றார். இதை உணர்ந்த அ.தி.மு.க., நிர்வாகிகளும், தேர்தல் பணி செய்யவில்லை. தி.மு.க., - பா.ஜ.,விற்கு மறைமுகமாக தேர்தல் பணியாற்றினர். இதனால், 72,016 ஓட்டுகள் தான் தே.மு.தி.க.,விற்கு கிடைத்தன.ஐந்து தொகுதிகளிலும் சேர்த்து 2.5 சதவீத ஓட்டுகளை மட்டுமே தே.மு.தி.க., பெற்றுள்ளதால், இந்திய தேர்தல் கமிஷன் வழங்கியுள்ள மாநில கட்சிக்கான அங்கீகாரம் பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Adhi Rangan
ஜூன் 07, 2024 09:52

விஜயகாந்துக்கு தான் செல்வாக்கு உனக்கு இல்லை என்பதை புரிந்துகொள்ளவும் பேரம் பேசி அரசியல் வியாபாரம் செய்வதை நிறுத்திவிட்டு வேறு பொழப்பை பார்க்கவும் அழுது அனுதாபம் தேடினால் நீ ஒன்றும் புகழ் பெட்ரா தலைவர் இல்லை


Govind Puramm
ஜூன் 06, 2024 21:12

2014கேப்டன் துணிவாக பாஜக வோட்டு கை கோர்த்து நின்றார் அப்போது திரு மோடி பிரதமர் அல்ல ஆனால் மனிதனுக்கு மகத்துவம் தந்தார் ஆனால் இவர்களோ அப்படி இல்லை


Jawahar k
ஜூன் 06, 2024 18:28

கேப்டனின் சாய்ஸ் நிச்சயம் பாஜக தான். அத்தனை மாவட்ட செயலாளர்களும் பாஜகவிற்கு ஆதரவாக தான் இருந்தார்கள். பாஜகவோடு கூட்டணி வைத்திருந்தால் நிச்சயமாக ஓட்டு சதவீதம் உயர்ந்திருக்கும் . மாநில கட்சி அந்தஸ்து காப்பாற்றப்பட்டிருக்கும்


தமிழ்
ஜூன் 06, 2024 12:29

கூட்டணிக்கட்சிகளிடம் தேர்தல் செலவுக்கு சில பல பெட்டிகளை வாங்கிக்கொண்டு இவர்கள் பாக்கெட்டை நிரப்பிக்கொண்டால் மட்டும் போதுமா. வேட்பாளர் என்ன அவர் சொந்த செலவிலிருந்து செய்வாரா. அப்படியே செய்தாலும் எவ்வளவு செலவு செய்யமுடியும்.


டேனியல்,இரட்சண்யபுரம்
ஜூன் 06, 2024 06:35

அக்கா பிரேமலதா இனிமேலாவது தன் அரசியல் பேராசைகளை ஒதுக்கி விட்டு நல்ல குடும்பத் தலைவியாக இருந்து கொண்டு கேப்டனின் ஆன்மா சாந்தியடைய உதவ வேண்டும்.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை