உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / அதிக வெப்பம், சூடான காற்றால் நாடு முழுதும் மக்கள் அவதி: தடுக்க திட்டம் வகுப்பது அவசியம்

அதிக வெப்பம், சூடான காற்றால் நாடு முழுதும் மக்கள் அவதி: தடுக்க திட்டம் வகுப்பது அவசியம்

சென்னை: நகரமயமாக்கல், வெப்ப தடுப்புக்கு சரியான மேலாண்மை திட்டம் இல்லாதது போன்றவற்றால், பெருநகர பகுதிகளில், வெப்ப அலை மற்றும் வெப்ப அழுத்தத்தின் அளவு அதிகரித்துள்ளது. இதனால், 'ஹீட் ஸ்ட்ரோக்' மற்றும் உயிர் பலி ஆகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.பருவ மழைக்கு முந்தைய கோடை காலத்தில், சென்னை, பெங்களூரு, டில்லி, ஹைதராபாத், கோல்கட்டா, மும்பை நகரங்களில், முன் எப்போதும் இல்லாத அளவுக்கு, வெப்ப அலை இயல்புக்கு மாறாக நிலவுகிறது. அதிகபட்ச வெப்ப நிலையும், முந்தைய ஆண்டுகளை விட, 3 டிகிரி செல்ஷியஸ் வரை அதிகமாக பதிவாகிறது.

வாகன பெருக்கம்

இதனால், இரவு நேரங்களிலும் புழுக்கம் குறைவதில்லை. கட்டடங்களின் பெருக்கத்தால், இந்த மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதை, பல்வேறு ஆய்வுகள் வெளிப்படுத்தியுள்ளதாக, அறிவியல் மற்றும் சுற்றுச்சூழலுக்கான மையம் தெரிவித்துள்ளது.அந்த மையம் மேலும் கூறியுள்ளதாவது: கடந்த, 10 ஆண்டுகளாக நாளுக்கு நாள் வெப்ப நிலை அதிகரித்த வண்ணம் உள்ளது. பருவ மழை காலத்தில் கூட, டில்லி, மும்பை மற்றும் கோல்கட்டாவில் அதிக வெப்ப காற்றும், வெப்ப அலையும் வீசுகிறது. இதற்கு கட்டுமானப் பகுதிகள் பெருக்கம், பசுமைப் பகுதி குறைவு, தொழிற்சாலைகள் அதிகரிப்பு, வெப்ப தடுப்புக்கான நகர கட்டமைப்பு மேலாண்மை இல்லாதது, முக்கிய காரணங்கள்.வெப்ப அழுத்தம் காரணமாக, தட்பவெப்ப நிலையிலும் மாற்றம் ஏற்படுகிறது. தட்பவெப்ப நிலை மாற்றத்துக்கான பல்வேறு அரசுகளுக்கான தொழில்நுட்ப குறிப்பின்படி, 1950ம் ஆண்டில் இருந்து வெப்ப அழுத்தம் அதிகரித்த வண்ணம் உள்ளது.புவி வெப்பமயமாதல் 1.5 டிகிரி செல்ஷியஸ் அளவில் நீடிக்கிறது. நகரப் பகுதிகளில் அதிக அளவுக்கு வெப்பம் உணரப்படுகிறது. உள்ளூர் வெப்ப தாக்கத்தால் இயல்பு நிலையில் இருந்து, 2 டிகிரி செல்ஷியஸ் அதிகமாகவே பதிவாகிறது.கட்டடங்களில் காற்றுவெளி இல்லாதது, முழுமையாக மூடப்பட்ட உயரமான கட்டடங்களில் இருந்து வெளியேறும் வெப்பம், கான்கிரீட் மற்றும் கட்டட பொருட்களில் இருந்து வெளியேறும் வெப்பம் போன்ற தாக்கங்கள் ஏற்படுகின்றன.ஒவ்வொரு நகரிலும் வெப்ப தாக்கத்தை தடுக்க, தனியாக திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும். இது வெறும் வெயில் காலத்துடன் நின்று விடாமல், ஆண்டுதோறும் வெப்ப சமாளிப்புடன் செயல்படும் கட்டுமான அமைப்புகள், எரிசக்தி மற்றும் கட்டட சூழல் நிலைகளை உருவாக்கும் விதமாக இருக்க வேண்டும்.வெறும் தரிசு நிலங்கள், அதிகரிக்கும் வாகன பெருக்கம், தொழிற்சாலை எண்ணிக்கைகள் அதிகரிப்பு, குளிர்சாதன பொருட்களின் அதிக பயன்பாடு ஆகியவற்றை குறைக்கும் வகையில், திட்டமிட வேண்டும்.

இரவு நேர வெப்பம்

காய்கறிகள் உள்ளிட்ட தோட்ட பகுதிகளை அதிகரிக்க வேண்டும். நீர்நிலைகளை சரியான முறையில் பராமரிக்க வேண்டும். இதற்காக செயற்கைக்கோள் படங்களை பயன்படுத்த வேண்டும். மேலும், நிலப் பயன்பாடு முறையில் மாற்றம் செய்து, பசுமைப் பகுதி மற்றும் நீர்நிலைப் பகுதிகளை அதிகரிக்க வேண்டும்.இவ்வாறு அறிவியல் மற்றும் சுற்றுச்சூழலுக்கான மையம் தெரிவித்து உள்ளது.அந்த அமைப்பின் நகரப் பகுதி ஆய்வக பிரிவு மேலாளர் அவிகால் சோம்வன்ஷி கூறுகையில், ''நகரங்களில் இரவு நேர வெப்பநிலை தொடர்ச்சியாக அதிகரித்த வண்ணம் உள்ளது. உடல் பாதிப்பு மற்றும் உயிரிழப்புகளை தடுக்க வேண்டிய தேவையை ஏற்படுத்திஉள்ளது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

ஆரூர் ரங்
மே 29, 2024 10:47

மக்கள் தொகை பெருகினால் பசுமைக்கு ஆபத்துதான். ஆற்று மணல். சிமெண்ட்டுக்கு மாற்றாக பழைய கட்டிடங்களை இடித்த கழிவுகளை ஆங்காங்கேயே மறுசுழற்சி செய்ய வழி காண வேண்டும். மாநகரங்கள் விரிவாக்கத்தை தடுத்து நிறுத்த வேண்டும். முக்கியமாக மக்களிடையே ஆடம்பரமறாற மினிமலிஸ வாழ்க்கை முறையை பரப்ப வேண்டும். இல்லையெனில் அடுத்த தலைமுறை வாழத் தகுதியான உலகம் மிச்சமிருக்காது.


மாடசாமி
மே 29, 2024 07:38

அங்கங்கே ரோடுகள் சைடில் ஏ.சி பொருத்தலாம். அதற்காக வழியில்.இருக்கிற மரங்களை வெட்டிரலாம். தொழில் வளர்ச்சி ஏற்படும். வல்லரசு ஆவதும் சுலபம்.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை