உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / முரண்டு பிடிக்கும் கேரளா; தமிழக அதிகாரிகள் அதிர்ச்சி

முரண்டு பிடிக்கும் கேரளா; தமிழக அதிகாரிகள் அதிர்ச்சி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோவை : கோவைக்கு மிக முக்கிய குடிநீர் ஆதாரமான, சிறுவாணி அணையின் முழு கொள்ளளவான, 50 அடிக்கு தண்ணீர் தேக்காமல், மதகை திறந்து, 1,000 கனஅடி தண்ணீரை கேரள அரசு திறந்து விட்டுள்ளது. இது, தமிழக அரசு அதிகாரிகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.கோவை மாநகராட்சி மற்றும் வழியோர கிராம மக்களுக்கு, குடிநீர் ஆதாரமாக விளங்கும் சிறுவாணி அணை, மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடரில், கேரள மாநில அடர்ந்த வனப்பகுதியில் அமைந்திருக்கிறது. அம்மாநில நீர்ப்பாசனத்துறை பராமரிக்கிறது.இரு மாநில ஒப்பந்தப்படி, நாளொன்றுக்கு, 10.1 கோடி லிட்டர் தண்ணீர், கோவை மக்களின் குடிநீர் தேவைக்காக எடுக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல், அணையின் இருப்புக்கேற்ப, தண்ணீர் எடுக்கப்படுகிறது.வழக்கமாக, தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவ மழை காலங்களில், சிறுவாணி அணை நிரம்பி வழியும். உபரி நீர் காட்டுவழிப்பாதை வழியாக மலை முகடுகளில் வழிந்தோடி பில்லுார் அணைக்கு வந்தடையும். அணையின் மொத்த உயரம், 50 அடி. கடந்த சில ஆண்டுகளாக, பாதுகாப்பு காரணங்களை கூறி, 5 அடி குறைவாக, 45 அடிக்கு மட்டுமே கேரள அரசு தண்ணீர் தேக்குகிறது.ஐந்தடி குறைவாக நீர் தேக்குவதால், கோடை காலங்களில் கோவை மாநகராட்சி பகுதி மக்களுக்கு குடிநீர் பற்றாக்குறை ஏற்படுகிறது.இதை சுட்டிக்காட்டி, முழு கொள்ளளவு தண்ணீர் தேக்க வேண்டுமென, கேரள அரசிடம், தமிழக அரசு பலமுறை வலியுறுத்தியுள்ளது. இருப்பினும், மழை பெய்யும்போது, பாதுகாப்பு காரணங்களை கூறி, மதகை திறந்து, தண்ணீரை வெளியேற்றுவதை கேரள அதிகாரிகள் தொடர்ச்சியாக செய்கின்றனர்.இச்சூழலில், கடந்த சில நாட்களாக, சிறுவாணியின் நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை தொடர்ந்து பெய்வதால், அணையின் உயரம் மெல்ல மெல்ல உயர்ந்து வந்தது. நேற்று முன்தினம், 40.54 அடியாக நீர் மட்டம் இருந்தது. நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி, நீர் பிடிப்பு பகுதியில், 4.7 செ.மீ., அடிவாரத்தில், 2.7 செ.மீ., மழை பதிவானது. இதன் காரணமாக, 42 அடியாக நீர் மட்டம் உயர்ந்தது. குடிநீர் தேவைக்காக, 9.47 கோடி லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டது.கன மழை தொடரும் என, வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்ததால், கேரள நீர்ப்பாசனத்துறை அதிகாரிகள், சிறுவாணி அணைக்கு விரைந்து சென்று, மதகை திறந்து 1000 கனஅடி தண்ணீர் வெளியேற்றினர்.கோவைக்கு தண்ணீர் எடுக்கப்படும், நீர்புகு கிணற்றில் நான்கு வால்வுகள் உள்ளன. இதில், மூன்று வால்வுகள் தண்ணீரில் மூழ்கியுள்ளன; 45 அடிக்கு தண்ணீர் தேக்கினால், நான்கு வால்வும் தண்ணீருக்குள் மூழ்கும்.ஆனால், நான்காவது வால்வு இன்னும் மூழ்கவில்லை; அதற்குள் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அணையின் முழு கொள்ளளவான, 50 அடிக்கு மழை நீரை தேக்க வேண்டுமென தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது.இருந்தாலும், கேரள அரசின் அறிவுறுத்தலுக்கு ஏற்ப, 45 அடிக்கு நீர் மட்டம் உயர்வதற்கு முன்பாகவே, மதகை திறந்து, தண்ணீரை கேரள நீர் பாசனத்துறை அதிகாரிகள் வெளியேற்றியதால், தமிழக அரசு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Gokul Krishnan
ஜூலை 21, 2024 08:26

அணையில் தண்ணீர் திறந்து விட போது முப்பது ரெண்டு பல்லை காட்டி கொண்டு பச்சை கொடி காட்டும் போது போஸ் கொடுக்கும் போது இனிக்கும் இப்போது தண்ணீர் வராவிட்டால் எம் பி எம் எல் ஏ பெயர் சொன்னால் கசக்கும்


Swaminathan L
ஜூலை 20, 2024 18:44

முல்லைப் பெரியார் vs சிறுவாணி


நிக்கோல்தாம்சன்
ஜூலை 20, 2024 18:23

இரண்டு மாநிலத்திலும் திமுகவின் கூட்டணி கட்சிகள் தான் ஆட்சியில் இருக்கு , அப்போ திமுக மக்களை வஞ்சிக்கிறதா?


Mahendrakumar R
ஜூலை 20, 2024 14:24

மோடி அரசு தான் காரணம் பழி போட்டுட்டார் முடிஞ்சு போச்சு


venugopal s
ஜூலை 20, 2024 13:42

வழக்கம் போல் தமிழக எம் பி க்கள் மீது பழியைப் போட்டு விட வேண்டியது தானே!


SVK SIMHAN
ஜூலை 20, 2024 13:26

திராவிட முன்னேற்றக் கழகம் ஒழிய வேண்டும் என தமிழகம் நினைத்திருந்தால் , ஓட்டுக்கு நம்மை விலை பேசிய போது, போதைக்கு அடிமை படுத்திட குறைவான மதுக்கடையை நிறைவாக எங்கும் உயர்த்திட்ட போது, கனிமவளங்கள் கொள்ளை போவதை தெருக்கூத்து போல் ரசித்த போது , யாரும் எவரும் எந்த தவறும் புரியலாம் தப்பே இல்லை என்ற மனநிலையை நாட்டில் விதைத்திட்ட போது ஒழித்திருந்தால் தமிழகம் தன்மான ஆட்சியாளர்கள் ஆட்சி கண்டிருக்கும். ஊபி கொத்தடிமை பிழைப்பு வீணர்கள் மிகுதியான தமிழகத்தில் மக்கள் நல்வாழ்வு என்பது அவரவரின் கனவே வாழ்க்கை.


Krishna Moorthy
ஜூலை 20, 2024 09:29

அரசின் கையாலாகாத போக்கே காரணம். கர்நாடக, கேரளா கூட்டணி கட்சியாக இருந்தும், ஏன் பேசி முடிக்க முடியவில்லை? இதை வைத்து மத்திய அரசை குறை கூறி, மக்களை குழப்பி, அரசியல் பிழைப்பு நடத்த வேண்டும். ஆறு, ஏரி, குளங்களை தூர்வாரி இருந்ததால் கூட போதும். அப்படி செய்துவிட்டால் மற்றவர்களை குறை கூறி அரசியல் செய்ய முடியாதே. மன்னர் எவ்வழி மக்கள் அவ்வழி


Arunachalam Avanashi
ஜூலை 20, 2024 14:02

பிரச்சினைக்கு தீர்வு கிடைத்து விட்டால் அரசியல் எப்படி செய்வது அடுத்து வரும் ஆயிரம் வருடங்கள் இந்த பிரச்சினை தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும்.


naranam
ஜூலை 20, 2024 08:07

நமக்குக் கூட்டணி தானே முக்கியம்! தமிழர் நலனைப் பற்றி இவன் கண்டு கொள்ள மாட்டார்...! இரட்டை வேடக் கம்யூனிஸ்ட்கள் மற்றும் தேச துரோகக் காங்கிரஸ் ஆகியோருடன் கூட்டணி தானே நமக்கு முக்கியம். தமிழர் துரோகி திமுக அரசு ஒழிய வேண்டும்.


A Viswanathan
ஜூலை 20, 2024 12:04

நமக்கு இண்டியா கூட்டணி தான் முக்கியம். மக்கள் நலனை பற்றி பிற்பாடு தான். அதுவும் கோவை


மேலும் செய்திகள்











சமீபத்திய செய்தி