உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / நிலச்சரிவு அபாய பகுதி வரைபடம் வெளியிட வேண்டும்: கட்டுமான துறை வல்லுனர்கள் வலியுறுத்தல்

நிலச்சரிவு அபாய பகுதி வரைபடம் வெளியிட வேண்டும்: கட்டுமான துறை வல்லுனர்கள் வலியுறுத்தல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: நிலச்சரிவு அபாயம் குறித்த விபரங்கள் அடங்கிய, 'கான்டூர் மேப்' எனப்படும், நிலத்தின் உயர வரைபடங்களை வெளியிட்டால், பாதுகாப்பு இல்லாத இடங்களில் கட்டடங்களை தவிர்க்கலாம் என, கட்டுமான துறை வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். கட்டட அமைப்பியல் பொறியாளர் பி.பாலமுருகன் கூறியதாவது: நீலகிரி மற்றும் சில மலை பகுதிகளில், மழை காலத்தில் நிலச்சரிவு அபாயம் அதிகம் இருப்பதாக தொடர்ந்து கூறப்படுகிறது. இங்குள்ள மண் அடுக்குகளின் தன்மை அடிப்படையில், ஆய்வாளர்கள் இந்த கருத்தை தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர். நிலச்சரிவு போன்ற பேரிடர்களை தவிர்க்க முடியாது என்றாலும், அதில், மனிதர்களுக்கும், சொத்துக்களுக்கும் ஏற்படும் பாதிப்பை குறைக்கலாம். பொதுவாக மலைப்பகுதிகளில் நிலத்தின் சாய்வு தளம் எப்படி அமைந்துள்ளது என்று பார்த்து, அதன் அடிப்படையில் தான் கட்டடங்கள் கட்ட அனுமதிக்க வேண்டும். இதற்காக புவியியல் துறை வாயிலாக, 'கான்டூர் மேப்' எனப்படும், நிலத்தின் உயர வரைபடங்கள் தயாரிக்கப்படுகின்றன. மாவட்டம், தாலுகா, கிராம அளவில் இந்த வரைபடங்கள் தயாரிக்கப்படுகின்றன. இதில், நிலத்தின் சாய்வு தளம், 45 டிகிரி வரை இருந்தால், அங்கு கட்டடம் கட்டஅனுமதிக்கலாம். இதற்கு மேல், சாய்வு தளம், கோணம் அதிகரிக்கும் போது அங்கு கட்டடங்கள் கட்டுவது நல்லதல்ல. அதை மீறி கட்டடங்கள் கட்டினால், நிலச்சரிவு, நிலநடுக்கம், மழை வெள்ளம் போன்ற பாதிப்புகளில் சேதம் அதிகமாகும். இந்த வரைபடங்களை அரசு வெளியிட்டால், பொது மக்களும், கட்டுமான நிறுவனங்களும், திட்ட அனுமதிவழங்கும் துறைகளும் கருத்தில் கொண்டு செயல்பட வாய்ப்பு ஏற்படும். குறிப்பாக, செங்குத்தான மலை பகுதிகளில் விதிகளை மீறி கட்டடங்கள் கட்டப்படுவதை, ஆரம்பத்திலேயே தடுக்க இது உதவும். எனவே, இந்த வரைபடங்களை மக்கள் பார்வைக்கு வெளியிட, தமிழகஅரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கூறினார்.

பாதிப்புகளை தவிர்ப்பது எப்படி?

மலைப் பகுதிகளில் குடியேறும் மக்கள், குறிப்பிட்ட சில நடவடிக்கைகள் வாயிலாக, நிலச்சரிவு போன்ற பாதிப்புகளை தவிர்க்கலாம். புவியியல் வல்லுனர்கள் கூறியதாவது: மலை பகுதிகளில் அதிக ஆழத்துக்கு வேர் விடும் வகை மரங்களை வளர்க்க வேண்டும் சூழலியல் தாக்க மதிப்பீடு இன்றி கட்டுமான பணிகளை மேற்கொள்ளக் கூடாது நீர் வழி பாதைகளின் ஓரங்களில், 'கான்கிரீட்' தடுப்பு சுவர்களை அமைக்க வேண்டும் சாலை ஓரங்கள், கட்டடங்கள் கட்டும் இடங்களை சுற்றி தடுப்பு சுவர்களை அமைக்க வேண்டும் நிலச்சரிவால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

JeevaKiran
ஆக 02, 2024 18:21

முதலில், மலை பகுதியில் ஏன் மனிதன் குடி போகவேண்டும். மலை / காடு இதெல்லாம் இயற்கை வளங்கள் விலங்குகள் மட்டும் தான் அங்கு வாழவேண்டும். அவை மலைகளையும் காடுகளையும் நன்றாகவே கவனித்து கொள்ளும்.

மேலும் செய்திகள்

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை