உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / மம்தாவிற்கு தலைவலி தரும் மருமகன்!

மம்தாவிற்கு தலைவலி தரும் மருமகன்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், மேற்கு வங்கத்தில் மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது, முதல்வர் மம்தாவின், திரிணமுல் காங்கிரஸ். 'இண்டியா' கூட்டணியுடன் சேராமல், தனித்து போட்டியிட்டு, 42 தொகுதிகளில் 29ல் வெற்றி பெற்றுள்ளது. 2019ல் 18 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்த பா.ஜ., இம்முறை 12 தொகுதிகளில் மட்டுமே வெற்றி.இப்படி வெற்றியைக் கொண்டாடும் நிலையில் உள்ள மம்தாவிற்கு மருமகன் அபிஷேக் பானர்ஜியால் குடைச்சல் என்கிறது கட்சி வட்டாரம்.அரசியலில் இருந்து ஒரு சிறிய ஓய்வு எடுத்துக் கொள்வதாக அபிஷேக் பானர்ஜி அறிவித்துள்ளார். இந்த ஓய்வு, மருத்துவ சிகிச்சைக்காக எனவும் அவர் தெரிவித்துள்ளார்.ஆனால், 'உண்மை அதுவல்ல' என்கின்றனர், சீனியர் தலைவர்கள். 'அளித்த தேர்தல் வாக்குறுதிகளை மம்தா நிறைவேற்றவில்லை' என, அபிஷேக் அதிருப்தியில் உள்ளாராம். தவிர, மேற்கு வங்கத்தில் ஜூலை 10ம் தேதி நான்கு சட்ட சபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது; இந்த தொகுதிகளுக்கு கட்சி அறிவித்துள்ள வேட்பாளர்கள் தேர்விலிலும் அதிருப்தியாம்.தற்போது எம்.பி.,யாக வெற்றி பெற்றுள்ள அபிஷேக், கட்சியின் சீனியர் பொறுப்பில் உள்ளதோடு, இளைஞர் அணித் தலைவராகவும் உள்ளார். 'இளைஞர்களுக்கு இடைத்தேர்தலில் வாய்ப்பு தரப்படவில்லை' என்பதும் இவருடைய குற்றச்சாட்டு என, சொல்லப்படுகிறது. இதனால், இடைத்தேர்தல் பிரசாரத்திலிருந்து விலகியிருக்கவே, இந்த தற்காலிக அரசியல் ஓய்வு என்கின்றனர் கட்சி தலைவர்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை