உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / திருமூர்த்தியில் மண் எடுக்கும் திட்டத்தில் சிக்கல்

திருமூர்த்தியில் மண் எடுக்கும் திட்டத்தில் சிக்கல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

உடுமலை : மழை துவங்கியுள்ளதோடு, அணைக்கு நீர் திறக்கும் வாய்ப்புள்ளதால், திருமூர்த்தி அணையிலிருந்து, விவசாயிகள் மண் எடுக்க, கால நேரத்தை நீடிக்க வேண்டும், என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.நீர் நிலைகளை துார்வாரி, கூடுதல் மழை நீர் சேமிக்கும் வகையிலும், விளைநிலங்களை வளமாக்கும் வகையில், விவசாயிகள் வண்டல் மண் எடுத்துக்கொள்ளும் திட்டத்தை, அரசு செயல்படுத்தி வருகிறது.இத்திட்டத்தின் கீழ், பி.ஏ.பி., திட்ட அணைகளில் ஒன்றான, திருமூர்த்தி அணையில், 4 சர்வே எண்களில், ஒரு லட்சத்து, 8 ஆயிரம் கன மீட்டர் மண் எடுக்க அனுமதியளிக்கப்பட்டது.ஆனால், ஆன்லைன் வாயிலாக, விவசாயிகள் விண்ணப்பிக்கும் போது, ஒரு சர்வே எண்ணில், 30 ஆயிரம் கனமீட்டர் எடுக்க மட்டுமே காட்டப்பட்டது. மீதம் உள்ள சர்வே எண்கள் இணையதளத்தில் உள்ளதால், விவசாயிகள் விண்ணப்பிக்க முடியவில்லை.தற்போது, 80க்கும் மேற்பட்ட விவசாயிகள், திருமூர்த்தி அணையில் மண் எடுக்க அனுமதி பெற்றுள்ளனர்.கடந்த, 12ம் தேதி, அணையில் மண் எடுக்கும் பணி துவங்கிய நிலையில், முதல்நாளில், தடம் சரியாக அமைக்க முடியாததால், லாரிகள், டிராக்டர்கள் மண்ணில் சிக்கி, பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.13ம் தேதி மண் எடுத்த நிலையில், தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்தது. இதனால், 8 நாட்கள் அணைக்குள் வாகனங்கள் செல்ல முடியாத சிக்கல் ஏற்பட்டது. அதற்கு பின், கடந்த, 22ம் தேதி மீண்டும் மண் எடுக்கும் பணி துவங்கியது.குறிப்பிட்ட நேரம் மட்டுமே விவசாயிகள் மண் எடுக்க அனுமதிக்கப்படுவதோடு, விடுமுறை நாட்களில் மண் எடுக்க முடியவில்லை.தற்போது, திட்ட தொகுப்பு அணைகள் நிரம்பி, விரைவில் தண்ணீர் எடுக்க உள்ளதால், 10 நாட்களுக்குள் மட்டுமே மண் எடுக்க முடியும் என்ற சூழல் உள்ளது.விவசாயிகள் கூறுகையில்,' திருமூர்த்தி அணையில் மண் எடுக்க அனுமதிக்கப்பட்டாலும், 10 நாட்களில், மழை காரணமாக, இரு நாட்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. தற்போது, திருமூர்த்தி அணைக்கு நீர் திறந்தால், முற்றிலும் மண் எடுக்கும் பணி பாதிக்கும். எனவே, காலை, 6:00 மணி முதல், மாலை, 6:00 மணி வரை மண் எடுக்கவும், விடுமுறை நாட்களிலும் அனுமதிக்க வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி