உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / கஞ்சா அரக்கனின் பிடியில் இளைஞர்கள்?: வேட்டை தொடர்ந்தாலும், சேட்டை குறையவில்லை

கஞ்சா அரக்கனின் பிடியில் இளைஞர்கள்?: வேட்டை தொடர்ந்தாலும், சேட்டை குறையவில்லை

திருப்பூர்: திருப்பூர் மாநகரில் புழக்கத்தை உள்ள கஞ்சாவை தடுக்கும் வகையில் அன்றாடம் போலீசார் கைது நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். போதை வஸ்துகளை பயன்படுத்தி இளம் தலைமுறையினர் தங்களது வாழ்வை தொலைப்பதாக போலீசார் கூறுகின்றனர்.தமிழகத்தில் சமீப காலமாக தாரளமாக கிடைக்கும் போதை மாத்திரை, போதை ஊசி, ஹெராயின், மெத்தாம் பேட்டமைன், கொகைன் உள்ளிட்ட போதை வஸ்துகளை பயன்படுத்திய சிறுவர்களும், இளம் தலைமுறையினரும் சீரழிந்து ரோடுகளில் உருளும் காட்சிகள் சகஜமாகி வருகின்றன. இதுதவிர, ஆளும்கட்சியில் பின்னணியில் இருப்பவர்கள் கஞ்சா உள்ளிட்ட போதை விற்பனையில் ஈடுபடுவதாக எதிர்கட்சிகளின் பிரதான குற்றச்சாட்டாக உள்ளது.இதன் காரணமாக, மாநிலம் முழுவதும் கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை, பதுக்கல் உள்ளிட்டவை கண்காணித்து நடவடிக்கை எடுக்க மாநகர, மாவட்ட போலீசாருக்கு டி.ஜி.பி., உத்தரவிட்டுள்ளார்.

தனிப்படை 'ரெய்டு'

தொழிலாளர் நகரமாக உள்ள திருப்பூரில் கஞ்சா பழக்கம் சர்வ சாதாரணமாக உள்ளது. மாநகர போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனையை கண்காணித்து, கைது நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில், ஸ்டேஷனுக்கு இரு போலீசார் விதம் என, 16 போலீசார், 2 எஸ்.ஐ., என, 18 போலீசார் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.ஸ்டேஷன் வாரியாக இக்குழு பிரிந்து அப்பகுதியில் கஞ்சாவை புழக்கத்தில் விடுபவர்கள், அதை பயன்படுத்துபவர்கள், சிறையில் இருந்து வந்தவர்கள் என, ஒவ்வொருவரையும் கண்காணித்து வருகின்றனர். கடந்த, மாதத்தில் மட்டும், 50 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து, 25 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.கைதானவர்கள் பெரும்பாலும், 15 வயது முதல், 25 வயது வரை உள்ள நபர்கள் அதிகமாக உள்ளனர். அதில், அதிகம் திருப்பூர் வட்டாரத்தை சேர்ந்தவர்கள். ஒரு சிலர் மட்டும் வடமாநிலத்தினர். பெரும்பாலும் கஞ்சாவை விற்பனை செய்வது, பயன்படுத்துவது தமிழகத்தை சேர்ந்தவர்களே அதிகமாக இருப்பதால் போலீசார் அதிர்ச்சியடைந்துள்ளனர்.இங்குள்ளவர்கள் கஞ்சா பயன்படுத்துவதை பார்த்து விட்டு, வடமாநிலத்தில் இருந்து வருபவர்கள் அங்கிருந்து கஞ்சா பொட்டலத்தை கொண்டு வந்து, இங்கு சப்ளை செய்கின்றனர். மேலும், கஞ்சா புழக்கம், பள்ளி, கல்லுாரிகள் வரை பாய்ந்துள்ளது. இதன் ஆபத்து தெரியாமல் இளம் தலைமுறையினர் அதன்பிடியில் சிக்கி தங்களது வாழ்வை தொலைத்து வருகின்றனர்.

தீவிர கண்காணிப்பு

போலீசார் கூறியதாவது: கஞ்சா விற்பனை செய் பவர்கள், பயன்படுத்துபவர்கள், பழைய குற்றவாளிகள் என, அனைவரையும் கண்காணித்து வருகிறோம். தற்போது உள்ள தலைமுறையினர் கஞ்சா, போதை ஊசி என, பல வகையில் சீரழிந்து வருவது வேதனையான ஒன்று.கமிஷனர் உத்தரவின் பேரில், ஸ்டேஷன் வாரியாக தனிப்படையினர் கண்காணிக்கின்றனர். வெளிமாநிலம், மாவட்டங்களில் இருந்து பொது போக்குவரத்து மூலம் கடத்துகின்றனர். எவ்வளவு தான் கண்டுபிடித்து கைது செய்தாலும், வெளியே வந்து மீண்டும் கஞ்சா புகைக்கின்றனர் அல்லது விற்கின்றனர்.எனவே, குடியிருப்பு பகுதிகளில் இதுபோன்ற நபர்களின் நடமாட்டம், புழக்கம் இருந்தால் உடனடியாக அருகிலுள்ள போலீஸ் ஸ்டேஷனுக்கு பொதுமக்கள் தயக்கமின்றி தெரிவிக்கலாம். இவ்வாறு, அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Mani . V
மே 24, 2024 05:06

"கஞ்சா அரக்கனின் பிடியில் இளைஞர்கள்?: வேட்டை தொடர்ந்தாலும், அரசு ஆதரவுடன் விற்பனை குறையவில்லை" என்பதுதான் சரி


அப்புசாமி
மே 23, 2024 19:06

என்ன பெருசா வேட்டை? புடிச்சவங்கள்ள நாலு பேரை தூக்கில் போட்டால் வேட்டைன்னு சொல்லலாம். புடிபட்டவனுக்கு பெயில் வழங்க கோர்ட் ரெடியா இருக்கிற வரைக்கும் கஞ்சா புழக்கம் குறையாது.


தென்காசி ராஜா ராஜா
மே 23, 2024 13:53

தென்காசி பகுதியில் மிக மிக அதிக புழக்கத்தில் உள்ளது


முருகன்
மே 23, 2024 08:00

வடமாநிலங்களில் இருந்து வருகிறது என எழுதினால் நன்றாக இருக்கும்


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை