உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / ரூ.85,512 கோடியில் 2,170 கி.மீ., துாரம் தமிழகத்தில் புதிதாக 25 நெடுஞ்சாலைகள்

ரூ.85,512 கோடியில் 2,170 கி.மீ., துாரம் தமிழகத்தில் புதிதாக 25 நெடுஞ்சாலைகள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழகத்தில், 25 புதிய சாலைகள் அமைக்கும் பணிகளை, 85,512 கோடி ரூபாயில் துவங்க, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் திட்டமிட்டு உள்ளது.தமிழகத்தில், 6,600 கி.மீ., தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டு, அண்டை மாநிலங்களுடன் இணைக்கப்பட்டு உள்ளன. இந்த சாலைகள், சரக்கு மற்றும் பயணியர் போக்குவரத்துக்கு பெரிதும் உதவி வருகின்றன. இதன் வாயிலாக, மாநிலத்தின் பொருளாதாரமும் உயர்ந்து வருகிறது.இந்த சாலைகள் வழியாக பயணிக்கும் வாகனங்களிடம் கட்டணம் வசூலிக்க, 67 இடங்களில் சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன.இந்நிலையில், மாநில நெடுஞ்சாலைத் துறை பராமரிப்பில் உள்ள சாலைகளை, தேசிய நெடுஞ்சாலைகளாக தரம் உயர்த்த திட்டமிடப்பட்டு உள்ளது. அதுமட்டுமின்றி புறவழிச்சாலை, புதிய தேசிய நெடுஞ்சாலைகள், உயர்மட்ட மேம்பால சாலைகளும் அமைக்கப்பட உள்ளன.இவ்வாறு, 2,170 கி.மீ.,க்கு 25 புதிய சாலை பணிகளை அடுத்தாண்டு துவக்க திட்டமிடப்பட்டு உள்ளது.இப்பணிக்கு, 85,515 கோடி ரூபாய் தேவைப்படும் என, தோராயமாக மதிப்பிடப்பட்டு உள்ளது. இதற்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது.இதுகுறித்து, தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரி ஒருவர் கூறியதாவது:மத்திய அரசு பொறுப்பேற்ற பின், இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதில், சாலை பணிகளுக்கு போதிய அளவில் நிதி ஒதுக்க முடியவில்லை. அடுத்த ஐந்து மாதங்களில் புதிய பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது.அப்போது, தமிழகத்தில் செயல்படுத்தப்படவுள்ள சாலை பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு உறுதி செய்யப்படும். அதை மனதில் வைத்து, 25 புதிய சாலைகளுக்கு விரிவான திட்ட மதிப்பீடு தயாரிப்பு பணி நடக்கிறது.இப்பணிகளை அடுத்தாண்டு திட்டமிட்டபடி துவங்க, மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி, முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.இவ்வாறு அவர் கூறினார்.

சென்னை - திருச்சி - மதுரை எட்டுவழி சாலை

சென்னை - சேலம் இடையே எட்டுவழிச்சாலை அமைப்பதற்கு, அ.தி.மு.க., ஆட்சியில் நில எடுப்புப் பணிகள் துவங்கின. இதற்கு விவசாயிகள், எதிர்க்கட்சிகள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது. இச்சாலை பணிக்கு மீண்டும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை தயாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. மாவட்ட கலெக்டர்கள், இதற்கான பணிகளை துவங்க வேண்டும். இதனால், திட்டம் கிணற்றில் போட்ட கல்லாக உள்ளது. இந்த சாலை பணியை அடுத்தாண்டு துவக்க, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஆர்வமாக உள்ளது.அது மட்டுமின்றி, சென்னை - திருச்சி - மதுரை இடையே, பசுமைவழிச்சாலை அமைக்கவும் திட்ட அறிக்கை தயாரிப்பு பணி நடக்கிறது. தற்போதுள்ள, சென்னை - திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலைக்கு மாற்றாக, புதிதாக சாலை அமைக்கப்பட உள்ளது. இப்பணிக்கு நிலம் கையகப்படுத்த அனுமதி கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Venkatesh Naidu
செப் 21, 2024 14:58

இந்தியாவில் ரோடு விபத்தில் அதிகம் தழிழகம் தான் முதலில் உள்ளது இதை நான் தினமும் செய்திதாள் டிவி பார்கிறேன் இதை நீங்கள் சரிசெய்ய வேண்டும் நான்குவழி சாலை 6 வழிசாலையாக மாற்ற வேன்டும் 6 வழிசாலை 8 லழி சாலையாக மாற்ற வேண்டும் இந்த கருத்து தனிபட் ட கருத்து கிடையாது ஒரு உயிர் என்பது ஒரு குடும்பத்தை எவ்வளவு பாதிக்கும் என்பது அனைவருக்கும். தெரியும்பரரத் தில் எத்தனை மக்கள்தொகை அந்த ளவுக்கு ரோடு வசதி இல்லை காலையில் பேரய் மாலையில் வீடு திரும்பும் என்ற நம்பிக்கை இல் ல ஆகவே எத்தக எதிர்புகள் வந்தாலும் அதைதாண்டி உங்கள் அற்ப னிப்பு வரவேண்டும் நித்தின் கட்கரி வணக்கம் ன் நமஸ்கார்


theyana guru
செப் 21, 2024 14:13

விவசாய நிலங்களை அழிக்காமல் சாலை அமைக்க வேண்டும்


மாயவரத்தான்
செப் 20, 2024 21:08

உங்களைப் போன்ற சுயநலத்திற்காக பொதுநலத்தை கெடுக்கும் ஆட்களால் தான் தமிழ்நாடு கெட்டு குட்டிச்சுவராக போய்க்கொண்டுள்ளது. போவதற்கும் வருவதற்கும் ஒரே ஒரு சாலை தான். எதிரே வரும் வாகனத்தை கடக்க வேண்டும் என்றால் இரண்டு வண்டிகளும் ரோட்டை விட்டு ஒரு வீலை கீழே இறக்க வேண்டும் என்ற நிலையில் இருந்த சாலைகளில் பயணித்தவர்களுக்கு தான் வாஜ்பாய் மோடி அவர்கள் கொண்டு வந்த நான்கு வழி எட்டு வழி சாலைகளின் அருமை தெரியும். 60 ஆண்டுகளுக்கு மேலாக இந்தியாவை ஆட்சி செய்த காங்கிரஸ் திமுக போன்ற கட்சிகளின் சுயநலத்தால் என்றோ சிங்கப்பூர் போன்று முன்னேறி இருக்க வேண்டிய தமிழ்நாடு இப்படி இருக்கிறது. 98 சதவீத பணிகள் முடிந்தன மழை வந்தால் தண்ணீர் தேங்காது என்ற திமுக அமைச்சர்களின் வாய்சவால் அறிக்கைகள் தண்ணீரில் மூழ்கி போனதை ஒரு சிறிய மழையிலேயே சென்னை கண்டு உணர்ந்தது. இந்தியா போன்ற நிலையில் இருக்கும் நாடுகள் முன்னேற வேண்டுமென்றால் மக்களின் பங்களிப்பால்தான் முடியும். இன்று தேசம் எங்கும் அதிவேகமாக சாலைகள் போடப்படுகின்றன, அதற்கு மக்கள் டோல்கேட்டில் பணம் கொடுத்துதான் ஆக வேண்டும் வேறு வழி இல்லை என்பதை சிந்திக்க தெரிந்தவர்கள் புரிந்து கொள்வார்கள்.


venugopal s
செப் 20, 2024 18:43

இருக்கும் மாநில நெடுஞ்சாலைகளை வெறுமனே பெயரை மட்டும் தேசிய நெடுஞ்சாலைகள் என்று மாற்றி கூடுதலாக ஐம்பது நூறு சுங்கச் சாவடிகளை புதிதாக நிறுவி தமிழக மக்களை கொள்ளையடிக்கும் மத்திய பாஜக அரசின் திட்டம் இது!


Lakshmi Kanth
செப் 20, 2024 12:59

இதனால் ஏழை ஜனங்களுக்கு எதுவும் உதவ போவதில்லை கடைசி வரை அவர்களை 500க்கும் ஆயிரத்துக்கும் அலைய விடுங்கள்


Murugan Tamil
செப் 20, 2024 11:45

இந்த மாதிரி திட்டம் எல்லாம் தேவையா என்று கூட யோசிக்காமல் ஒன்றிய அரசு கிடுக்கிப்பிடி சட்டம் இயற்றி வருகிறது என்பது தான் உண்மை


Murugan Tamil
செப் 20, 2024 11:43

இந்த மாதிரி திட்டம் எல்லாம் சரிதான் ஆனால் விவசாய நிலங்கள் கையகப்படுத்தும் விதமாக உள்ளது ஏற்கனவே நில புரமோட்டர்ஸ் ரியல் எஸ்டேட் பாதிக்குமேல் விவசாயத்தை அழித்து வருகிறது இவர்கள் திட்டம் கொஞ்சம் நஞ்சம் உள்ள விவசாய நிலங்களை நெடுஞ்சாலைத்துறை யினர் கையகப்படுத்தும் நிலை தொடர்ந்தால் மீதமுள்ள விவசாயமும் அழிக்கப் பட்டு விடும்


ஆரூர் ரங்
செப் 20, 2024 15:02

விளைபொருட்களை முக்கியமாக அழுகும் பொருட்களை)வேறு இடங்களுக்கு வேகமாக எடுத்துச் செல்ல சாலைகள் வேண்டுமா வேண்டாமா? 50 சதவீத விவசாய நிலங்கள் வானம் பார்த்த பூமிதான். அவர்களுடைய நிலங்களுக்கு அளிக்கப்படும் இழப்பீடு வாழ்நாளில் சம்பாதிக்கவே முடியாது. விவசாய சென்டிமெண்ட் அரசியல் சமீப கால ஏமாற்று டெக்னிக்.


HUMAYUN KABIR.R
செப் 20, 2024 10:54

ஏற்கனவே ஆரம்பித்த விக்கிரவாண்டி தஞ்சாவூர் புறவழிச்சாலை எட்டு ஆண்டுகளாக முடிக்காமல் அனைத்து வாகனங்களும் விழுப்புரம் உளுந்தூர்பேட்டை விருத்தாசலம் ஜெயகொண்டம் என கிட்டத்தட்ட 50 கிமீ அதிக பயணம் செய்து கும்பகோணம் செல்ல வேண்டிய அவல நிலை. தயவு செய்து கும்பகோணம் மக்களை பேட்டி எடுத்து தங்கள் பத்திரிகை யில் வெளியிட்டால் மாண்புமிகு நிதின் அவர்கள் துரித நடவடிக்கை எடுக்க வாய்ப்பு உண்டு. சமீபத்தில் அமைச்சர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டதாக செய்திகள் வந்தது. குறைந்தபட்சம் ஏற்கனவே உள்ள சாலைகளை சிறிது செப்பனிட்டாலே சிறிய வாகனங்கள் செல்ல ஏதுவாக இருக்கும். பயண தூரமும் குறையும், நேரமும் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் குறையும். ஹுமாயூன் கபீர்


சிவம்
செப் 20, 2024 17:03

ஆம். Humayun அவர்கள் சொன்னது போல விக்கிரவாண்டி கும்பகோணம் சாலைக்கு மிக முக்கியத்துவம் தரவேண்டும். இரண்டு - மூன்று வருடங்களுக்கு முன்பு இந்த வழித்தடத்தில் நடக்கும் சாலை வேலைகள் பற்றி நிதின் அவர்களிடம் கேட்ட போது, மத்திய அரசு எவ்வளவு பணம் கொடுக்கவும் தயாரா உள்ளது என்றும் நிலம் கையகப்படுத்தும் வேலையில் மாநில அரசிடம் தான் தொய்வு ஏற்பட்டுள்ளது என்றும், சொல்லியிருந்தார்


KayD
செப் 20, 2024 08:45

மரம் pochu மழை pochu இன்னும் என்ன எல்லாம் ஆக poguthu nu தெரியலயே


அப்பாவி
செப் 20, 2024 06:19

இருக்குற சாலைகளை ஒண்ணும் சீர் பண்ண மாட்டோம். அதுல எங்க கார்ப்பரேட்களுக்கு துட்டு வரப்போகுது?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை