உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / இந்தியாவில் 8% குறைந்த ஹிந்துக்கள்: முஸ்லிம் மக்கள் தொகை 43% அதிகரிப்பு

இந்தியாவில் 8% குறைந்த ஹிந்துக்கள்: முஸ்லிம் மக்கள் தொகை 43% அதிகரிப்பு

புதுடில்லி: நம் நாட்டில் 1950ல் இருந்து, 2015ம் ஆண்டுக்கு இடையே, ஹிந்துக்கள் மக்கள் தொகை 7.81 சதவீதம் குறைந்துள்ளது. அதே நேரத்தில், முஸ்லிம்களின் எண்ணிக்கை 43.15 சதவீதம் அதிகரித்துள்ளது, ஆய்வறிக்கையில் தெரிய வந்துள்ளது.பிரதமரின் பொருளாதார ஆலோசனை கவுன்சில், 'சிறுபான்மையினர் மக்கள் தொகை -- நாடுகள் இடையேயான நிலை' என்ற பெயரில் விரிவான ஆய்வை நடத்தியது.

பிரதிநிதித்துவம்

இது குறித்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவில், 1950 மற்றும் 2015ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில், பெரும்பான்மையினரான ஹிந்து மக்கள் தொகை 7.8 சதவீதம் குறைந்து, 78.06 சதவீதமாக உள்ளது. அதே நேரத்தில், முஸ்லிம்கள் மக்கள் தொகை 43.15 சதவீதம் அதிகரித்து, 14.09 சதவீதமாக உள்ளது. கிறிஸ்துவர்கள் மக்கள்தொகை 5.4 சதவீதம் உயர்ந்து, 2.36 சதவீதமாக உள்ளது.சீக்கியரின் மக்கள் தொகை 1.85 சதவீதம், புத்த மதத்தினரின் எண்ணிக்கை 0.81 சதவீதம் உயர்ந்துள்ளது. அதே நேரத்தில், ஜைனர்களின் எண்ணிக்கை 0.36 சதவீதம் மற்றும் பார்சி எண்ணிக்கை 0.004 சதவீதம் குறைந்துஉள்ளது. இந்த கணக்கெடுப்பு, எவ்வாறு மக்கள் தொகை உயர்ந்தது என்பதை கண்டுபிடிப்பதற்காக நடத்தப்படவில்லை. அதே நேரத்தில், சிறுபான்மையினருக்கு உரிய பிரதிநிதித்துவம் கிடைக்கிறதா என்பதை ஆராய்வதற்காக நடத்தப்பட்டது.இந்தியாவின் இந்த மக்கள் தொகை விபரங்கள், வேற்றுமையில் ஒற்றுமை என்ற அடிப்படையில் சுமுகமான சூழ்நிலை நிலவுவதையே காட்டுகிறது. சிறுபான்மையினருக்கு சிறப்பான சூழல் நிலவுகிறது என்பதையும் இது காட்டுகிறது. அதனால் தான், அண்டை நாடுகளில் இருந்து, இந்த காலகட்டத்தில் சிறுபான்மையினர் அதிகளவில் நம் நாட்டுக்குள் வந்துள்ளனர்.

பாதுகாப்பு

நம் அண்டை நாடுகளில் பெரும்பான்மையினர் எண்ணிக்கை, இதே காலகட்டத்தில் உயர்ந்துள்ளதும் ஆய்வில் தெரிய வந்துள்ளது. அதிலும், முஸ்லிம்கள் பெரும்பான்மையினராக உள்ள நாடுகளில் அவர்களுடைய மக்கள் தொகை உயர்ந்துள்ளது. மாலத்தீவுகள் மட்டும் இதில் விதிவிலக்காக உள்ளது. அதே நேரத்தில், முஸ்லிம்கள் பெரும்பான்மையினராக அல்லாத ஐந்து நாடுகளில், இலங்கை, பூட்டானில் மட்டும் பெரும்பான்மையின சமூகத்தினரின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.பொதுவெளியில் கூறப்படும் கருத்துக்களுக்கு மாறாக, இந்தியாவில் சிறுபான்மையினர் பாதுகாப்பாக இருப்பதுடன், வளர்ச்சியும் அடைந்து வருகின்றனர் என்பது இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது. தெற்காசியாவில் உள்ள மற்ற நாடுகளில், அங்குள்ள பெரும்பான்மையினர் எண்ணிக்கையே உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் சிறுபான்மையினர் எண்ணிக்கை குறைந்துள்ளது.

உதாரணம்

வங்கதேசம், பாகிஸ்தான், இலங்கை, பூட்டான், ஆப்கானிஸ்தான் ஆகியவற்றை இதற்கு உதாரணமாக கூறலாம். உலக அளவில் பெரும்பான்மையினர் மக்கள் தொகை, 22 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளது. அதுபோல ஒவ்வொரு கண்டத்திலும் இதே சூழ்நிலை நிலவுகிறது. பெரும்பான்மையின மக்கள் தொகை உயர்வு மிகவும் அதிகமாக உள்ள 20 நாடுகளை பார்க்கும்போது, அவை, முஸ்லிம் அல்லது கிறிஸ்துவ நாடாக உள்ளன.அதேபோல், பெரும்பான்மையின மக்கள் தொகை அதிகமாக குறைந்துள்ள, 20 நாடுகளில் மூன்று மட்டுமே முஸ்லிம் அல்லது கிறிஸ்துவ நாடாக உள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

காங்கிரஸ் மீது பா.ஜ., புகார்

இந்த ஆய்வறிக்கை குறித்து, பா.ஜ., தேசிய செய்தித் தொடர்பாளர் சுதான்ஷு திரிவேதி கூறியுள்ளதாவது: கடந்த 1951 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, ஹிந்துக்கள் எண்ணிக்கை 88 சதவீதமாகவும், முஸ்லிம்கள் எண்ணிக்கை 9.5 சதவீதமாகவும் இருந்தன. அதே நேரத்தில், 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இது முறையே, 79.8 மற்றும் 14.5 சதவீதமாக இருந்தன.முஸ்லிம்கள் மக்கள்தொகை எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.இந்நிலையில், எஸ்.சி., - எஸ்.டி., - ஓ.பி.சி., பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டில், முஸ்லிம்களையும் சேர்க்கப் போவதாக காங்கிரஸ் கூறி வருகிறது. அவ்வாறு செய்தால், இந்த பிரிவினருக்கு எதுவும் மிஞ்சாது. முஸ்லிம்கள் பல திருமணம் முறையை பின்பற்றுபவர்கள். அதனால், அவர்களுடைய மக்கள் தொகை தொடர்ந்து உயரும். இது, மத மாற்றத்துக்கும் வழிவகுக்கும். இதற்கு காங்கிரஸ் பதிலளிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

N Sasikumar Yadhav
மே 10, 2024 21:00

நல்லா பாய் கடை பிரியாணியா திங்க வேண்டியது... அப்புரம் எப்டி குழந்தை பொறக்கும்... நம்மாளுங்க சுத்தி சுத்தி... பாய் பிரியாணி கடை... மெடிக்கல் கடை... கிளினிக்கு... ஜிகர்தண்டா கடை... மதமென பிரிந்தது போதும்ன்னு கோவில் விழாக்கள்ல நீர் மோர்... ரோஸ் மில்க்ன்னு குடுக்கும் போது வாங்கி மாடு கழனி தண்ணி குடிக்கற மாதிரி குடிக்கும் போதே தெரியும் இப்டி குருவி செத்து போய் அலைவானுகன்னு.. அம்புட்டு தான்... கோட்டிய ஒடச்சு புட்டானுக... இப்போ டெஸ்ட் டயுப் பேபிக்கி அலயுறாங்க... அங்கேயும்... குல்லாக்கள் உயிர் அணுக்கள் தான் அதிகமாம்...


ஆதிகுடி கொற்கை
மே 10, 2024 19:22

கிறிஸ்துவ மக்கள் தொகை கணக்கு நம்பும்படியாக இல்லை ! மிகவும் குறைவாக தெரிகிறது..


Balasubramanian
மே 10, 2024 19:05

74% சதவிகித இந்துக்கள் ஐந்தாக பிரிந்து வாக்களித்தால் - ஆளுக்கு 14% சதவிகித வாக்குகள்! 14% சதவிகித மைனாரிட்டி வாக்குகள் ஒரு கட்சிக்கு சென்றால் - அந்த கட்சி 28% பெற்று வெற்றி பெறும்! இதனாலேயே எல்லோரும் அவர்களுக்கு பல சலுகைகள் அறிவித்து அவர்கள் வாக்குகளை பெற முயல்கின்றனர் - கடைசியாக 72% சதவிகிதம் தோல்வி அடைவது தான் நாம் காணும் தேர்தல் முறை!


vijai seshan
மே 10, 2024 16:54

ஒரு முடிவு கட்டியா ஆகணும் jai hinduisum


A1Suresh
மே 10, 2024 15:56

ஐரோப்பா, அமெரிக்கா என்று உலகெங்கிலும் இதுதான் பிரச்னை


Rajarajan
மே 10, 2024 14:57

சட்டபூர்வ நடவடிக்கை தேவை புரிந்தால் சரி


Rajesh
மே 10, 2024 13:14

இந்தியாவில் உள்ள ஹிந்துக்களின் தவறான கோட்பாடும் ஒரு காரணம் குழந்தைகள் அதிகமாக பெற்று கொள்வது கடவுள் ஆசிர்வாதம் என்பதை உணர மறுக்கிறார்கள் திருமணம் செய்யாமல் வாழும் பிரமசாரியம், இந்து மக்கள் தொகை குறைய காரணம் என்பதை உணர மறுக்கிறார்கள் ஒன்று பெற்றால் மீதி வாழ்க்கை வசதியாக வாழ முடியும் என்று படித்த ஹிந்துக்களின் முட்டால் தனம் பிற மதத்தின் உள்ள உடனே விவகாரத்து போல் இதில் இல்லை ஒன்றுக்கு மேல் கட்ட கூடாது என்ற சட்டமும், மத கோட்பாடும் காரணம் மேலே சொன்ன கருத்துகள் எல்லாம் ஏன் இந்து மக்கள் தொகை குறைகிறது என்ற ஒரு சிந்தனை மட்டுமே தவிர இந்து மதத்தை விமர்சிக்க வில்லை


பெரிய ராசு
மே 10, 2024 13:06

பொது சிவில் சட்டம் இயற்றப்பட்டு இரண்டுக்கு மேல் குழந்தை இருந்தால் சலுகை பறிக்கப்படவேண்டும் பெற்றோர்கள் மேல் கடும்நடவடிக்கை பாயவேண்டும்


P.Sekaran
மே 10, 2024 12:06

இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் நிம்மதியாக வாழ்கின்றனர் ஆனால் முஸ்லீம் நாட்டிலுள்ள முஸ்லீம்கள் எபொழுதும் உயிர் பயத்துடன் வாழ்கின்றனர் அதுதான் இந்தியாவில் முஸ்லிம் அதிகரிப்பதற்கான காரணமாக இருக்கும் மேலும் பொது சிவில் சட்டம் அமுலுக்கு வந்துள்ளதால் சதவிகிதத்தை கட்டுப்படுத்தலாம்


அசோகன்
மே 10, 2024 12:02

இப்படியே தன் இனத்தை பெருக்கி பின் தனிநாடு எடுப்பார்கள்...... ஏன் மேடையில் ஒரு பாதர் பேசவில்லையா வடக்கே முஸ்லிம்கள் தெற்கே கிறிஸ்துவார்கள் நாடாக மாற்றவேண்டும்.. ஹிந்துக்களை விரட்டி அடிக்கவேண்டும் என்றார்... ஹிந்துக்கள் விழிக்கும் போது நிலைமை அவர்களை மீறி சென்றிருக்கும்.. இப்போ உக்ரன் மக்கள் அழுதாலும் புரண்டாலும் ஒன்றும் செய்யமுடியாதே அதைப்போல்


மேலும் செய்திகள்









புதிய வீடியோ