உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / கேவலமாக பேசும் அமைச்சர்!

கேவலமாக பேசும் அமைச்சர்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தமிழக அரசியல் நிலை காரணமாக, தமிழக அதிகாரிகள் சிலர் டில்லிக்கு மாற்றலாக விரும்புகின்றனராம். டில்லியில் உள்ள சீனியர் அதிகாரிகளிடம், 'தமிழக அமைச்சர்கள், எங்களை மட்டமாக நடத்துகின்றனர்' என, புலம்புகின்றனர். வாய்ப்பு கிடைத்தால் டில்லிக்கு மாற்றலாகவும், இவர்கள் விருப்பம் தெரிவித்துஉள்ளனராம்.குறிப்பாக, ஒரு தமிழக அமைச்சரை பற்றி தான், இந்த அதிகாரிகள் அதிகமாக பேசுகின்றனர். வயதில் இளையவரான அந்த அமைச்சர், அதிகாரிகளின் வயது வித்தியாசம் கூட பார்க்காமல், ஒருமையில் பேசுகிறாராம். அதாவது போகட்டும் என்றால், கெட்ட வார்த்தைகளைச் சொல்லி திட்டுகிறாராம். காதால் கேட்க முடியாத அளவுக்கு, இந்த வசவுகளை வாங்கும் அதிகாரிகள், அதிர்ச்சியில் உறைந்துள்ளனராம்.புகைப்படத்திற்கு, 'போஸ்' கொடுக்கும் போது, ஏதோ நல்லவர், வல்லவர் போல காணப்படும் அந்த அமைச்சர்,பாரம்பரிய குடும்பத்தைச் சார்ந்தவர். 'இப்படி கண்டபடிபேசலாமா... சக அமைச்சர்கள் இவரை திருத்த மாட்டார்களா' என, ஏங்குகின்றனராம் அதிகாரிகள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 30 )

தமிழன்
ஜன 07, 2024 21:49

என்னவோ இவர் மட்டும் தான் இப்படி பேசுகிறார் என்பது போல சொல்றீங்க.. திமுகவில் கவுன்சிலர் முதல் அமைச்சர் வரை எல்லோருமே இப்படி தான்.. மக்களுக்கு அது போன்ற வார்த்தைகளை சொல்லி கொடுத்ததே இவர்கள் தான்.. தமிழில் இப்படி ஒரு வார்த்தையே இல்லை. இவர்கள் வளர்த்த தமிழில் தான் இப்படி.


தமிழன்
ஜன 07, 2024 21:44

அந்த அமைச்சர் "அவர்" தானே.... அதான் தெரியுமே..(அப்பனுக்கு பிள்ளை தப்பாமல் பிறந்து இருக்கு என்று கிராமத்து பக்கம் சொல்லுவார்கள்.)


Suppan
ஜன 07, 2024 21:05

"அந்த அமைச்சர்,பாரம்பரிய குடும்பத்தைச் சார்ந்தவர். 'இப்படி கண்டபடிபேசலாமா." ஹா ஹா பாரம்பரிய வழக்கப்படி கண்டபடிதான் பேசுவார். :பாரம்பரியத்துக்கு" மதிப்பு கொடுக்கவேண்டாமா? அப்புறம் பரம்பரைக்கே மதிப்பு இல்லாமல் போய்விடும்


Balasubramanyan
ஜன 07, 2024 16:17

Why afraid everybody knows who is he.


Barakat Ali
ஜன 07, 2024 14:54

நெருங்க நெருங்க தகுதியில்லாதவர்கள் உயர் பதவிகளை அடைவார்கள் .......


தமிழ் மைந்தன்
ஜன 07, 2024 14:49

இதெல்லாம் சாதாரணம்


jss
ஜன 07, 2024 14:22

அமைச்சர்களுடைய வண்டவாளங்கள் எல்லாம் அதிகாரிகளுக்குத்தான் தெரியுமே. சும்மா ED/IT க்கு போட்டுக் கொடுத்தால் தீர்ந்த்து வேலை. அப்புறம் டிரான்ஸ்பர் வாங்கி கொண்டு நீட்டுங்க


NicoleThomson
ஜன 07, 2024 13:12

அந்த குடும்பத்தில் பிறந்து விட்டதால் அமைச்சர் பதவி , ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும் என்று கூறிய தமிழகத்தில் ஒழுக்கம் கெட்டவர்கள் எல்லாம் அமைச்சர்கள் என்றால் அது ஹைதர் அலி காலத்து ஆட்சியை போலல்லவா இருக்கிறது


ஆரூர் ரங்
ஜன 07, 2024 13:04

திருச்சி கிளைவ் ஹாஸ்டல் மாணவர்கள் மீது கொலை வெறித்தாக்குதல்???? காலத்திலேயே இந்த கும்பல் அன்பிலாதது ன்னு எல்லோருக்கும் தெரியும்.


GSR
ஜன 07, 2024 12:21

அதாவது, அந்த அமைச்சரின் இந்த குணம் குடும்பத்து பாரம்பரியம் என்கிறீர்களா?


மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ