உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / அ.தி.மு.க., காணாமல் போய் விடும்!

அ.தி.மு.க., காணாமல் போய் விடும்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

'தமிழகத்தில் அ.தி.மு.க.,வுடன் கூட்டணியை தொடர பா.ஜ., விரும்பியது. ஆனால், பழனிசாமியோ, எங்களை கழட்டிவிட முடிவெடுத்தார். இது, அவர் திடீரென எடுத்த முடிவல்ல; பல மாதங்களுக்கு முன்பாகவே முடிவு செய்து விட்டார்' என்கிறார் பா.ஜ.,வின் சீனியர் அமைச்சர் ஒருவர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=h6kdwyeo&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0'காங்கிரசுடன் பேச்சு நடத்த பழனிசாமி பல முயற்சிகளை மேற்கொண்டார்; இன்னமும் முயற்சித்து வருகிறார். இது, எங்களுக்கு முன்பே தெரியும்' என்கிறார் அவர். 'சிறுபான்மையினரின் ஓட்டுகளை குறி வைத்து, பா.ஜ., கூட்டணியிலிருந்து விலகி விட்டார். ஆனால், இந்த லோக்சபா தேர்தலில் அவர் காணாமல் போய் விடுவார். பலத்த தோல்வியை அ.தி.மு.க., சந்திக்கும்' என சொல்லும் அந்த சீனியர் தலைவர், தமிழகத்தில் பா.ஜ.,வின் நிலை குறித்தும் பேசினார்.'அண்ணாமலைக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. பா.ஜ.,வின் ஓட்டு வங்கி உயர அவர் பாடுபடுகிறார். தி.மு.க.,விற்கு எதிரான அலையை, தமிழகத்தில் பார்க்க முடிகிறது. தமிழக கூட்டணி குறித்து, விரைவில் முடிவெடுப்போம்' என்றார், அந்த சீனியர் பா.ஜ., அமைச்சர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 25 )

Sck
ஜன 07, 2024 20:19

எடப்பாடி அதிமுகவை அழித்த பெருமையாவது கிடைக்கும் என்று நினைக்கிறேன்


ராமகிருஷ்ணன்
ஜன 07, 2024 17:57

ஈ பி ஸ் மக்களின் மனநிலையை அறியாமலும், தன்னுடைய தகுதி, செல்வாக்கு புரியாமலும், ஈகோவினாலும் எடுத்த தவறான கூட்டணி முடிவுகள் தான் இன்று மிகப்பெரிய கொள்ளை கூட்டத்தை ஆட்சிக்கு வந்துள்ளது. ஈ பி ஸ் சிந்திக்க வேண்டும். அண்ணாமலையினால் மக்களின் மனநிலையை மாறி உள்ளதை புரிந்து கொள்ள வேண்டும். தன் கீழ் உள்ள அல்லக்கை திருடர்களின் தவறான யோசனைகளை கேட்டு தவறான முடிவுகள் எடுக்க கூடாது.


Vijay D Ratnam
ஜன 07, 2024 17:04

பெயரும் இல்லை, ஊரும் இல்லை. யாருப்பா அந்த சீனியர் தலைவர். இந்த திமுகவும் பாஜகவும் மீடியாக்களை வைத்துக் கொண்டு உருட்டுவதற்கு ஒரு அளவே இல்லையா. மாபெரும் மக்கள் ஆதரவை பெற்ற எம்.ஜி.ஆர் என்ற மாமனிதன் உருவாக்கிய மக்களுக்கான கட்சி அதிமுக. தான் உழைத்த இடத்தில சீனியர்கள் பலர் இருக்க தன்னால் முதலமைச்சர் ஆன கருணாநிதியிடம் கட்சியின் வரவு செலவு கணக்கில் பணம் முறைகேடு நடந்திருக்கிறது என்று நியாயமான கேள்வி எழுப்பப்போய் கட்சியை விட்டு விலக்கப்பட்ட எம்ஜிஆர் வெகுண்டு எழுத்து தொடங்கிய கட்சி அதிமுக தமிழ்நாட்டின் ஒரு பிராண்ட் ஆனது. அந்தக்கட்சி தனக்கான தலைமையை தானே கொண்டு வந்து நிறுத்தும். எம்ஜிஆர் மறைவை தொடர்ந்து எம்ஜிஆரின் மனைவியை டம்மியாக வைத்து கட்சியை எப்படியாவது கைப்பற்றிவிடவேண்டும் என்று துடித்த அப்போதைய நம்பர் டூவாக இருந்த ஆர்.எம் வீரப்பனிடமிருந்து, ஒரு எம்.எல்.ஏவாக கூட இல்லாத பெண்மணி ஜெயலலிதாவிடம் தலைமை பதவி வந்தது. இவரால்தான் இந்த கட்சியை வெற்றிகரமாக நடத்த முடியும் என்று தொண்டர்கள் ஒட்டுமொத்தமாக அவருக்கு பின்னால் வந்து நின்றார்கள். அவரும் அந்த கட்சியை தமிழகத்தின் மிகப்பெரிய கட்சியாக உருவாக்கி வைத்தார். அதிமுக தொண்டர்களையும் தாண்டி கட்சியல்லாத மக்களின் செல்வாக்கை பெற்ற கட்சியை கைப்பற்ற நினைத்து பலர் அரசியலில் தடம் தெரியாமல் போய் இருக்கிறார்கள். ஆர்.எம்.வீரப்பன், திருநாவுக்கரசர், நடராஜன், சசிகலா, டிடிவி தினகரன், தீபா, ஓ.பன்னீர்செல்வம் என்று. இன்று அதிமுக என்ற கட்சி பழனிசாமியை தலைமை பதவிக்கு கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறது. கட்சியின் தூணாக இருந்த ஜெயலலிதா மரணம். அதை தொடர்ந்து துரோகிகள் ஆட்டம், துரோகிகளுடன் சேர்ந்து எதிரிகள் நடத்திய போராட்டங்கள், அரசுக்கு கொடுத்த இடைஞ்சல்கள் என்று பல் பிரச்சினைகளை சந்தித்தது அதிமுக. எம்ஜிஆர், ஜெயலலிதா, இரட்டை இலை, அதிமுக கொடி இவை நான்கும் தமிழக மக்களின் மனதுக்கு நெருக்கமான எவர்க்ரீன் சக்ஸஸ் பிராண்ட். ஊர் பேர் தெரியாத சீனியர் தலைவர் சொல்கிறார், பாஜக வளர்ந்து இருக்கிறதாம். ஆமாம் வளர்ந்து இருக்கிறது. நாற்பதில் பத்து இடத்தில் உறுதியாக டெபாசிட் கைப்பற்றும். போட்டி இப்பவும் திமுக கூட்டணிக்கும் அதிமுகாவுக்கும்தான். DEVIL VS GOD. 2024 வார்ம் அப் பீரியட். ரியல் பைட் 2026 ல்தான்.


சந்திரன்,போத்தனூர்
ஜன 07, 2024 21:50

இப்ப நீ என்னதான் சொல்ல வர்ற இவ்வளவு நீள ரைட்டப் தேவையே இல்லை வேஸ்ட்..


ravi
ஜன 08, 2024 00:06

இரண்டு வருடத்தில் ஜெயலலிதா அம்மையார் அதிமுகவில் ராணி ஆகிவிட்டார். அந்த சமயம் அவர் முதல்வர் கூட கிடையாது. அவருடைய ஆளுமை அப்படி. அதெல்லாம் ஒபிஸ்க்கும் கிடையாது.இபிஸ்க்கும் கிடையாது. அதனால் தான் அதிமுக தொண்டர்கள் பாஜக பக்கம் சென்று விட்டனர்


Barakat Ali
ஜன 07, 2024 16:45

அதிமுக காணாமல் போய்விடும் ன்னு சொன்ன அந்த பாஜக தலை கூட்டணி முறிவு ஏற்படாவிட்டால் இப்படி பேசியிருப்பாரா ????


Mohamed Younus
ஜன 07, 2024 15:25

என்னதான் வட நாட்டில் ப.ஜ.க வெற்றி பெற்றாலும், அண்ணாமலையின் ஆர்ப்பாட்டம் தொடர்ந்தாலும் பா.ஜ.க வை தமிழகத்தில் தீண்ட தகாத கட்சியாக மற்ற கட்சிகள் பார்ப்பதில் பெருமை கொள்வோம். கடந்த தேர்தலில் ப.ஜ.க. உடன் தொடர்பை அறுத்து விட்டு வாருங்கள் என சமயம் சாதி அற்று அத்துணை பொது மக்களும் கூறியது அண்ணா .தி மு க வினரின் காதில் ரீங்காரம் செய்து கொண்டு இருக்கிறது . நாடு நலம் பெற , மக்கள் வளம் பெற இந்த நிலை நாடு முழுவதும் ஏற்பட இறைவனை பிரார்த்திப்போம் .


சங்கையா,முதுகுளத்தூர்
ஜன 07, 2024 21:53

என்ன வேணாலும் பிரார்த்தியுங்க ஆனா குண்டு மட்டும் வச்சுராதிங்க...


ravi
ஜன 08, 2024 00:07

பகல்கனவு ????????????????????


Sathyam
ஜன 07, 2024 13:13

ஆதிமூக காணாமல் மட்டும் அல்ல சீக்கிரமா நாசமா கூட போகும் வாழ்த்துக்கள் ஆழ்ந்த அனுதாபங்கள் , சீக்கிரமா உறவுக்கரங்க எல்லாருக்கும் சொல்லுங்கப்பு


Sathyam
ஜன 07, 2024 11:59

ஒர்ஸ்ட் ஒப் லக் டு .... கெட் அவுட்


ராஜா ????ராம்????.
ஜன 07, 2024 11:23

முற்றிலும் உண்மை.அதிமுக இதோடு முடிந்தது.தவறான முடிவு ஆனால் தமிழ்நாட்டிற்கு பிஜேபி தன் பலத்தை காட்டும் நல்ல நேரம்.????????????????????????


P Karthikeyan
ஜன 07, 2024 11:18

2017 வரை எடப்பாடி யார் என்று இந்த தமிழகத்துக்கு தெரியுமா ?? அப்படியேதான் தெரியாமலே அமுங்கிவிடுவார் ..


Bharathi
ஜன 07, 2024 09:14

POYE POCHU !!! POYINDHE


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை