உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / உருக வைத்த அயோத்தி மண்: கருணையே வடிவான ராமரின் கண்!

உருக வைத்த அயோத்தி மண்: கருணையே வடிவான ராமரின் கண்!

''அயோத்தி கும்பாபிஷேகம் நடந்த முதல் நாளிலேயே, பால ராமரை தரிசித்த பிரமிப்பில் இருந்து இன்னும் மீள முடியவில்லை,'' என, பிரபல ஆன்மிக சொற்பொழிவாளர் விசாகா ஹரி கூறினார்.

அவர் கூறியதாவது:

ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளை அழைப்பின்படி, மகன் ராஜகோபால் ஹரியுடன் அயோத்தி ராமர் கோவில் பிராண பிரதிஷ்டையில் பங்கேற்கும் பாக்கியம் கிடைத்தது. விமான நிலையத்தில் இறங்கியது முதல், மீண்டும் விமானம் ஏறியது வரை அளிக்கப்பட்ட வரவேற்பு சிறப்பாக இருந்தது. பிரம்மாண்டமான ராமர் கோவில் வளாகத்தில் அமர்ந்து பிராண பிரதிஷ்டை நிகழ்வை பார்த்தது, முதல் நாளிலேயே பால ராமரை தரிசனம் செய்தது என, அனைத்தும் ஒரு, 'மேஜிக்' போல இருந்தது. இதை அனுபவத்தில் தான் உணர முடியும்; வார்த்தைகளால் விவரிக்க முடியாது.பிராண பிரதிஷ்டைக்கு அழைக்கப்பட்டிருந்த, 15,000 பேருக்கும் தேவையான அனைத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. பிராண பிரதிஷ்டை முடிந்ததும், ஹெலிகாப்டரில் மலர்கள் துாவப்பட்டன. அப்போது, தேவர்கள் புஷ்ப பூஜை செய்வது போல இருந்ததுபிராண பிரதிஷ்டையில் பங்கேற்க கிடைத்த வாய்ப்பு, ராமரின் அழைப்பு என்று தான் சொல்ல வேண்டும். ராமர் விரும்பி இருக்காவிட்டால், இது சாத்தியமாகியிருக்காது. வந்தவர்கள் அனைவரும் வி.வி.ஐ.பி.,க்கள் என்றாலும், ராமர் முன் அனைவரும் மிகச் சாதாரணமானவர்களாகவே நடந்து கொண்டனர்.ராமர் கோவிலின் ஒவ்வொரு துாண்களும், ஒவ்வொரு சிற்பமும், ஒவ்வொரு சன்னிதியும் பிரம்மாண்டம்தான். அயோத்தி நகரும், ராமர் கோவிலும் தேவோலகம் போல இருந்தது. ராமர் பிறந்த நாளில், ராமருக்கு பட்டாபிஷேகம் நடந்த நாளில் எப்படி இருந்திருக்குமோ, அப்படி இருந்தது அயோத்தி நகரம்.எங்கு நோக்கினும் ராமர் மயம். அத்தனை கூட்டத்தில் காதில் கேட்டது ஜெய்ஸ்ரீராம் கோஷம் மட்டுமே. இந்த பிரமிப்பிலிருந்து இன்னும் மீள முடியவில்லை. அதை நினைத்தால் இன்னும் உடல் சிலிர்க்கிறது. ஆனந்த கண்ணீர் பெருக்கெடுக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

'வார்த்தைகள் வற்றி கண்ணீர் சுரந்தது'

'தமிழ் திரையுலகின் தந்தை' எனப்படும், இயக்குனர் கே.சுப்பிரமணியத்தின் மகள்; செவ்வியல் இசை, பரதநாட்டியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர்; இந்திய துணை கண்டத்தின் கல்வி மற்றும் கலாசார குழு உறுப்பினர்; பரதநாட்டிய மூத்த கலைஞர் என்ற பன்முகம் கொண்டவர் பத்மா சுப்பிரமணியம். இவர், அயோத்தியில் ராமர் பிராணப் பிரதிஷ்டையில் பங்கேற்க அழைக்கப்பட்டவர்.அவர் தன் அனுபவங்களை கூறியதாவது: சென்னையில் இருந்து லக்னோவுக்கு விமானத்திலும், அங்கிருந்து அயோத்தி வரை சொந்த காரிலும் வருவதாக கூறினோம். லக்னோ சென்றதும், மாலை போட்டு மரியாதை செய்து, காபி அருந்தும் முன் கார் பாஸ் கொடுத்து விட்டனர். காரில் புறப்பட்டபோது, எங்கும் காவிக்கொடியே பறந்தது.அயோத்தியை அடைந்ததும், 50 அடிக்கு ஒரு கடையில் சிறுமேடையிட்டு ராமர் பற்றிய பாடலோ, ஆடலோ நடந்து கொண்டிருந்தது. அதைச் சுற்றி பக்தர்கள் 'ஸ்ரீராம்' என கோஷமிட்டனர். சாலையின் இருபுறமும் 50 அடி கட்அவுட்டில், விதவிதமாக ராமர் நின்று ஆசி வழங்கினார்.ராமர் கோவிலின் ஒவ்வொரு கல்லிலும் கலைநயம் மிளிர்ந்தது. நிகழ்விடத்துக்கு சென்றதும், எங்களுக்கான கேபினுக்குள் அமர வைத்து, குடிநீர், காபி, உணவு உள்ளிட்டவற்றை வழங்கினர். இ-டாய்லெட்டும் சுகாதாரமாக இருந்தது. மோடி ஆராதனை காட்டியதும், ஒவ்வொரு பிளாக்காக அனுப்பினர். நான், ராமரின் அழகையும், அலங்காரத்தையும் கண்டு என்னை மறந்தேன். வாயிலிருந்த வார்த்தைகள் வற்றி விட்டன. கண்ணீர் பெருக்கெடுத்தது. 500 ஆண்டுகளுக்கு முன், அயோத்தியில் பிறந்தது போன்ற உணர்வு வந்தது.இவ்வாறு அவர் கூறினார்.

'சுவாசத்தில் கலந்த ராம பக்தி'

ஜி.உமாசங்கர், தலைவர், ஜி.யு.எஸ். குளோத்திங் நிறுவனம், திருப்பூர்.அயோத்தி மிகச்சிறிய கிராமம். அதன் தெருக்களில் நடந்த போது, மகாபாரதம், ராமாயணம் நாடகங்களில் இடம் பெற்றிருந்த அரங்குகள் போல் இருந்தது. அங்கிருந்த வீடுகள், அந்த காலத்து அரசர்கள் வீடுகள் போல காட்சி அளித்தன. அங்குள்ள மக்கள் ராமர் மீது அதிக பக்தி வைத்திருந்ததை பார்க்க முடிந்தது. மாற்று திறனாளிகள், பார்வையற்றவர்கள், 'ராம் ராம் சீதா ராம்' என்ற பாடலை, 13 மணி நேரம் பாடினர்.அவ்வளவு பக்தியை பார்க்க முடிந்தது. ராமர் மீதான பக்தி, அவர்களின் சுவாசத்தில் கலந்திருப்பதை பார்க்க முடிந்தது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

Anantharaman Srinivasan
ஜன 25, 2024 23:04

ராமாயண உபன்யாசங்கள் நிகழ்த்தும் வேலுகுடி கிருஷ்ணன் அயோத்தி கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டாரா..??அவரின் கருத்துக்களென்ன..??


Anantharaman Srinivasan
ஜன 25, 2024 22:50

அயோத்தி ராமருக்கு முகேஷ் அம்பானி பல கோடி ரூபாய் black ல் கொடுத்திருக்க வாய்ப்பு. எப்படி சம்பாத்தியமோ அப்படித்தானே தர முடியும். திருப்பதி உண்டியலில் தினமும் பல கோடி ரூபாய் விழுகிறது. ஊரை எய்த்தவர்கள் பெருமாளையும் பங்குதாரர் ஆக்குகிறார்கள். இனி ஆயோத்தி கோவில் உண்டியல் வடதிருப்பதியாக வசூல் செய்யும்.


Nachiar
ஜன 25, 2024 19:08

TV பார்த்து என் கண்களும் கலங்கியது மட்டுமல்ல இளகி ஒன்றிய மனம் மாறாமல் இன்னும் அப்படியே உளது. சில வருஷங்களுக்கு முன் மதுரா கோவில் சென்றேன். அந்த கோவிலின் நிலை கண்டு உடைந்த மனம் இன்னும் உடைந்தே உள்ளது. இந்தப் பிறவியிலாவது பாலகிருஷ்ணன் கோவில் மீண்டும் தரிசிக்கக் கூடிய நிலைக்கு கொண்டுவரப்பட பிரார்த்தனைகள்.


Sakthi Parthasarathy
ஜன 25, 2024 19:04

மிகவும் வசீகரமான இருக்கு..சிலை நேர்த்தியாகவும் இருக்கு


mrsethuraman
ஜன 25, 2024 18:47

ஒரு 5 வயது குழந்தை கண் போலவும் இருக்க வேண்டும் அதே சமயம் அதில் தெய்வீகமும் வெளிப்பட வேண்டும் .சவாலான விஷயம் .சிற்பி சாதித்து விட்டார் .


Veeramani Shankar
ஜன 25, 2024 17:01

One can't elaborate. It can be felt . Jai Sri Ram


Duruvesan
ஜன 25, 2024 14:11

ஆமாம் ரொம்ப தத்ரூபமா இருக்கு, கோடி நமஸ்காரம்


ராஜா
ஜன 25, 2024 12:54

குழந்தை இராமனின் முகம் இன்னமும் மனதில் இருந்து நீங்க மறுக்கிறது. கண்டிப்பாக ஒரு நாள் தரிசிக்காமல் இந்த பிறவி ஈடேராது.


Durai Kuppusami
ஜன 25, 2024 12:06

அயோத்தியை ஸ்ரீராமர் அன்னை சீதா மஹாலக்ஷ்மி முப்பதாயிரம் ஆண்டுகள் அரசாண்டு அவர்கள் அவதாரம் முடிந்து வைகுந்தம் செல்லும்போது அயோத்தியில் உள்ள ஜீவராசிகள் அனைத்தும் ஸ்ரீராமர் அன்னை ஜானகிதேவியுடன் வைகுந்தம் சென்றதாக ராமாயணம் சொல்கிறது .....அப்போது நாம் இல்லையே என்ற ஏக்கம் என் கண்களில கண்ணீர் கசிகிறது .........ஸ்ரீராம் சீதாராம் ஜானகிராம் ...........வளமோடு நம் பாரதம், மற்றும் இவ்வுலகம் வாழ்க ..........KUPPS


A1Suresh
ஜன 25, 2024 11:56

சாந்தோக்கிய உபநிஷதத்தில் கண்ணின் பெருமை பல இடங்களில் பேசப்படுகிறது. நமது அனைவரின் கண்களில் ஸத்தியத்தின் உருவில் பகவான் அமர்ந்திருக்கிறான். எனவே நீதிமன்றத்தில் ஒரு சாட்சி ஒரு குற்றத்தை நான் கண்ணால் பார்த்தேன் என்றும் மற்றொரு சாட்சி நான் காதால் கேட்டேன் என்றும் நிலைமை வரலாம். அப்பொழுது காதால் கேட்ட சாட்சியை விட கண்ணால் கண்ட சாட்சிக்கு தான் மதிப்பு அதிகம். ஏனெனில் கண்களில் ஸத்தியத்தின் உறைவிடமாக பகவான் வாழ்கிறார். இப்படி கண் பற்றி பேசப்படுகிறது. இதையே ஆழ்வாரும் கண் ஆவான் என்றும் மண்ணோர் விண்ணோர்க்கு தண்ணார் வேங்கட விண்ணோர் வெற்பனே என்று அதனை வழிமொழிகிறார்


மேலும் செய்திகள்











முக்கிய வீடியோ