உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / திருச்சூரை குறி வைக்கும் பா.ஜ.,

திருச்சூரை குறி வைக்கும் பா.ஜ.,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருச்சூர்: கேரளாவிலிருந்து இதுவரை பா.ஜ.,விற்கு ஒரு எம்.பி., கூட கிடையாது. வரும் லோக்சபா தேர்தலில் இதை மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார், மோடி. கேரளாவின் திருச்சூரில் சமீபத்தில் பேரணி நடத்தினார், மோடி. தற்போது மீண்டும் இம்மாதம் 16ல் திருச்சூர் வரவுள்ளார்.இந்த முறை பா.ஜ.,வின் முன்னாள் எம்.பி.,யும், நடிகருமான சுரேஷ் கோபி மகள் திருமணத்திற்கு வருகை தருகிறாராம். குருவாயூர் கிருஷ்ணன் கோவிலில் நடைபெறும் திருமணத்தில், மோடி பங்கேற்கிறார்.'கேரளாவின் கலாசார தலைநகரம்' என, அழைக்கப்படுகிறது திருச்சூர். இந்த தொகுதியில் தான், உலக புகழ் பெற்ற குருவாயூர் கோவில், வடக்குமாதன் சிவன் கோவிலும் உள்ளன. கடந்த, 2019ல் இந்த தொகுதியிலிருந்து போட்டியிட்டு, மூன்றாவது இடத்தைப் பிடித்து, தோல்வி அடைந்தார் சுரேஷ் கோபி. ஆனால் 2014 தேர்தலில் 11.5 சதவீதம் ஓட்டுகள் பெற்ற பா.ஜ., 2019ல் 28.2 சதவீதம் பெற்றது.இந்த தொகுதியில் 58 சதவீத ஹிந்துக்களும், 24 சதவீத கிறிஸ்துவர்களும், 17 சதவீத முஸ்லிம்களும் உள்ளனர். ஏற்கனவே கிறிஸ்துவ வாக்காளர்களை தன் பக்கம் இழுக்கும் முயற்சியில் ஈடுபட்டு, ஓரளவு வெற்றியும் பெற்றிருப்பதாக பா.ஜ.,வினர் கூறுகின்றனர்.இந்நிலையில், எப்படியாவது இந்த முறை திருச்சூரிலிருந்து பா.ஜ., - எம்.பி., தேர்ந்தெடுக்கப்படுவார் என்கிற நம்பிக்கையில் உள்ளாராம் மோடி; இந்த முறையும் சுரேஷ் கோபி தான் வேட்பாளராம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ