சென்னை: கூட்டணி தொகுதி உடன்பாட்டை விரைந்து முடிக்க, தி.மு.க., ஒருங்கிணைப்பு குழு திட்டமிட்டுள்ளது.தி.மு.க., கூட்டணியில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் உள்ளன. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=z38gtibe&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0காங்கிரசுக்கான தொகுதி பங்கீடு குறித்து, அக்கட்சி குழுவிடம், தி.மு.க., குழு நேற்று முன்தினம் முதல் கட்ட பேச்சு துவக்கியது. இந்த வாரம் இறுதிக்குள், இரு கம்யூனிஸ்டுகள், முஸ்லிம் லீக் கட்சிகளுடனான தொகுதி உடன்பாட்டை நிறைவு செய்யவும், அடுத்த மாதம் முதல் வாரத்திற்குள், காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சிகளின் தொகுதி பங்கீடு பேச்சை முடிக்கவும், தி.மு.க., ஒருங்கிணைப்பு குழு திட்டமிட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு பயணத்தை முடித்து, பிப்., 8ல் சென்னை திரும்புகிறார்.அடுத்த நாளான தை அமாவாசை தினத்தன்று, கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகள் உடன்பாட்டை, அவர் வெளியிடும் வகையில், அதற்கான நடவடிக்கைகளில் தி.மு. க., ஒருங்கிணைப்பு குழு ஈடுபட்டுள்ளது.