உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / கனவும் நிஜமும்; பா.ஜ., பிரசாரம்

கனவும் நிஜமும்; பா.ஜ., பிரசாரம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

'கனவு - நிஜம்' என்ற பெயரில், பிரதமர் மோடி அரசு செயல்படுத்தியுள்ள திட்டங்கள் குறித்து, சமூக வலைதளங்களில், தமிழக பா.ஜ., தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளது.'கனவு' என்ற தலைப்பில், 'அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட வேண்டும்' என்றும்; அதற்கு எதிரே பிரதமர் மோடி படத்துடன், 'நிஜம்' என்ற பெயரில், 'பகவான் ஸ்ரீராமர் அயோத்திக்கு வந்து விட்டார்' என்றும் கூறப்பட்டுள்ளது.மேலும், 'நாட்டில் ஒரே அரசியலமைப்பு, ஒரே சட்டம் இருக்க வேண்டும்' என்பது கனவு என்றும், அதற்கு எதிரே, 'ஜம்மு காஷ்மீரில், 370 பிரிவு நீக்கப்பட்டது' என்பது நிஜம் என்றும் சொல்லப்பட்டு உள்ளது. 'இந்தியா வறுமையில் இருந்து விடுபட வேண்டும்' என்பது கனவு; 'ஒன்பது ஆண்டுகளில், 25 கோடி மக்கள் வறுமையில் இருந்து விடுபட்டுள்ளனர்' என்பது நிஜம் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.'லோக்சபா மற்றும் சட்டசபைகளில் பெண்களின் அதிகபட்ச இருப்பு' என்பது கனவு; 'லோக்சபா, சட்டசபைகளில் அதிக பெண்கள் பங்கேற்பு' என்பது நிஜம் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.இதேபோல், மத்திய அரசு அமல்படுத்திய ஒவ்வொரு திட்டங்களும் தெரிவிக்கப்பட்டுள்ளன.அடுத்தடுத்த கட்டங்களில், இதையே தி.மு.க.,வோடு ஒப்பிட்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபடவும், தமிழக பா.ஜ.,வினர் திட்டமிட்டுள்ளனர். தி.மு.க., கடந்த தேர்தல்களில் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை பட்டியலிட்டு, அதில் எதையெல்லாம் செய்யாமல் மக்களை ஏமாற்றினர் எனவும், இதே கனவு - - நிஜம் பாணியில் பிரசாரத்தில் ஈடுபடவுள்ளதாக பா.ஜ., வட்டாரங்கள் கூறின.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 28 )

Oviya Vijay
பிப் 11, 2024 10:43

இங்கே இருநூறு ஊவா வாங்கிக் கொண்டு உபிஸ்-ஸா கூட இருந்து விடலாம். ஆனால் பீசப்பி கட்சியில் மட்டும் இருந்து விடக் கூடாது. மகா கேவலம்.


G Mahalingam
பிப் 10, 2024 19:45

மது பணம் பிரியாணி போதைக்கு ,60 சதவீத தமிழக மக்கள் அடிமை ஆகி விட்டார்கள். அந்த தைரியத்தில் திமுக விளையாடுகிறது. 40 தொகுதி வெற்றி பெற்றாலும் நாய்க்கு தேங்காய் கொடுத்து கதிதான். 10 வருடம் அதே தேங்காய் அடுத்த 5 வருடமும் அதே தேங்காய்தான். இப்போது அழுகி இருக்கும்.


வீரபத்திரன்,கருங்காலக்குடி
பிப் 10, 2024 15:36

இந்த திருட்டு திராவிடமாடல் ஆட்சியின் லட்சணத்தை பற்றி தமிழக மக்களுக்கு தெரியாதா?


தமிழ்
பிப் 10, 2024 17:48

உனக்கு தெரிந்ததைவிட மக்களுக்கு அதிகமாகவே தெரியும்.


nepo abi
பிப் 10, 2024 15:05

இந்த முறை தெரிந்துவிடும்... பிஜேபியின் தமிழக நிலவரம்


Amar Akbar Antony
பிப் 10, 2024 13:27

இந்த கருத்து கணிப்புகள் திட்டமிட்டே கொண்டுவரப்பட்டுள்ளது. இதில் தீய மு க வின் அரசியல் ஜாலம் உள்ளது "ஒரு கல்லில் இரு மாங்காய்" என்பார்களே அதுதான் தெளிவாக இந்த மாதிரி கருத்து திணிப்பால் இந்த இளம் புரட்சி நடைபயனத்தால் உருவாகியுள்ள ஏகோபத்திய ஆதரவுகளை மாற்ற ஒரு குழப்பத்தை உருவாக்கி, கருத்து கணிப்பில் "இவர்கள் தான் முன்னணி வெற்றிபெறுவார்கள்" ஆகவே நாமும் அதற்கே வாக்களிப்போம் என்று பொதுவாக வாக்களிக்கும் கூட்டத்திற்காக இது பயன்படும். மற்றது தீய கூட்டணியினர்களின் தீய தலைவருக்கு தொகுதி பங்கீட்டில் தான் சொல்வதை மட்டும் ஏற்றுக்கொள்ளவேண்டும் காரணம் திணிப்பு கணிப்பு அப்படி என்று கூட்டணியினரை கைக்குள் கொண்டுவர நடத்தப்பட்ட நாடகம். எனவே நாம் தலைவர் சொல்வது போல் திணிப்பை ஏற்றுக்கொள்ளாமல் அதே சமயம் இனியும் நம்மால் முடிந்தவரை இன்றைய சாணக்யராம் நமது பாரத பிரதமரின் உண்மைத்தன்மையை தன்னலமற்ற ஆட்சியை ஒவொரு வாக்காளர்களின் மனதில் படிய வைப்போம். மேலும் கடந்த ஐந்து மாநில தேர்தலில் சதீஷகர் மாநில முடிவுகள் கருத்து கணிப்பை தகர்த்தது அது போல இந்த கணிப்பையும் தகர்த்து வெற்றிவாகை சூடுவோம். அதுவே நமக்கு முதல் பணி. வாழ்க பாரதம் ஜெய் ஹிந்த்


திகழ்ஓவியன்
பிப் 10, 2024 13:22

அண்ணாமலை ஒரு நாளைக்கு ஒரு கிலோமீட்டர் தூரம் நடந்து விட்டாரா. இப்படி நடந்தால் அவர் உடம்பு என்னத்துக்கு ஆவது. ஒரு படத்தில் ஒரு ஆட்டோ ட்ரைவர் நகைச்சுவை நடிகரை ஆட்டோவில் ஏற்றிய இடத்தையே ஒரு சுற்று சுற்றிவிட்டு அவர் கேட்ட இடம் வந்து விட்டது என்று இறங்க சொல்லி கட்டணத்தை வாங்கி கொண்டு ஓடிவிடுவார்.


ஜெயகடா,குரோம்பேட்டை
பிப் 10, 2024 15:18

அண்ணாமலை என்ற பேரை கேட்டாலே உபிஸ்கள் அலற ஆரம்பிச்சுடுறாய்ங்க????


பேசும் தமிழன்
பிப் 10, 2024 18:24

அது உங்கள் விடியல்.... சின்ன சின்ன ஸ்டாலின்.... செய்வது.... அடுத்தவர்களை அப்படி நினைக்க கூடாது.


சுபாஷ்சந்திரன்,கும்மிடிப்பூண்டி
பிப் 10, 2024 12:18

அண்ணாமலைக்கு நாளுக்கு நாள் மக்களின் ஆதரவு பெருகிக் கொண்டேதான் போகிறது இதை நான் நேற்று என்னுடைய ஊரில் நேரிடையாக கண்டேன் (எங்கள் குடும்பத்தினர் காங்கிரஸ் அனுதாபிகள்)பாஜகவின் தனித்த ஓட்டு சதவீதம் கடைசி நேர அலையில் 22 சதவீதம் வரை உயர்வதற்கு வாய்ப்புள்ளது கூட்டணியுடன் சேர்த்தால் அது 30 முதல் 35 சதவீதம் வரை சென்று விடுவதால் பாஜக கூட்டணி 12 தொகுதிகள் வரை வெல்ல வாய்ப்புள்ளது எனவே தமிழகத்தில் பாஜகவிற்கு நல்ல எதிர்காலம் காத்துக் கொண்டிருக்கிறது என்பது மறைக்க முடியாத உண்மை.


திகழ்ஓவியன்
பிப் 10, 2024 13:23

சீமானுக்கு கூட தான் கூட்டம் கூடுகிறது..... அண்ணாமலை விஷயம்


அசோகன்
பிப் 10, 2024 12:02

1996 ரில் 16 % வாராகடனாக காங்கிரஸ் வாங்கிகளில் வைத்திருந்தது....2004 குள் இது 7.8 % வாஜிபாய் யால் குறைக்கப்பட்டது......2014 வருடத்தில் 12 %=மீண்டும் பெறுக்கியது திமுக காங்கிரஸ்...... இப்போது 3.2 % ஆக குறைத்துள்ளது அதாவது வசூலித்துள்ளது மோடி அரசு. ஆனால் திமுக காங்கிரஸ் புளுகு மூட்டைகள் மோடிதான் வாராகடன் கொடுத்தார் என்று வாய் கூசாமல் பொய் பேசிந்திரிகின்றனர்...... வாராகடன் கொடுத்து கொள்ளை அடித்தது திமுகவும் காங்கிரஸ் ம் தான்


திகழ்ஓவியன்
பிப் 10, 2024 13:24

உண்மை நீங்கள் சொல்லுவது அதனால் தான் 55000 கோடி கடனில் இருந்த 200000 LASKM கோடி க்கு சொந்தக்காரன்


Sampath Kumar
பிப் 10, 2024 10:58

நிஜம் எல்லாம் கணவகனும் கனவு எல்லாம் நிஜமாகவும் மாரி விட்டதை பிஜேபி


Oviya Vijay
பிப் 10, 2024 09:47

எப்படி இருந்தாலும் நோட்டாவை கிராஸ் பண்ண முடியாது


sridhar
பிப் 10, 2024 10:16

உன் வோட்டு உங்க பாதிரி சொல்ற ஆளுக்கே போடு. அப்போ தான் ரொட்டி பால் கிடைக்கும் , விடாதே .


கலிவரதன்,திருச்சி
பிப் 10, 2024 12:20

இனி இப்படிச் சொல்லி சொல்லிதான் உன்னுடைய வயித்தெரிச்சலை தீர்த்துக் கொள்ள முடியும்.????


மேலும் செய்திகள்











சமீபத்திய செய்தி