உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / வீடு வீடாக ஏறி இறங்குங்கள்; முடிந்த உதவிகளை செய்யுங்கள்! கட்சியினருக்கு துணை முதல்வர் ஊக்கம்

வீடு வீடாக ஏறி இறங்குங்கள்; முடிந்த உதவிகளை செய்யுங்கள்! கட்சியினருக்கு துணை முதல்வர் ஊக்கம்

''நமக்கு அடுத்து வரும் 15 மாதங்கள், 'கோல்டன் பீரியட்' மாதிரி. எனவே, ஒவ்வொரு வீடாக ஏறி இறங்குங்கள். பொதுமக்கள் முன்வைக்கிற கோரிக்கைகளை கேட்டு, உங்களால் முடிந்தவரை நிறைவேற்றிக் கொடுங்கள்,'' என, கட்சியினருக்கு துணை முதல்வர் உதயநிதி அறிவுறுத்தினார்.விழுப்புரம் மாவட்ட தி.மு.க., சார்பு அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், நேற்று முன்தினம் நடந்தது. அதில் உதயநிதி பேசியதாவது: கடந்த சில ஆண்டுகளாக சந்தித்த அனைத்து தேர்தல்களிலும், வெற்றியை மட்டுமே தி.மு.க., பெற்று வருகிறது. அடுத்து வர இருக்கும் 2026 சட்ட சபை தேர்தல், மிக முக்கியமான தேர்தலாக இருக்கப் போகிறது. அந்த முடிவுகள் வரும் நாளிலும், முதல் இயக்கமாக தி.மு.க., தான் இருக்க வேண்டும்.கட்சியில் 23 சார்பு அணிகள் உள்ளன. அந்த காலத்தில் போருக்கு செல்கின்றனர் என்றால், கும்பலாக, கூட்டமாக செல்பவர்களைவிட, திட்டமிட்டு அணி அணியாக செல்வோர் தான் வெற்றி பெறுவர். அதுபோல் நாமும் அணி அணியாக திட்டமிட்டு, தேர்தல் பணிகளை ஒருங்கிணைந்து செய்தால், 200 தொகுதிகளில் வெற்றி என்ற இலக்கை நிச்சயம் அடைய முடியும்.களப்பணிதான் உங்களை மெருகேற்றும்; வெளி உலகுக்கு காட்டும். உங்கள் ஒவ்வொருவராலும் 500 ஓட்டுகளை திரட்ட முடியும் என்ற சூழல் வந்து விட்டால், உங்களை யாராலும் தவிர்க்க முடியாது; அசைக்க முடியாது. அதற்கான செயல் திட்டத்தை வகுத்துக் கொள்ளுங்கள். கடமையை மட்டும் செய்து கொண்டே இருங்கள். தக்க நேரத்தில் உங்களுக்கான அங்கீகாரம் வந்து சேரும்.நம் நோக்கம், 2026 தேர்தலாக இருக்க வேண்டும்; அதற்கான முன்னெடுப்புகளை, ஆலோசனைகளை மேற்கொள்ளுங்கள். வாக்காளர்களை சந்திக்கும் செயல் திட்டங்களை உருவாக்குங்கள். ஒருவருக்கு நான்கு அல்லது ஐந்து தெருக்கள் மட்டுமே வரும். அங்கு சிறு சிறு நிகழ்ச்சிகளை தொடர்ச்சியாக நடத்துங்கள். அந்த தெருவில் உள்ளவர்களை கட்சியில் சேருங்கள்.மாலை நேரங்களிலும், வார இறுதியிலும், ஒவ்வொரு வீட்டிலும் 'நோட்டீஸ்' கொடுத்து, மக்களோடு மனம் விட்டு பேசுங்கள்; அவர்கள் சொல்வதையெல்லாம் கூர்ந்து கேளுங்கள். அரசுக்கும், கட்சித் தலைமைக்கும் சொல்ல வேண்டியதை விரைந்து சொல்லுங்கள்.தி.மு.க., ஆட்சியில் செயல்படுத்திய திட்டங்களை ஒவ்வொருவரிடமும் தெரிவியுங்கள். தேர்தலுக்கு முன், ஒவ்வொரு வாக்காளரையும், கட்சிக்காரர்கள் ஒவ்வொருவரும் நான்கைந்து முறை சந்தித்திருக்க வேண்டும். அந்த இலக்கை நிறைவேற்றினால் போதும். அடுத்து வருகிற 15 மாதங்கள், நமக்கு 'கோல்டன் பீரியடு' மாதிரி.எனவே, ஒவ்வொரு வீடாக ஏறி இறங்குங்கள். பொதுமக்கள் முன் வைக்கிற கோரிக்கைகளை கேட்டு, அதை உங்களால் முடிந்தவரை நிறைவேற்றி கொடுங்கள். இல்லையெனில், எம்.எல்.ஏ., - எம்.பி., மாவட்ட அமைச்சர் கவனத்திற்கு எடுத்துச் சென்று, அதை நிறைவேற்றித் தரும் பணியில் ஈடுபடுங்கள்.களத்தில் 'ஆக்டிவ்' ஆக இருப்பது போல், சமூக வலைதளங்களிலும் இருக்க வேண்டும். 'வாட்ஸாப் குரூப்' துவக்கி, அதில் உங்கள் பகுதி மக்களை உறுப்பினராக சேருங்கள். அதன் வழியே தகவல்களை கொண்டு சேருங்கள். ஒவ்வொருவரும் ஒரு ஊடகமாக செயல்பட வேண்டும். வரும் சட்டசபை தேர்தல் வெற்றி, உங்கள் ஒவ்வொருவரின் உழைப்பால் கிடைத்த சாதனை வெற்றியாக இருக்கட்டும். இவ்வாறு அவர் பேசினார்.

ராசியான ஊர் தஞ்சாவூர்!

தஞ்சாவூரில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் உதயநிதி பேசியதாவது: திராவிட மாடல் ஆட்சியின் தொடர் வெற்றிகள் சிலருக்கு எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது. தி.மு.க.,வை அழிக்க வேண்டும் என பல பேர் கிளம்பி வந்து இருக்கின்றனர். அவர்களுக்கு நான் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை; மக்களே பதில் கூறுவர். பல அணிகளாக சிதறிக் கிடக்கும் அ.தி.மு.க.,வும், யாருமே சீண்டாத பா.ஜ.,வும் தி.மு.க., கூட்டணியில் விரிசல் ஏற்படாதா? என துண்டு போட்டு காத்திருக்கின்றன. அவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் திட்டவட்டமாக பதில் கூறிவிட்டார். நம் கூட்டணி கட்சி தலைவர்களும் தி.மு.க கூட்டணியில்தான் தொடர்வோம் என உறுதி நிலையில் உள்ளனர் .தஞ்சாவூர் மத்திய மாவட்ட தி.மு.க.,வில் எந்த தீர்மானம் நிறைவேற்றினாலும், அது உடனே நிறைவேறி விடும் என கூறினர். அப்படியொரு ராசி இந்த ஊருக்கு உண்டு. அதனால், 2026 சட்டசபை தேர்தலில், தி.மு.க., அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க வேண்டும் என உடனே தீர்மானம் நிறைவேற்றுங்கள். இவ்வாறு அவர் பேசினார். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 35 )

S. Kalaiselvan
நவ 09, 2024 10:05

ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளி க்கு உயர்நீதி மன்றம் பஞ்ச படி தர சொல்லியும் 10 வருட பஞ்ச படி உயர்த்தி தராத வக்கில்லாத இவங்க மீண்டும் வராமல் இருக்க பிராத்தனை செய்வோம் எல்லோரும் சேர்ந்து இவங்களை துரத்தி அடிப்போம்.


S. Kalaiselvan
நவ 09, 2024 09:58

ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளிக்கு உயர்நீதி மன்றம் சொல்லியும்10 ஆண்டு பஞ்சபடி தர வக்கில்லை, இவர் வீடு வீடா போக சொல்றார்


கண்ணா
நவ 08, 2024 23:16

வீடு வீடாக சென்று 500 1000 என்று கொடுங்கள். மக்கள் ஓட்டும் போடுவார்கள்....நீங்கள்தான் இந்த தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர்....உங்கள் காலில் விழ திமுகவின் மூத்த தலைகள்....தயாராக நிற்கிறார்கள்.... வாழ்த்துக்கள்.


Ramesh Sargam
நவ 08, 2024 21:55

வீடு வீடாக வந்து எங்களுக்கு உதவி செய்யாவிட்டாலும் பரவாயில்லை. ஆனால் உபத்திரவம் மட்டும் செய்யாதீர்கள்.


...
நவ 08, 2024 21:20

மக்களே கவனமாக இருங்கள்


Ramesh Sargam
நவ 08, 2024 20:18

வீட்டுக்கு வீடு வாசப்படி. வீடுவீடாக திருடர்கள் ரெடி...


Ramesh Sargam
நவ 08, 2024 19:54

இவ்வளவு நாட்களாக மாநாடு, பொதுவெளியில் மீட்டிங் போட்டு தொல்லை கொடுத்தார்கள். இப்போது வீட்டுக்கே வந்து தொல்லை கொடுக்கப்போகிறார்கள். மக்களே உஷார்...


Ramesh Sargam
நவ 08, 2024 19:52

தமிழக மக்களே உஷார்.. திமுக தொண்டர்கள் வீடுவீடாக வரப்போகிறார்களாம். விலை உயர்ந்த பொருட்களை பத்திரப்படுத்துங்கள். முடிந்த அளவுக்கு வீட்டு கதவை திறக்காதீர்கள். வீட்டில் CCTV camera இருந்தால் அதில் தொடர்ந்து கண்காணிக்கவும்.


nv
நவ 08, 2024 17:26

ஜாக்கிரதை மக்களே.. வீட்டிலே எதாவது விலையுயர்ந்த பொருள் இருந்தால் திருட்டு திராவிட கும்பல் தூக்கிட்டு ஓடிவிடும்!! பத்திரம்


Ramesh Sargam
நவ 08, 2024 19:50

மிக சரியாக கூறினீர்கள்.


N Srinivasan
நவ 08, 2024 15:50

கொஞ்சம் உங்க கட்சி உறுப்பினர் ஓருவரை வீட்டிற்க்கு அனுப்புங்க எனக்கு இரண்டு கவர் பால் வாங்கித்தரணும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை