உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் அதிருப்தியை போக்க அரசு நடவடிக்கை: அமைச்சர்கள் குழு மீண்டும் பேச்சு

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் அதிருப்தியை போக்க அரசு நடவடிக்கை: அமைச்சர்கள் குழு மீண்டும் பேச்சு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் அதிருப்தியை போக்க, அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. மூத்த அமைச்சர் எ.வ.வேலு தலைமையிலான குழுவினர், நாளை மறுநாள் சென்னையில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கத்தினரை அழைத்து, மீண்டும் பேச்சு நடத்த உள்ளனர். 'நாங்கள் ஆட்சிக்கு வந்தால், பழைய ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தப்படும். அரசு காலி பணியிடங்கள் நிரப்பப்படும்' என்பது உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகள், கடந்த சட்டசபை தேர்தலின் போது, தி.மு.க.,வால் அளிக்கப்பட்டன. ஆட்சி காலம் முடியவுள்ள நிலையில், பல கோரிக்கைகள் நிலுவையில் உள்ளன. இதனால், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அதிருப்தியில் உள்ளனர். நாள்தோறும் எங்காவது ஒரு இடத்தில், இந்த கோரிக்கைளை வலியுறுத்தி, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர். சட்டசபை தேர்தல் மூன்று மாதங்களில் அறிவிக்கப்பட உள்ளது. இதனால், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களை சமரசம் செய்ய வேண்டிய இக்கட்டான நிலைக்கு, ஆளும் கட்சி தள்ளப்பட்டு உள்ளது. அரசு ஊழியர்களின் கோரிக்கை தொடர்பாக, கடந்த பிப்ரவரியில், அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, மகேஷ் இடம்பெற்ற குழுவினர், சென்னை தலைமை செயலகத்தில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கத்தினரை அழைத்துப் பேசினர். அதன் அடிப்படையில், ஓய்வூதிய திட்டம் குறித்து ஆய்வு செய்வதற்கு, ஊரக வளர்ச்சி துறை செயலர் ககன்தீப்சிங் பேடி தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இக்குழு இடைக்கால அறிக்கை சமர்ப்பித்துள்ளது. அதிலுள்ள பரிந்துரைகளை செயல்படுத்த, அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. இறுதி அறிக்கை வெளியீடு தாமதமாவதால், பழைய ஓய்வூதிய திட்டம் அறிவிப்பதில் சிக்கல் நீடித்து வருகிறது. இந்நிலையில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களிடம், நாளை மறுநாள், எ.வ.வேலு தலைமையிலான அமைச்சர்கள் குழுவினர் மீண்டும் பேச்சு நடத்த உள்ளனர். தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகை கட்டடத்தில், இந்த சந்திப்பு நடக்க உள்ளதாக, அரசு அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Sun
டிச 20, 2025 17:49

அன்றைய எடப்பாடி ஆட்சியை எதிர்த்து அரசு ஊழியர்களின் ஒவ்வொரு போராட்டங்களிலும் ஸ்டாலின் கலந்து கொண்டு நான்தான் உங்களுடைய ரட்சகன் என்றார். வாக்குறுதிகளை அள்ளி விட்டார்.இன்று எதையுமே நிறைவேற்றவில்லை. விபரமான அரசு ஊழியர்களையே ஏமாற்றி அல்வா கொடுப்பவர்களுக்கு சாதாரண பொது மக்கள் எம்மாத்திரம். பல முறை அமைச்சர்களுடன் பேசி பல கட்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகும் பலன் பூஜ்யம்தான்.


ராமகிருஷ்ணன்
டிச 20, 2025 10:17

பேச்சுவார்த்தை பல்வேறு தடவைகள் நடக்கும். பல்வேறு தேர்தல்கள் முடிந்துவிட்ட பின்பும் நடக்கும்.


அருண் பிரகாஷ் மதுரை
டிச 20, 2025 07:18

மொத்தமா ஓட்டா போடுறீங்க ஓட்டு..இன்னும் 4 மாதங்கள் இருக்கிறது... உங்கள் கோரிக்கைகளை பரிசீலிக்க குழு அமைக்கப்படும்..அந்த குழு 4 மாதங்கள் முடியும் வரை பரிசீலனை செய்யும்.. அவ்ளோதான்..கோரிக்கைகள் நிறைவேறாது..ஆனால் நீங்கள் ஓட்டு போட மீண்டும் தயாராக இருங்கள்..


kumar
டிச 20, 2025 06:26

லஞ்சம் வாங்காம எவரும் வேலை செய்வதில்லை,இவர்களுக்கு பென்ஷன் வேற கொடுக்கணுமா


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை