உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் /  அ.தி.மு.க.,வை ஒருங்கிணைக்கவே அமித் ஷாவை சந்தித்தேன்: பன்னீர்செல்வம்

 அ.தி.மு.க.,வை ஒருங்கிணைக்கவே அமித் ஷாவை சந்தித்தேன்: பன்னீர்செல்வம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ''அ.தி.மு.க.,வில் இருந்து பிரிந்து சென்ற சக்திகள் ஒன்று சேர வேண் டும் என்பதற்காகவே, மத்திய அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தேன்,'' என முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்தார். அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், 'அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு' என்ற அமைப்பை நடத்தி வருகிறார். கடந்த லோக்சபா தேர்தலில், பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து, ராமநாதபுரம் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டு, தோல்வியை தழுவினார். இந்நிலையில், வரும் சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள, அ.தி.மு.க.,வுடன் பா.ஜ., கைகோர்த்தது. இக்கூட்டணியில் பன்னீர்செல்வம் தரப்பைச் சேர்க்க, அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி விரும்பவில்லை. இதனால், அதிருப்திக்குள்ளான பன்னீர்செல்வம், அந்த கூட்டணியில் இருந்து விலகினார்; அடுத்த கட்ட நகர்வு குறித்து, தன் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர்கள், 'தனி கட்சி ஆரம்பித்து, த.வெ.க.,வுடன் கூட்டணி அமைப்போம்' என வலியுறுத்தினர். ஆனால், அ.தி.மு.க.,வில் மீண்டும் இணைய பன்னீர்செல்வம் விரும்பினார். இது தொடர்பாக, டிச., 15க்குள் அ.தி.மு.க., - பா.ஜ., தலைமை உரிய பதில் தெரிவிக்காவிட்டால், அடுத்த கட்ட முடிவை அறிவிப்பேன் என அறிவித்தார். இந்த சூழ்நிலையில், பா.ஜ., அழைப்பின்படி, பன்னீர்செல்வம் இம்மாதம் 3ம் தேதி டில்லி சென்றார். அங்கு, உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசினார். அப்போது, தமிழக அரசியல் குறித்து இருவரும் பேசி உள்ளனர். அதன்பின் அமித் ஷா, 'நீங்கள் அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்க வேண்டாம்' என கூறி உள்ளார். அதை ஏற்று, பன்னீர்செல்வம் சென்னை திரும்பினார். இந்நிலையில், ஜெயலலிதா நினைவு தினத்தையொட்டி, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில், பன்னீர்செல்வம் தன் ஆதரவாளர்களுடன் சென்று, மலர் துாவி மரியாதை செலுத்தினார். அதன்பின், அவர் அளித்த பேட்டி: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை டில்லியில் சந்தித்தேன்; தமிழக அரசியல் நிலவரம் குறித்து எடுத்துரைத்தேன். அவர் கவனமாக கேட்டார்; அன்பான வார்த்தை கூறி அனுப்பினார். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர், அ.தி.மு.க.,வை யாரும் வெல்ல முடியாத இடத்தில் நிலை நிறுத்தினர். அதே நிலை மீண்டும் ஏற்பட வேண்டும் என்பதே தொண்டர்களின் எண்ணம்; பொது மக்களின் கருத்தும் அதுவே. நான் எந்த சூழலிலும் தனிகட்சி துவங்குவேன் என்று சொல்லவில்லை. தேர்தலுக்கு இன்னும் ஆறு மாதங்கள் உள்ளன. விரைவில் நல்ல செய்தி வரும். அ.தி.மு.க.,வில் பிரிந்துள்ள சக்திகள் ஒன்று சேர வேண்டும் என அமித் ஷாவிடம் கூறியுள்ளேன். அவரும் அதை வரவேற்றார். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்













அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை