உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் /  அய்யா பாட்டாளி மக்கள் கட்சி ராமதாஸ் புதிதாக துவக்குகிறார்?

 அய்யா பாட்டாளி மக்கள் கட்சி ராமதாஸ் புதிதாக துவக்குகிறார்?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், 'அய்யா பாட்டாளி மக்கள் கட்சி' என்ற பெயரில் புதிய கட்சி துவங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதை, ராமதாஸ் தரப்பு பா.ம.க., -எம்.எல்.ஏ., அருள் மறுத்துள்ளார். பா.ம.க.,வில் தந்தை ராமதாஸ், மகன் அன்புமணி இடையிலான மோதல் நீடிக்கிறது. அன்புமணி தரப்புக்கு பா.ம.க., கட்சி மற்றும் மாம்பழம் சின்னத்தை தேர்தல் கமிஷன் ஒதுக்கியதாக தகவல் வெளியானது. தொடர் ஆலோசனை இதையடுத்து, ராமதாஸ் தரப்பில் இருந்து, தேர்தல் கமிஷனில் மனு அளிக்கப்பட்டது. இந்நிலையில், சட்டசபை தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக, தன் தரப்பு பா.ம.க., நிர்வாகிகள் மற்றும் வன்னியர் சங்க நிர்வாகிகளுடன் ராமதாஸ், தொடர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இதனால், வாரந்தோறும் வியாழக்கிழமைகளில் நடைபெறும் செய்தியாளர் சந்திப்பை கூட, இரு வாரங்களாக ரத்து செய்து விட்டார். இதற்கிடையே, தேர்தல் கமிஷனில் இருந்து பதில் வராததால், புதிய கட்சி துவங்க, ராமதாஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல் பரவுகிறது. மேலும், தன் ஆதரவாளர் பெயரில், 'அய்யா பாட்டாளி மக்கள் கட்சி' என, புதிய கட்சியை துவங்கி, பதிவு செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது. மாம்பழ சின்னம் கிடைக்காவிட்டால், பொது சின்னம் பெற, இந்த ஏற்பாட்டை, ராமதாஸ் செய்வதாகவும் வெளியான தகவலால், அவரது ஆதரவாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். ஆனால், இந்த தகவல்களை, ராமதாஸ் தரப்பு பா.ம.க., - எம்.எல்.ஏ., அருள் மறுத்துள்ளார். சேலத்தில், நேற்று அவர் அளித்த பேட்டி: பா.ம.க.,வை, 34 ஆண்டுகளுக்கு முன் ராமதாஸ் துவக்கினார். கடந்த மே, 28ல் அன்புமணியின், மூன்றாண்டு தலைவர் பதவி காலம் முடிந்ததால், நிர்வாக குழு கூடி, ராமதாசை தலைவராக தேர்ந்தெடுத்துள்ளோம். பா.ம.க.,வுக்கு மாம்பழ சின்னத்தை தேர்தல் கமிஷன் வழங்கி உள்ளது. கட்சியின் தலைவர் ராமதாஸ். அவசியம் இல்லை இப்படி இருக்கும்போது, நாங்கள் எதற்காக புதிய கட்சி தொடங்க வேண்டும். அதற்கான அவசியம் இல்லை. பொய்யான தகவலை, சென்னை, பனையூரில் உள்ள அன்புமணி கும்பல், குறிப்பாக வக்கீல் பாலு உள்ளிட்டோர் பரப்பி வருகின்றனர். நாங்கள் தான் உண்மையான பா.ம.க., மாம்பழ சின்னம் எங்களிடம் தான் உள்ளது. கட்சி வேட்பாளர்களுக்கான 'ஏ' பார்ம், 'பி' பார்ம் ஆகியவற்றில் ராமதாஸ் தான் கையெழுத்திடுவார். இவ்வாறு அவர் கூறினார். - நமது சிறப்பு நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை