உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / இளைஞர் அணிக்கு ஐந்து சீட்: அமைச்சர் உதயநிதி பிடிவாதம்

இளைஞர் அணிக்கு ஐந்து சீட்: அமைச்சர் உதயநிதி பிடிவாதம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வரும் லோக்சபா தேர்தலில் தி.மு.க.,வின் இளைஞர் அணியைச் சேர்ந்தோருக்கு குறைந்தபட்சம் ஐந்து சீட்டுகள் கொடுக்க வேண்டும் என, அமைச்சர் உதயநிதி வலியுறுத்திய தகவல் வெளியாகி உள்ளது. கடந்த மாதம் 21ல், சேலத்தில் நடந்த தி.மு.க., இளைஞர் அணி மாநில மாநாட்டில், அமைச்சர் உதயநிதி பேசுகையில், 'லோக்சபா தேர்தலில் இளைஞர் அணியினருக்கு முக்கியத்துவம் வேண்டும். ஏற்கனவே குறைந்த எண்ணிக்கையில், 'சீட்' கொடுத்த நீங்கள், இம்முறை கூடுதல் எண்ணிக்கையில் சீட் அளிக்க வேண்டும்' என்றார்.அதற்கு பதில் அளிக்கும் விதமாக, முதல்வர் ஸ்டாலின், 'வழக்கம்போல் இளைஞர் அணிக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படும்' என்றார். லோக்சபா தொகுதிவாரியாக நடக்கும், கட்சியின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் பங்கேற்கும் உதயநிதி, 'இளைஞர் அணி சார்பில் வேட்பாளர் நிறுத்தப்பட்டால், ஒருங்கிணைந்து பணியாற்றுவீர்களா?' என கேட்கிறார். கோஷ்டி பூசல் அதிகம் இருக்கும் மாவட்டங்களில் இருந்து வரும் நிர்வாகிகளைக் கடிந்து கொள்வதோடு, எச்சரித்தும் அனுப்புகிறார். வரும் தேர்தலில் இளைஞர் அணி சார்பில், ஐந்து வேட்பாளர்களை போட்டியிட வைக்க முடிவெடுத்துதான், ஒருங்கிணைப்பு கூட்டத்தை, அமைச்சர் உதயநிதி மும்முரமாக நடத்துகிறார்.கடந்த லோக்சபா தேர்தலில், திருவண்ணாமலை அண்ணாதுரை, தென்காசி தனுஷ்குமார் ஆகிய இருவரும் இளைஞர் அணியில் இருந்து, வேட்பாளராகக் களமிறக்கப்பட்டனர்.இந்த தேர்தலில் இளைஞர் அணி மாநில நிர்வாகிகளாக இருக்கும் துாத்துக்குடி ஜோயல், ஈரோடு மகேஷ், திருத்துறைப்பூண்டி இளையராஜா உள்ளிட்ட 5 பேரை வேட்பாளர் ஆக்கும் தீவிரத்தில் உதயநிதி இருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

ஆரூர் ரங்
ஜன 29, 2024 17:06

மாநாட்டில் செய்தது போலவே பார்லிமென்ட் சென்று தெறம காட்டினா. நினைக்கவே பயமாக இருக்கு?


DVRR
ஜன 29, 2024 17:00

இளைஞர் என்றால் என்ன கூறிவந்த பட்ச அதிக பட்ச வயது ???ஏன்னா 53 வயது இன்னும் தன்னை இளைஞர் பட்டியலில் தான் வைத்துள்ளார்


Mani . V
ஜன 29, 2024 15:52

ஐம்பது வயது கிழவர்கள் எல்லாம் இளைஞர்களா பாஸ்?


katharika viyabari
ஜன 29, 2024 14:22

200 ரூபாய், பிரியாணி, குஆர்டெர் கிடைத்தால் போதும்..சீட் எல்லாம் எதுக்கு.


Barakat Ali
ஜன 29, 2024 13:54

கட்டிளங்காளை இளைஞர் ஆண்டிமுத்து ராசா சீட் பெறுவாரா ??


Godyes
ஜன 29, 2024 11:54

பாவம் தான் பிழைக்க சேர்க்கப்படும் பினாமிகள்.


saravan
ஜன 29, 2024 10:59

பாராளுமன்றத்தில் என்ன கமெடி நிகழ்த்தி நடத்துறாங்களா.. ஈரோடு மகேஷ் ...சபாஷ்


ராஜவேல்,வத்தலக்குண்டு
ஜன 29, 2024 09:46

இந்த திமுக தத்திகளுக்கு வேறென்ன தெரியும்பார்லிமென்டில் போய் பெரியார் வாழ்க, அண்ணா வாழ்க, கருணாநிதி வாழ்க என்று கோஷம் போட்டு வெளிநடப்பு செய்து விட்டு நேராக கேண்டீனுக்கு பஜ்ஜி திண்ண போய் விடுவார்கள் காலகாலமாக தமிழகத்தில் நாம் தேர்ந்தெடுத்து அனுப்பும் எம்.பிக்கள் இதைத்தானே செய்து கொண்டிருக்கிறார்களே தவிர மக்களுக்கு எந்தவித நல்ல திட்டங்களோ நன்மையோ செய்யவில்லை.


ஆரூர் ரங்
ஜன 29, 2024 09:18

இன்பா வுக்கும் கோட்டா இருக்குமே. (ஃப்ரூட்தான் பாவம்????‍????)


mindum vasantham
ஜன 29, 2024 07:58

Bjp admk shud join together in mgr -indira formula with high seats for bjp in lok sabha and high seats with individual majority for admk in state polls


KavikumarRam
ஜன 29, 2024 10:24

பாஜகவும் அதிமுகவும் இவ்வளவுக்குப்பிறகும் கூட்டணி சேர்ந்தால் மக்கள் நம்பிக்கையை இழப்பார்கள். பாஜக தமிழகத்தில் வளர வேண்டும் என்றால் தனித்து நிற்பதே அவர்களுக்கு நல்லது. இவ்வளவு நாளும் காங்கிரஸ் மாதிரி அடுத்தவர் தோளில் சவாரி செய்ததால் தான் பாஜக இன்னும் இந்த நிலையிலேயே இருக்கிறது. இனிமேலும் பாஜக வைகோ, விஜயகாந்த், காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் மாதிரி ஒட்டுண்ணியாக இருக்காமல் அவர்கள் தலைமையில் ஒரு கூட்டணி அமைத்து இனிவரும் தேர்தல்களை சந்திப்பதே பாஜக வளர்ச்சிக்கு நல்லது.


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி