உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / சமூக வலைதளத்தில் எம்.பி., வெங்கடேசன் - எம்.எல்.ஏ., வானதி காரசாரம்

சமூக வலைதளத்தில் எம்.பி., வெங்கடேசன் - எம்.எல்.ஏ., வானதி காரசாரம்

கோவை: மதுரை மா.கம்யூ., எம்.பி., வெங்கடேசன், கோவை பா.ஜ., எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் இடையே சமூக வலைதளத்தில், ரயில்வே பட்ஜெட் பற்றி அனல் பறக்க விவாதிக்கப்படுவது பேசுபொருளாகியுள்ளது.லோக்சபாவில் பட்ஜெட் மீதான தனது உரையை, எக்ஸ் தளத்தில் வெளியிட்டிருந்தார் எம்.பி., வெங்கடேசன். அதற்குப் பதிலளித்த எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன், 'இன்னும் எத்தனை பொய்களைக் கட்டவிழ்த்து விடப் போகிறீர்கள் வெங்கடேசன்' என காட்டமாக விமர்சனம் செய்திருந்தார்.அதற்கு, 'நான் பொய் சொல்லவில்லை; ரயில்வே அமைச்சர் உண்மையைச் சொல்லவில்லை' என, எம்.பி., வெங்கடேசன், விளக்கமாக பதிலளித்தார். உங்கள் செயலுக்கு பொய் என்ற சொல்தான் மிகப்பொருத்தமானது என, வானதி பதிலுக்குப் பதில் அளித்துள்ளார். வானதி தனது பதிலில் கூறியிருப்பதாவது: 2024-25ம் ஆண்டுக்கான 'பிங்க்' புத்தகம், இடைக்கால பட்ஜெட்டுக்குப் பின் பிப்., 2ல் வெளியிடப்பட்டுள்ளது. அதுவே, மத்திய பட்ஜெட்டிற்கும் பொருந்தும். 2024--25ல், 'கவச்' இயந்திரத்துக்கு ரூ.1,112.57 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு ரூ.6,362 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.6 வந்தே பாரத், 77 அம்ரித் பாரத் நிலையங்கள், மணியாச்சி -- நாகர்கோவில் மற்றும் மதுரை- - மணியாச்சி- - தூத்துக்குடி வழித்தடங்கள் உட்பட, தமிழகத்திற்கான ரயில்வே திட்டங்களின் பட்டியல் நீண்டிருக்கிறது. மத்திய அரசு, தமிழகத்தை வஞ்சித்து விட்டது என்று நீங்கள் கூறுவது, முற்றிலும் கட்டுக்கதை. தமிழர்களுக்கான உரிமைக் குரல் என்ற பெயரில், நீங்கள் நடத்தும் போலி நாடகத்தை இனியும், தமிழக மக்கள் நம்ப மாட்டார்கள். இவ்வாறு, அவர் தெரிவித்திருந்தார். இதற்கும் எம்.பி., வெங்கடேசன் பதிலளித்து இருந்தார்.எம்.பி.,- எம்.எல்.ஏ., இடையேயான அரசியல் விவாதம், சமூக வலைதளத்தில் அனல் பறக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 23 )

Stars Thirumoorthy
ஆக 08, 2024 07:39

காசுக்கு ஜால்ரா போடும் கம்யூனிஸ்ட்களோடு ஏன் நேரத்தை வீணடிக்க வேண்டாம்... இவர்கள் பச்சோந்திகள்.. கடந்த காலத்தில் காங்கிரஸ் ஜ என்ன சொன்னார்கள்.. இப்போது எப்படி நடக்கிறார்கள்... இவர்கள் மனிதர்களே அல்ல... அதிலும் வெங்கடேசன் ஒரு....


xyzabc
ஆக 07, 2024 11:32

Su v is a fraud guy. Why waste time with him?


ஆரூர் ரங்
ஆக 06, 2024 16:05

சொந்தக் கட்சி கவுன்சிலர் லீலாவதி அவர்களைக் கொலை செய்த கட்சியுடனே கூட்டு சேர்ந்து அடிமையாக இருக்கும் நபர் வேறெப்படி இருப்பார்?


s chandrasekar
ஆக 06, 2024 14:30

நம்பர் ஒன்னு உண்டியல் குலுக்கி. கேரளாவில் பப்புக்கு ஆப்பு வைப்பார், தமிழ்நாட்டில் பப்பு, அறிவாலய அடிவருடிகளுக்கு செம்பு தூக்குறார்.


s chandrasekar
ஆக 06, 2024 14:26

வெங்கட் அறிவாலய வாசலில் செம்பு தூக்கியும், ஜோதிகா குடும்பத்திற்கு வேலை செய்தும், அறிவாலய 200 ரூபாய் உபிஷ்களுக்கு செம்பு தூக்கி காலம் thallukiran


vincent raj
ஆக 06, 2024 16:51

நீ பாத்த.......


சோலை பார்த்தி
ஆக 06, 2024 13:18

கம்யூனிசம் என்றால் கழுதை னு அர்த்தம்.. இந்திய திருநாட்டை முன்னேற விடாமல் தடுக்கும் கெட்ட சகுனம் கம்யூனிச கட்சி.. முன்னாடி போனா கடிக்கும் பின்னாடி போனா உதைக்கும்... எதற்கும் உதவாத கழுதை... 40 ல இதுவும் ஒன்னு


vincent raj
ஆக 06, 2024 16:58

நண்பா கம்யூனிஸ்ட்கள் இந்தியாவிற்கு வருகை தந்த பின்னர் தான் 8மணி நேரம் வேலை அதற்க்கு முன்பு 12 மணி நேரம் வேலை....


ஆரூர் ரங்
ஆக 06, 2024 12:28

கற்பனை நாவல் எழுத்தாளர் அரசியலிலும் கற்பனைகளைக் கலக்கிறார்.


Yasararafath
ஆக 06, 2024 11:29

வானதி சீனிவாசன் பொய்கோழி.


s chandrasekar
ஆக 06, 2024 14:21

நீயும் உன்..... உம் உண்மை கோழிகளா


vincent raj
ஆக 06, 2024 16:54

உண்மை....


Swaminathan L
ஆக 06, 2024 11:00

சு. வெங்கடேசன் ஒரு மக்களவை உறுப்பினர் என்கிற முறையில் மத்திய ரயில்வே பட்ஜெட் மற்றும் பொது பட்ஜெட் பற்றிய தேவையான புரிதல் உள்ளவராகவே இருக்க வேண்டும். இருந்தும், தான் சார்ந்துள்ள கட்சி, தன்னை ஆதரிக்கும் கட்சி மற்றும் இண்டி கூட்டணி தர்மத்துக்காக உண்மைக்கும் புறம்பான தகவல்களை வெளியிட்டு தன் நன்றியைத் காட்டிக் கொள்கிறார்.


ஆரூர் ரங்
ஆக 06, 2024 16:03

உண்டியல் குலுக்கிகளுக்கு இவ்வளவு டீசன்டான பதிவு உறைக்கும்ன்னு நம்புறீங்களா? தரை லோக்கல் லெவல்தான் சரி.


Sankara Subramaniam
ஆக 06, 2024 09:18

பொய் வெங்கடேசன்


vincent raj
ஆக 06, 2024 16:55

ஒன்று நிறுபிங்க நண்பா.....


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை