உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் /  காங்.,கை விட எங்கள் கட்சி பெரியது: தி.மு.க.,விடம் 20 சீட் கேட்கிறது வி.சி.,

 காங்.,கை விட எங்கள் கட்சி பெரியது: தி.மு.க.,விடம் 20 சீட் கேட்கிறது வி.சி.,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

'காங்கிரசை விட விடுதலை சிறுத்தைகள் பெரிய கட்சி என்பதால், 20 தொகுதிகள் வேண்டும்' என, தி.மு.க., கூட்டணியில் வி.சி., கட்சியும் நெருக்கடி கொடுக்க துவங்கியுள்ளது. தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்றுள்ள வி.சி., 234 தொகுதிகளிலும் கட்சியை பலப்படுத்தவும், தலித் கட்சி என்ற அடையாளத்தை போக்கவும், மாற்று சமூக மக்களையும் கட்சியில் சேர்த்து வருகிறது. மேலும், வி.சி-., மாவட்ட செயலர்கள் பட்டியலில், 10 சதவீதத்துக்கு மேலாக, மாற்று சமூகத்தை சேர்ந்தவர்கள் இடம்பெறுவர் என, அக்கட்சியினர் தெரிவித்துள்ளனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=8ezklsb8&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதற்கிடையே, தி.மு.க., கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சை காங்கிரஸ் துவக்கி உள்ள நிலையில், 'கூட்டணியில் காங்கிரசை விட, நாங்கள் தான் பெரிய கட்சி; 80 லட்சத்துக்கும் அதிகமான தொண்டர்கள் உள்ளனர். 'எனவே, 2026 சட்டசபை தேர்தலில், 20 தொகுதிகள் ஒதுக்க வேண்டும் அல்லது ஆட்சியில் பங்கு தர வேண்டும்' என, தி.மு.க.,விடம் வி.சி., வலியுறுத்துகிறது. இது குறித்து, வி.சி., செய்தி தொடர்பாளர் பாவலன் கூறுகையில், “எங்கள் கூட்டணியில், தி.மு.க.,வுக்கு அடுத்து வி.சி., தான் பெரிய கட்சி. எனவே, வரும் தேர்தலில், இரட்டை இலக்கத்தில் வி.சி., போட்டியிடும். தி.மு.க.,விடம் 20 தொகுதிகளையாவது கேட்டு பெறுவோம்,” என்றார். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Tamil Inban
டிச 12, 2025 10:31

நரி வேலை பார்ப்பதே பிழைப்பாகிவிட்டது


duruvasar
டிச 12, 2025 09:38

படத்தை பார்க்கும் பொது வந்தால் சீட்டு வராவிட்டால்.... என்பதுபோல தெரிகிறது.


theruvasagan
டிச 12, 2025 09:36

சந்தேகமில்லாமல் பெரிய ஒட்டுண்ணிதான். ஆரம்பத்திலிருந்தே தனித்து நிற்காமல் பக்கத்திலிருப்பதுடன் கெட்டியாக ஒட்டிக் கொண்டு உறிஞ்சி கொழுத்த மகா பெரிய ஒட்டுண்ணி.


siva
டிச 12, 2025 09:04

அப்ப தனியா நிக்க வேண்டியது தானே


பேசும் தமிழன்
டிச 12, 2025 08:54

யார் பெரியவன் என்பதை...... அடித்து காட்டு .


Srinivasan Narasimhan
டிச 12, 2025 08:34

அப்போ ஏன் தனியாக நின்று பலத்தை நிரூபிக்கலாமே


SIVA
டிச 12, 2025 08:22

காங்கிரஸ் 30 விசிக 40 கம்யூனிஸ்ட் 40 மதிமுக 20 மையம் 20 தேமூதிக 40 பாமக 44 மீதி தீயமூக .....


SIVA
டிச 12, 2025 08:17

பெரிதினும் பெரிது கேள் மகாகவி பாரதி கவிதை விடாதீங்க நல்லா கேளுங்க காங்கிரஸ் விட அதிக சீட் கேளுங்க ..


S.L.Narasimman
டிச 12, 2025 07:37

அவங்க கூட்டணி கட்சிகள் மற்றவரை காலை வாரி விடாமல் ஒற்றுமையாக பலமாக உள்ளது. இங்கு நிலைமையே வேறு.


ராமகிருஷ்ணன்
டிச 12, 2025 07:25

காங்கிரஸை விட வி சி கா பெரிது. விசிக வை விட கம்யூனிஸ்ட் கட்சி பெரிது. உலகம் முழுவதும் உள்ள கட்சி. ஆனால் இவர்களை அடக்கி ஆள்வது ஒரு களவாணி கும்பல். காலக்கொடுமையடா


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி