மேலும் செய்திகள்
தமிழக ஹாக்கி வீரர்கள் இந்திய அணியில் ஜொலிக்காத காரணம் என்ன?
31 minutes ago
போக்குவரத்து செயல் திட்டம்: கோவை, மதுரைக்கு எப்போது?
23 hour(s) ago | 1
சென்னை: முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் திடீர் பயணமாக, நேற்று டில்லி சென்றுள்ளார். அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு என்ற அமைப்பை உருவாக்கி, பன்னீர்செல்வம் தனி அணியாக செயல்பட்டு வருகிறார். அ.தி.மு.க., -- பா.ஜ., கூட்டணியில் பன்னீர்செல்வம், தினகரனை சேர்க்க, அ.தி.மு.க.,வின் பழனிசாமி மறுத்து விட்டார். இதனால் பா.ஜ., கூட்டணியில் இருந்து இருவரும் விலகினர். அதைத் தொடர்ந்து, அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவை, அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்பு கழகமாக மாற்றியுள்ளார். கடந்த ஒரு வாரமாக, கோவையில் ஆயுர்வேத சிகிச்சை பெற்று வந்த பன்னீர்செல்வம், திடீர் பயணமாக கொச்சியில் இருந்து டில்லி சென்றுள்ளார். இதுகுறித்து, பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் கூறியதாவது: அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்பு கழகத்தை, அரசியல் கட்சியாக பதிவு செய்வது குறித்து, தேர்தல் கமிஷன் அதிகாரிகளை சந்திக்கவும், சட்ட ஆலோசனை பெறவும், டில்லி சென்றுள்ளார். பா.ஜ., தலைமைக்கு நெருக்கமான, ஆடிட்டர் குருமூர்த்தியும் டில்லி சென்றுள்ளார். இதனால், பா.ஜ., முக்கிய தலைவர்கள் சிலரை, பன்னீர்செல்வம் சந்திக்க திட்டமிட்டுள்ளார். இவ்வாறு அவர்கள் கூறினர். த.வெ.க.,வுடன் கூட்டணி சாத்தியம் இல்லை என்பதால், பன்னீர் செல்வம் மற்றும் தினகரனை கூட்டணியில் சேர்க்க, பா.ஜ., தலைமை வலியுறுத்துவதாக, அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர்.
31 minutes ago
23 hour(s) ago | 1