உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / நிர்வாகிகள் நியமனம்: பன்னீர்செல்வம் சுறுசுறுப்பு

நிர்வாகிகள் நியமனம்: பன்னீர்செல்வம் சுறுசுறுப்பு

சென்னை: முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், மாவட்ட வாரியாக நிர்வாகிகளை நியமிக்கும் பணியை தீவிரப்படுத்தி உள்ளார்.அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்ட, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், 'அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்பு குழு' என்ற அமைப்பை துவக்கி, தனியாக நிர்வாகிகளை நியமித்தார். கடந்த லோக்சபா தேர்தலில், பா.ஜ., கூட்டணியில் இணைந்து, ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டார். அ.தி.மு.க.,வில் மீண்டும் இணைய, அவர் எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தன. மீண்டும் கட்சியில் சேர்க்க முடியாது என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி திட்டவட்டமாக அறிவித்து விட்டார். அதேநேரம், சட்டசபை தேர்தலுக்கு அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி உருவான பிறகு, லோக்சபா தேர்தலில் தங்களுடன் இருந்த பன்னீர்செல்வத்தை பா.ஜ., கண்டு கொள்ளவில்லை. இதனால் விரக்தி அடைந்த பன்னீர், பா.ஜ., கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதன் தொடர்ச்சியாக, மாவட்ட வாரியாக, தன் அமைப்பிற்கு, காலியாக உள்ள பதவிகளை நிரப்பும் பணியை தீவிரப்படுத்தி உள்ளார். நேற்று மதுரை புறநகர் வடக்கு, வேலுார் மாநகர், வட சென்னை மத்திய மாவட்டத்திற்கு புதிய நிர்வாகிகளை நியமித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Muthu Kumar
ஆக 07, 2025 22:28

உண்மையில் OPS NTA இல் இருந்து வெளி வந்தது நல்ல முடிவு. தற்போது தென் மாவட்டங்களில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தி, வரும் தேர்தலை சந்திக்க வேண்டும். வேண்டும் என்றால் விஜய் OR நாதக ஒத்துக்கொண்டால் உடன்படிக்கை செய்து குறிப்பிட்ட தொகுதியில் போட்டி போட்டு வெல்ல வேண்டும். அப்புறம் அதை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும். அவ்வாறு செய்தால் அனைவருக்கும் ஒரு பயம் உண்டாகும். முக்கியமாக டெட்பாடிக்கு.


Easwar Kamal
ஆக 07, 2025 16:57

பன்னீர் பேசாமல் தென்னகத்தில் குறிப்பாக மதுரை/ தேனீ /ராமநாதபுரம் மற்றும் தஞ்சாவூர் முழு கவனத்தை செலுத்தலாம். பன்னீர் குறி இந்த எடபடியான் மேல் தன வைக்க வேண்டும். இந்த எடப்பாடியனுக்கும் ஆட்சி விட கட்சிதான் முக்கியமாக இருக்கிறது. முடிந்தால் விஜய் அலலது சீமானோடு கட்சியோடு கூட்டணி வைத்து சிறு வெற்றி பெற்றாலே போதும். எடபடியான் அகம்பாததுக்கு ரெண்டாம் அல்லது மூன்றாம் இடத்துக்கு தள்ளலாம் . இப்போது கள நிலவரம் அப்படித்தான் உள்ளது.


SJRR
ஆக 07, 2025 13:10

உண்மையிலேயே இவர் அரசியலில் இன்னும் எதை சாதிக்க இப்படியெல்லாம் செய்கிறார்? இருக்கின்ற ஒரு 100 பேரை வைத்துக்கொண்டு பொதுக்குழு, செயற்குழு மற்றும் கட்சிப்பதவி என்று தேவையில்லாத திரைப்படம் காண்பித்துக்கொண்டிருக்கிறார்.


ALAGAPPAN NACHIAPPAN NACHI
ஆக 07, 2025 10:58

விளங்கிடும்


V RAMASWAMY
ஆக 07, 2025 08:04

பூஜ்யத்திற்குள் பூஜ்யம் பூட்டும் முயற்சி.


பிரேம்ஜி
ஆக 07, 2025 07:15

இதுக்கெல்லாம் எங்கே இருந்து ஆட்கள் கிடைக்கிறார்கள்? இல்லாத கட்சிக்கு இத்தனை பதவிகளா?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை