உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / சிவன் கோவிலுக்கு ரோபோடிக் யானை: கனடாவில் வசிக்கும் இந்திய பெண் வழங்கினார்

சிவன் கோவிலுக்கு ரோபோடிக் யானை: கனடாவில் வசிக்கும் இந்திய பெண் வழங்கினார்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கூடலுார் தேவர்சோலை சிவன் கோவிலுக்கு, வன விலங்குகள் நல பெண் ஆர்வலர், 12 லட்சம் ரூபாய் மதிப்பிலான 'ரோபோடிக்' யானை பொம்மையை வழங்கினார்.கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்தவர் சங்கீதா ஐயர். இவர் தற்போது கனடா நாட்டில் வசித்து வருகிறார். விலங்குகள் நல ஆர்வலரான இவர், ஆசியாவில் யானைகளை பாதுகாக்கும் முயற்சியை முன்னெடுத்துள்ளார். இதன் ஒரு பகுதியாக, நீலகிரி மாவட்டம் கூடலுார் தேவர்சோலை சிவன் கோவிலுக்கு, 12 லட்சம் ரூபாய் மதிப்பிலான ரோபோடிக் யானை பொம்மையை தானமாக வழங்கியுள்ளார். இதற்கான நிகழ்ச்சி, கோவில் வளாகத்தில் நேற்று நடந்தது. கோவில் கமிட்டி செயலர் ரங்கசாமி வரவேற்றார். கமிட்டி தலைவர் பாலகோபால் தலைமை வகித்தார். விலங்குகள் நல ஆர்வலர் சங்கீதா ஐயர் பங்கேற்று, ரோபோடிக் யானை பொம்மையை கமிட்டியிடம் ஒப்படைத்தார்.கோவிலுக்கு வழங்கப்பட்ட ரோபோடிக் யானை பொம்மை நகர்ந்து செல்லும் வகையில், கால்களில் சக்கரம் அமைக்கப்பட்டு உள்ளது. மேலும், கண் சிமிட்டு வதுடன், தும்பிக்கை மூலம் தீர்த்தம் தெளிப்பது உள்ளிட்ட பணிகளையும் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது.சங்கீதா ஐயர் கூறுகையில், ''பல கோவில்களில் யானைகளை சங்கிலியில் கட்டி துன்புறுத்துகின்றனர். அதை தடுப்பதற்கான முயற்சியை மேற்கொண்டு வருகிறோம். யானைகள் கோவில்களில் வாழக்கூடியவை இல்லை; வனத்தில் வாழக்கூடியவை. கேரளாவில் கோவில் யானைகள் அதிகம் உயிரிழக்கின்றன.''ஆனால், தமிழகத்தில் தமிழக அரசும், நீதித் துறையும் யானைகளின் பாதுகாப்பை உறுதி செய்துள்ளன. இதனால், இங்கு துன்புறுத்துவது அதிகம் இல்லை. ''யானைகள் துன்புறுத்தலை தடுக்கவே, கோவில்களில் ரோபோட்டிக் யானை பொம்மை பயன்படுத்தும் போது, நம்முடைய கலாசாரம் மற்றும் பாரம்பரியம் பாதுகாக்கப்படும்,'' என்றார்- நமது நிருபர் - .


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

LAX
பிப் 04, 2024 23:48

கோயில் யானைகளுக்கென்று ஒரு புனிதமான நம்பிக் உண்டு.. உங்க அலப்பரைக்கு அளவே இல்லையா..? இது தமிழக கோயில்களை கொள்ளையடிக்கும் கூடாரமாகப் பயன்படுத்திவரும், 'அறங்கெட்ட துறை' மேலதிக கொள்ளை மேற்கொள்ள ஏதுவாகிவிடும் என்பதில் மாற்று கருத்து இல்லை..


சண்முகம்
பிப் 04, 2024 20:37

யானை நல பாதுகாவலர் ஜெ!


Radhakrishnan Seetharaman
பிப் 04, 2024 11:44

நமது கோவில்களிலிருந்து யானைகளை வெளியேற்ற PETA என்னென்னவோ செய்து பார்த்து விட்டது. முடியவில்லை. இது புது முயற்சி. விரைவில், கோயில் கருவறையிலுள்ள விக்கிரஹங்களை அகற்றி விட்டு பிளாஸ்டிக் பொம்மைகளை வைக்கச் சொல்வார்கள். டுமீளர்கள் அதையும் கேட்டுக் கொண்டிருப்பார்கள் ????


Senthoora
பிப் 04, 2024 14:44

வடமாநிலங்களில் சுவாமி நாராயணன் கோவிலில் பிளாஸ்டிக், பளிங்கு பொம்மைகள் தான் விக்கிரகங்களாக இருக்கு,


g.s,rajan
பிப் 04, 2024 10:24

இதே மாதிரி நம் நாட்டில் ரோபோக்களை அரசியல்வாதிகளாக உருவாக்குங்கள் ,அவர்களின் கொட்டத்தை அறவே ஒடுக்குங்கள் உங்களுக்கு கோடிக்கோடி புண்ணியம் ,அப்பத்தான் நம் நாட்டில் காலம் காலமாக உலவும் லஞ்சமும் ஊழலும் அறவே ஒழியும் .....


T.sthivinayagam
பிப் 04, 2024 09:35

வழிகாட்டுதல் முறை என்று கூறி பாலபிஷேகம் செய்து சூடம் காட்டாமல் இருந்தால் சரி பின்னர் பயர்ஆக வாய்ப்பு இருக்கும்


தத்வமசி
பிப் 04, 2024 09:10

காலம் ஆக ஆக பெண்டாட்டி, புருஷன் நண்பர்கள் என்று எல்லாமே ரோபோவாக மாறவும் வாய்ப்புகள் அதிகம்.


Pandi Muni
பிப் 04, 2024 13:14

ஜப்பான்ல எப்போவோ மாறிடிச்சி


அப்புசாமி
பிப் 04, 2024 07:52

எல்லாமே பொய்யா...


N Annamalai
பிப் 04, 2024 07:32

முன்னேற்றம் .அறிவை எப்படியெல்லாம் பயன்படுத்து கிறார்கள் .நடைமுறை சாத்தியம் உண்டா.மக்கள் நம்பிக்கை உருவாக்க முடியாது


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை