மேலும் செய்திகள்
தி.மு.க.,வுடன் சண்டை போட்டு கூடுதல் சீட் கேட்போம்: திருமா
28 minutes ago
யானையாக மாற வேண்டும் சிலிகுரி கோழி! வங்கதேசம் வாலை நறுக்க சத்குரு யோசனை
22 hour(s) ago | 6
தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகையும், தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரனும் தொகுதி மாறி போட்டியிட முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதுார் தொகுதியில், கடந்த முறை தி.மு.க., - காங்., கூட்டணியில் போட்டியிட்ட செல்வப்பெருந்தகை, தன்னை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க., கூட்டணியின் பழனியை, 11,000 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். மக்கள் அதிருப்தி
கடந்த நான்கரை ஆண்டுகளில், காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்தும், தொகுதியில் பெயர் சொல்லும் அளவுக்கு எதுவும் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு, காங்கிரசார் மத்தியிலேயே உள்ளது. அதேபோல, செல்வப்பெருந்தகை பெயரைச் சொல்லி, தொகுதி முழுதும் வியாபித்திருக்கும் தொழில் அதிபர்களிடம் நடக்கும் வசூலும், மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. ஒட்டுமொத்த தொழில் அதிபர்களும் செல்வப் பெருந்தகை மீது கோபத்தில் இருப்பது, அவரை அலற வைத்திருப்பதாக, காங்கிரசார் கூறுகின்றனர். ஸ்ரீபெரும்புதுாரில் மீண்டும் செல்வப்பெருந்தகை போட்டியிட்டால், அவரை தோற்கடிக்க தொழில் அதிபர்கள் பெரும் தொகை செலவு செய்ய முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இதை அறிந்தே, மீண்டும் அங்கே போட்டியிட வேண்டாம் என, செல்வப்பெருந்தகை முடிவெடுத்திருப்பதாக கூறப்படுகிறது. தமிழக காங்., தலைவர் ஆக்கப்பட்டது முதல், கூட்டணி தலைமையான தி.மு.க.,வினரோடு இணக்கமாக இருப்பதால் தி.மு.க.,வினர் செல்வப்பெருந்தகையை விரும்புகின்றனர். குறிப்பாக, அறநிலைய துறை அமைச்சர் சேகர்பாபு, செல்வப்பெருந்தகையோடு நெருக்கமாக உள்ளார். தி.மு.க., தலைமையிடம் பேசி, எழும்பூர் தொகுதியை, செல்வப்பெருந்தகைக்கு 'ஓகே' செய் திருக்கிறார் சேகர்பாபு. இதன் வாயிலாக, அமைச்சர் சேகர்பாபு, ஒரே கல்லில் இரு மாங்காய் அடிப்பதாக சொல்கின்றனர். எழும்பூர் தொகுதியின் தற்போதைய தி.மு.க., - எம்.எல்.ஏ., பரந்தாமனுக்கும் சேகர்பாபுவுக்கும் ஏழாம் பொருத்தமாக உள்ளது. அதனால், பரந்தாமனுக்கு இம்முறை தொகுதி கிடைக்காமல் செய்ய வேண்டும் என்பதற்காக, செல்வப்பெருந்தகையை எழும்பூருக்கு கொண்டு வருகிறார் சேகர்பாபு. அதேபோல, திருநெல்வேலி சட்டசபைத் தொகுதியில் செல்வாக்குடன் இருக்கும் தற்போதைய எம்.எல்.ஏ.,வான, தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன், மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட விரும்புகிறார். ஆனால், சமீபத்தில் எடுக்கப்பட்ட சர்வேயில், தொகுதி அவருக்கு சாதகமாக இல்லை என்பது தெரிய வந்திருக்கிறது. குறிப்பாக, தொகுதியில் அதிகம் உள்ள பட்டியலினத்தவர், நாடார் மற்றும் யாதவர்கள், பா.ஜ.,வுக்கும் நாகேந்திரனுக்கும் எதிரான மன நிலையில் உள்ளனர். சந்தேகம்
தன்னுடைய முக்குலத்தோர் இனத்தவர் மத்தியில், நாகேந்திரனுக்கு செல்வாக்கு இருந்தாலும், எதிரணியில் முக்குலத்தோர் இனத்தைச் சேர்ந்தவரை வேட்பாளராக அறிவித்தால், தோல்வியே பரிசாகக் கிடைக்கும் என்பதே சர்வே முடிவு. இதனால் கலக்கம் அடைந்திருக்கும் நாகேந்திரன், இம்முறை விருதுநகர் மாவட்டம், சாத்துார் தொகுதியில் போட்டியிட முடிவெடுத்திருக்கிறார். அங்கே, தன்னுடைய இனத்தைச் சேர்ந்தோர் அதிகம் இருப்பதோடு, அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணிக்கு சாதகமான தொகுதியாக இருக்கும் என்ற நம்பிக்கையில், தொகுதி மாற நாகேந்திரன் விரும்புகிறார். ஆனால், அங்கும் வெற்றி வாய்ப்பு சந்தேகம் என, உறவுக்காரர்கள் சிலர் எச்சரிக்கை மணி அடிப்பதால், கடைசி நேரத்தில் அவர் தன் முடிவை மாற்றவும் வாய்ப்பு இருப்பதாக, பா.ஜ., வட்டாரத்தில் கூறப்படுகிறது.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும் புதுார் ஒன்றியத்துக்கு உட்பட்ட கோட்டூர் கிராமத்திற்கு, அந்த தொகுதி எம்.எல்.ஏ.,வான செல்வப்பெருந்தகை நேற்று முன்தினம் இரவு சென்றிருந்தார். அவர் வந்திருப்பதை அறிந்து, அங்கு பொதுமக்கள் திரண்டனர். பின், செல்வப்பெருந்தகை வந்த காரை வழிமறித்து முற்றுகையிட்டனர். உடனே, அந்த பகுதியில் இருந்து, கிளம்ப செல்வப்பெருந்தகை முயற்சி செய்தார். கூடியிருந்த மக்கள், செல்வப்பெருந்தகையிடம், 'ஐந்தாண்டுக்கு முன் எம்.எல்.ஏ.,வாக தேர்வானீர்கள். ஆனால், ஒரு முறை கூட இந்தப் பகுதிக்கு வரவில்லை. தேர்தல் நெருங்குவதால், மீண்டும் இங்கு வந்துள்ளீர்கள். சாலை, குடிநீர், பாதாள சாக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து, தேர்தல் நேரத்தில் வாக்குறுதி அளித்தீர்கள். ஆனால், ஒன்றைக்கூட செய்து கொடுக்கவில்லை. 'மீண்டும் எங்களை சந்தித்து, ஏமாற்ற வந்துள்ளீர்களா?' என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர். வெகு நேரம் சமாளித்துப் பார்த்த செல்வப்பெருந்தகை, தொடர்ந்து அந்த இடத்தில் இருக்க முடியாததால், அங்கிருந்து மெல்ல நழுவினார். - நமது நிருபர் -
28 minutes ago
22 hour(s) ago | 6