உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / ஜாதி இடஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து பேச்சு :காங்., - எம்.பி.,யால் சலசலப்பு

ஜாதி இடஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து பேச்சு :காங்., - எம்.பி.,யால் சலசலப்பு

காங்கிரஸ் கட்சியில் உள்ள தலித் நிர்வாகிகள் பங்கேற்ற கூட்டத்தில் பேசிய, அக்கட்சி எம்.பி.,ஜெயகுமார், ஜாதி ரீதியிலான இடஒதுக்கீட்டு முறைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீடு முறையே நல்லது என அவர் கூறியதால், கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. அவர் தொடர்ந்து பேச அனுமதிக்காத கட்சியினர், மைக்கை பறித்து, அவரை வலுக்கட்டாயமாக பிடித்து நாற்காலியில் அமரவைத்தனர்.'தலித் உரிமைகள், சமூக நீதிக்கான பயிற்சி பாசறை' தொடர்பான இரண்டு நாள் கருத்தரங்கம், தமிழக காங்கிரஸ் எஸ்.சி., அணி தலைவர் ரஞ்சன்குமார் தலைமையில் மாமல்லபுரத்தில் நேற்று நடந்தது.கருத்தரங்கில், தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் அஜோய்குமார், எஸ்.சி., அணி தேசிய தலைவர் ராஜேஷ் லிலோத்தியா, முன்னாள் மாநில தலைவர் அழகிரி உள்ளிட்டோர்பங்கேற்றனர்.அகில இந்திய காங்கிரஸ் செயலர் விஸ்வநாதன் பேசுகையில், ''மல்லிகார்ஜுன கார்கே, முகுல் வாஸ்னிக், சுசில்குமார் ஷிண்டே போன்றவர்கள், தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களுக்கு ஜாதி ரீதியான இடஒதுக்கீட்டில் போட்டியிட, காங்கிரஸ் கட்சி வாய்ப்பு அளித்தது. ''அந்த தலைவர்களும் வெற்றி பெற்று, முன்னணி தலைவர்களாக உள்ளனர். அவர்களை போல தலித் சமுதாய நிர்வாகிகளும் இடஒதுக்கீட்டை பயன்படுத்தி, நாளைய தலைவர்களாக உருவாக வேண்டும்,'' என்றார்.காங்கிரஸ் எம்.பி., ஜெயகுமார் பேசுகையில், ''ஜாதி ரீதியான இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட வேண்டும்; பொருளாதார ரீதியான அடிப்படையில், இடஒதுக்கீட்டை கொண்டு வர வேண்டும். ''பொதுத் தொகுதியில் நான் போட்டியிட தயார். 'கிரீமிலேயர்' கொள்கைக்கு முக்கியத்துவம் தர வேண்டும்,'' என்றார்.உடனே கூட்டத்தில் இருந்தவர்கள், கட்சி கொள்கைகளுக்கு முரணாக பேசுவதாகவும், பேச்சை உடனே நிறுத்துமாறும் குரல் கொடுத்தனர். சலசலப்பு ஏற்பட்டதை தொடர்ந்து, ஜெயகுமாரை வலுக்கட்டாயமாக அமர வைத்தனர். பின், அஜோய்குமார் பேசுகையில், ''ஜெயகுமார் பேசியது தவறு. அவரது பேச்சை வாபஸ் பெற வேண்டும். காங்கிரஸ் கட்சியில், தலித் சமுதாயத்தினர் அதிகமாகஉள்ளனர். ''அவர்களின் உரிமைக்காக கட்சி போராடி வருகிறது. ஜாதி இடஒதுக்கீடு தான் தலித் சமுதாய மக்களை முன்னேற வைத்துள்ளது; பாதுகாத்து வருகிறது,'' என்றார்.- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 37 )

Sankar Ramu
பிப் 22, 2024 18:45

பிறப்பால் அனைவரும் சமம்னு சொல்லுவானுங்க ஆனா பிறப்பால் இட ஒதுக்கீடு செய்வானுங்க..


M Ramachandran
பிப் 22, 2024 17:08

இன்னும் எத்தனி காலம் தான் என மாத்துவீர்கள் இப்படி சொல்லி


INDIAN Kumar
பிப் 22, 2024 16:00

உயர்ந்தவன் உயர்ந்து கொண்டு இருக்கிறான் தாழ்ந்தவன் நிலை அப்படிதான் உள்ளது ஜாதி ஒழிக்கப்படவேண்டும். ஏழ்மையும் ஒழிக்கப்பட வேண்டும்.


INDIAN Kumar
பிப் 22, 2024 15:59

எங்கள் தொகுதியின் உண்மையான பேச்சு வாழ்த்துக்கள் ஆனால் இந்த முறை இத்தாலி காங்கிரஸ் கட்சியில் சீட் இல்லை


sankar
பிப் 22, 2024 14:15

ஜாதியும் வேண்டாம் - பொருளாதாரமும் வேண்டாம் - தகுதி அடிப்படையில் கொடுத்தால் போதும்


sankar
பிப் 22, 2024 14:15

ஆமாம் ஒருவனும் பள்ளிக்கூடம் போக வேண்டாம் - படிக்கவேண்டாம் - இந்த ஜாதிக்கு இந்த வேலை - இந்த புடி என்று கொடுத்துவிடுங்கள் - நாடு வெளங்கிரும்


KRISHNAN R
பிப் 22, 2024 13:58

As Gandhiji said truth is always bitterful but no one to accept unless his conscience speaks like this. Kudos to this gentleman.


jayvee
பிப் 22, 2024 13:46

ஜாதி இல்லயென்றால் மதமாற்றமே இருக்காது. அதனால் அரிசி மூட்டை கம்பெனி குருமார்கள் மற்றும் மைக்செட் ஓனர்கள் ஜாதி ஒதுக்கீடு வேண்டுமென்று வீட்டிற்குள் மதமாறிய அனால் அரசு ஆவணக்கத்தில் ஜாதி வெறிகொண்டு இருக்கும் தூண்டிவிடுகிறார்கள் .


Subramanian N
பிப் 22, 2024 13:20

மல்லிகார்ஜுன கார்கே எவ்வளவு சொத்துக்கு உரிமையானவர் என்பதை நாடாளுமன்றத்தில் மோடிஜி அவர்கள் வெளி படுத்தினார். ஆனால் அவர் இன்றும் தான் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தை சார்ந்தவர் என்று கூறி கொள்கிறார். ஆனால் கோவில் பூஜாரி முற்பட்ட வகுப்பை சார்ந்தவர் என்று கூறுகின்றனர்.


Anantharaman Srinivasan
பிப் 22, 2024 12:34

பிறப்பு இறப்பு தவிர மற்ற அனைத்துக்கும் ஜாதி சலுகை .. அப்பவும் மேலே பார்த்து தான் குரைத்துக்கொண்டு இருப்பார்கள் முன்னேறத் தெரியாது.


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை