உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / சிக்கலில் கரும்பு விவசாயி சின்னம்; என்ன செய்ய போகிறார் சீமான்?

சிக்கலில் கரும்பு விவசாயி சின்னம்; என்ன செய்ய போகிறார் சீமான்?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: நாம் தமிழர் கட்சிக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட கரும்பு விவசாயி சின்னத்தில், வரும் லோக்சபா தேர்தலில் போட்டியிட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. அந்த சின்னத்தை, கர்நாடகாவைச் சேர்ந்த பாரதிய பிரஜா ஐக்யதா என்ற கட்சிக்கு, தேர்தல் கமிஷன் அதிகாரப்பூர்வமாக வழங்கி இருப்பதால், நாம் தமிழர் கட்சிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாவது:

வழக்கம்போல, வரும் லோக்சபா தேர்தலிலும் நாம் தமிழர் கட்சி தனித்து தான் போட்டியிடுகிறது. வேட்பாளர்களை முன்கூட்டியே அறிவித்து வருகிறோம். அதில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம். தேர்தல் விதிமுறை மற்றும் வரைவின்படி, கரும்பு விவசாயி சின்னம், நாம் தமிழர் கட்சிக்கு தான் வழங்க வேண்டும். ஆனால், இம்முறை அதை மாற்றி, வேறொரு கட்சிக்கு வழங்கி உள்ளனர். என்ன நடந்தது, நடக்கிறது என தெரியாது. ஆனால், பக்கத்து மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் புதிதாக துவக்கியுள்ள கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னத்தை தேர்தல் கமிஷன் வழங்கி உள்ளது. அவர், இம்முறை தேர்தலில் போட்டியிடுவாரா, மாட்டாரா என்பது கூட யாருக்கும் தெரியாது. தேர்தல் கமிஷனில், நாம் தமிழர் கட்சிக்கு சின்னம் கேட்டு விண்ணப்பித்தபோது, விவசாயி ஏர் உழும் சின்னம், அரிக்கேன் விளக்கு, வண்டிச்சக்கரம் ஆகிய ஏதேனும் ஒன்றை தருமாறு கேட்கப்பட்டது. 'அவற்றை மாநில கட்சிகளுக்கு ஒதுக்கி உள்ளோம். அதனால் அதை தர முடியாது' என்றனர். ஏற்கனவே தேர்தல் தேதி அறிவித்து ஒரு வாரம் கழிந்த பின் தான் தேர்தல் சின்னம் கொடுத்தனர். இப்போது, வேறொரு ரூபத்தில் சிக்கல் உருவாக்கி உள்ளனர். எங்கள் சின்னத்தை வோறொருவருக்கு ஒதுக்கி உள்ளனர்.நாம் தமிழர் கட்சி வளர்ந்து விட்டது. அது பலருக்கு பொறுக்கவில்லை. அதனாலேயே, உரிய சின்னம் கொடுக்காமல் ஏதேதோ செய்கின்றனர். ஏற்கனவே உள்ளாட்சி, சட்டசபை, லோக்சபா உள்ளிட்ட ஆறு தேர்தல்களில் கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிட்டுள்ளோம். நாம் தமிழர் என்றால், கரும்பு விவசாயி சின்னம் தான் என மக்கள் மனதில் ஆழ பதிய வைக்கப்பட்டு விட்டது. அந்த நிலையில், திடீரென அந்த சின்னம் கிடையாது என்றால் எப்படி?தேர்தல் கமிஷனில் பேசப்பட்டு வருகிறது. எப்படியும் எங்களுக்கே கரும்பு விவசாயி சின்னத்தை தருவர் என்ற நம்பிக்கை உள்ளது. இல்லை என்றால், நீதிமன்ற உதவியை நாடுவதைத் தவிர வேறு வழியில்லை. நீதிமன்றம் எங்கள் தரப்பு நியாயத்தை உணர்ந்து கட்டாயம் உதவும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

sridhar
பிப் 18, 2024 17:51

மனித வெடிகுண்டு சின்னம் வாங்கிக்க சொல்லுங்க , இவங்க ஆதரிக்கும் சித்தாந்தத்துக்கு சரியா இருக்கும்.


madhavan rajan
பிப் 19, 2024 13:15

ஆமை சின்னம் சரிப்பட்டு வராதா? பிரபாகரன் சந்தோஷப்படுவாருல்ல.


Bala
பிப் 18, 2024 13:52

வாய்ப்பில்லை ராஜா


தீவிரவாதி சைமன்
பிப் 18, 2024 13:21

திராவிட கட்சிகள், அதன் பீ, சீ கட்சிகளை இந்த தேர்தலில் ஜெய்க்க வைக்க, அவர்களிடம் பெட்டி வாங்கிக்கொண்டு சைமன் வேண்டுமென தேர்தலில் நிற்பதை தடுக்க அவனே போடும் நாடகம் இது, இவனது சின்னம் பறிபோகும்வரை என்ன செய்துக் கொண்டிருந்தானாம்?! இவனே இவன் சின்னத்தை தேர்தல் கமிஷனிடம் போய் தாரை வார்த்திருக்கலாம், இப்ப இப்படி ஒரு பொய் சப்பைகட்டு கட்டுறான். 2026 ல் தமிழ் நாட்டில் பாஜக ஜெய்க்கும் அதை தடுக்க வேண்டுமானால் இவன் அப்போது ஜோசப் விஜயோடு சேர்ந்து களம் இறங்குவான், பாருங்க.


duruvasar
பிப் 18, 2024 12:14

உங்கள் தரப்பு வாதத்தை எடுத்து வையுங்கள். அதுதான் முறை. மற்றபடி தெருமுனையில் நின்று சத்தம் எழுப்புவதால் எந்த பயனும் இருக்காது.


Anantharaman Srinivasan
பிப் 18, 2024 09:06

நீதிமன்றம் சென்றும் சின்னம் கிடைக்வில்லையென்றால் கரும்புத்தோட்டம் முன்னால் விவசாயி நிற்பது போல் சின்னம் கொடுக்கலாம்..


ngopalsami
பிப் 18, 2024 08:22

நாதக பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதால் இவர்களுக்கு நன்மை ஒன்றுமில்லை. வெறுமனே வாக்குகள் பிரிக்கப்படும். இது திமுக விற்கு நல்ல அனுகூலம். சீமான் அவர்கள் நாடாளுமன்ற தேர்தலை தவிர்த்து சட்டமன்ற தேர்தலில் கவனம் செலுத்தி சில இடங்களை பிடித்தால் கட்சியின் வளர்ச்சி மக்களிடம் நன்மதிப்பை பெரும்.


Kasimani Baskaran
பிப் 18, 2024 06:22

பேசுவது மட்டும் புனிதர்கள் போல. செயல்பாடுகள் எல்லாம் யாரிடமாவது பெட்டி வாங்குவதிலேயே மும்மரமாக இருக்கும்..


Palanisamy Sekar
பிப் 18, 2024 06:14

சீமான் வீம்புக்கு இந்த பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது வீண் என்று புரியாத நிலையில் இருக்கின்றார். அவருக்கு சட்டமன்ற தேர்தல் மட்டும்தான் எல்லை. அதற்கு மேல் ஆசைப்பட்டால் அது திமுகவுக்கு மறைமுகமாக உதவுவது போல இருக்கும்.ஓட்டுக்களை பிரித்து திமுகவுக்கு சாதகம் செய்வார். பாராளுமன்ற தேர்தலில் வெற்றிபெறும் அளவுக்கு செல்வாக்கு இல்லை என்பதை அவரே உணர்ந்த நிலையில் அவர் தேசீய கட்சிக்கு ஆதரவு அளித்துவிட்டு போகலாம். இப்போ அவர் செய்வது தீயசக்திக்கு மறைமுகமான ஆதரவாகத்தான் இருக்கிறது. ஆனால் என் ஐ ஏ விசாரணைக்கு பின்னர் அடக்கி அடங்கிப்போய் இருக்கிறது நாதக. வலைத்தளங்களில் யாரையுமே காணவில்லை..ஒருவேளை வசமாய் சிக்கி கொண்டார்களோ..


Sathyam
பிப் 18, 2024 10:36

இவன் ஒரு அடிப்படை ஒரு கிறிஸ்துவ மிஷனரி கைக்கூலி இவன் திமுக போடற பிஸ்கட் எலும்பு துண்டு வாங்கிட்டு குவரா ஆளு இவர்க்கு அடிப்படை கொள்கை தமிழ்நாட்டை மிஷனரி கையில் குடுத்து நாட்டை பிரிக்கணும் அது தான் இவனோட விஷ எண்ணம் இவன் மட்டும் இல்ல இவன் மாதிரி நிறைய சொரியார் கும்பல் காட்சிகள் இருக்கு இவனை சீக்ரம் ஒழிகாட்டணும் இவன் ஒரு மகா தீய சக்தி


ராமகிருஷ்ணன்
பிப் 18, 2024 05:49

போட்றா மீட்டீங்கு தேர்தல் ஆணையம் முன்பு. கழுத்து நரம்புகள் புடைத்து வெடித்து, கையை தூக்கி கத்தி கதறுங்கடா. லூசுகளா. பயந்து போய் சின்னம் கொடுத்து விடுவார்கள்


Bala
பிப் 18, 2024 22:11

உங்கள் பதிவை படித்துவிட்டு என்னையறியாமல் வாய்விட்டு சிரித்துவிட்டேன் நண்பர் ராமகிருஷ்ணன் அவர்களே. சிரிப்பை அடக்க முடியவில்லை


தாமரை மலர்கிறது
பிப் 18, 2024 05:45

பணக்கட்டு சின்னம் கொடுத்தால், சீமான் சந்தோஷப்படுவார்.


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை